Wednesday, July 3, 2024

MUSIC TALKS - AADAATHA AATTAM ELLAM POTTAVANGA MANNUKKULLE PONA KADHAI UNAKKU THERIYUMAA ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா ?
நீ கொண்டு வந்ததென்ன ? நீ கொண்டு போவதென்ன ?
உண்மை என்ன உனக்கு புரியுமா ?
வாழ்க்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே !
வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே !
ஏன் ?  நீயும் நானும் நூறு வருஷம் இருப்பதில்ல பாரு

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா ?
நீ கொண்டு வந்ததென்ன ? நீ கொண்டு போவதென்ன ?
உண்மை என்ன உனக்கு புரியுமா ?

நித்தம் கோடி சுகங்கள் தேடி கண்கள் மூடி அலைகின்றோம்
பாவங்களை மேலும் மேலும் சேர்த்து கொண்டே போகின்றோம்
மனிதன் என்னும் வேடம் போட்டு மிருகமாக வாழ்கின்றோம்
தீர்ப்பு ஒன்று இருப்ப மறந்து தீமைகளை செய்கின்றோம்
காலம் மீண்டும் திரும்பாதே பாதை மாறி போகாதே
பூமி கொஞ்சம் குலுங்கினாலே நின்று போகும் ஆட்டமே !

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா ?
நீ கொண்டு வந்ததென்ன ? நீ கொண்டு போவதென்ன ?
உண்மை என்ன உனக்கு புரியுமா ?

கருவறைக்குள் தானாக கற்று கொண்ட சிறு ஆட்டம்
தொட்டிலுக்குள் சுகமாக தொடரும் ஆட்டமே,
பருவம் பூக்கும் நேரத்தில் காதல் செய்ய போராட்டம்
காதல் வந்த பின்னாலே போதை ஆட்டமே
பேருக்காக ஒரு ஆட்டம் காசுக்காக பல ஆட்டம்
எட்டு காலில் போகும் போது ஊரு போடும் ஆட்டமே

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா ?
நீ கொண்டு வந்ததென்ன ? நீ கொண்டு போவதென்ன ?
உண்மை என்ன உனக்கு புரியுமா ?
வாழ்க்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே !
வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே !
ஏன் ?  நீயும் நானும் நூறு வருஷம் இருப்பதில்ல பாரு

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா ?

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....