Friday, July 26, 2024

GENERAL TALKS - பிரபஞ்சத்தின் சக்தியாளரை கண்டிப்பாக பழிவாங்க வேண்டும் !


இங்கே எனக்கு என்ன கஷ்டமாக இருக்கிறது. இப்படி நான் கஷ்டப்பட காரணம் என்னவென்றால் ஒரு விடை தெரியாத வினாதான் ? எதுக்காக நான் சப்போர்ட் பண்ணுவார் என்று நினைக்கும் பிரபஞ்சத்தின் சக்தியாளர் என்னை இப்படி கேவலமாக நடத்தி தூக்கி எறிந்து நடத்த வேண்டும். நடப்பவை எல்லாமே மிகவும் தவறாக நடந்துகொண்டு இருக்கிறது. நம்பியவர்கள் எல்லோரும் என்னை தாக்குகிறார்கள். என்னுடைய வாழ்க்கை அவ்வளவுதான் என்று என்னை வெறுக்கிறார்கள். இவ்வளவு கஷ்டங்களை கொடுத்தால் நான் செத்துப்போய் விடுவேன் என்று தெரிந்தும் என்னை இப்படி ஏமாற்றுகிறார்கள். நம்பிக்கை கொடுத்து நம்ப செய்து பின்னாட்களில் துரு பிடித்த இரும்பு கத்தியால் முதுகில் குத்துகிறார்கள் என்றால் கண்டிப்பாக நான் கோபப்பட்டு இவர்களை தீர்த்துக்கட்டியே ஆகவேண்டும் ! கோபப்படாமல் பொறுமையோடு மன்னிப்பது என்பது மிகவும் முட்டாள்தனமான செயல்பாடு ஆகும். இத்தனை கஷ்டங்களையும் நான் பொறுத்துக்கொண்டு இருந்தது எதனால் என்று பிரபஞ்ச சக்தியாக இருக்கும் காலத்துக்கு புரியவில்லையென்று எனக்கு தோன்றுகிறது. நான் இவ்வளவு பொறுமையாக இருக்க காரணம் என்றாவது ஒருநாள் வாழ்க்கை மாறிவிடும் என்ற நம்பிக்கையில்தான் ஆனால் காலம் கடந்து வயது முதிர்ந்த நாட்கள் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது. வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணவில்லை. எல்லோருமே முக்கியமானவர்களாக இருந்தால் மட்டும்தான் இந்த உலகத்தின் கொடூரமான தாக்குதல்களில் இருந்து உயிரையாவது உள்ளங்கையில் பிடித்துக்கொண்டு தப்பிக்க முடியும் என்று தெரிந்துகொண்டு வேலையை பார்த்துக்கொண்டு சக்தியற்ற மக்கள் இருக்கிறார்கள் எனும்போது நான் மட்டுமே மாற்றங்களை உருவாக்குவார் என்று நம்பிக்கொண்டு இருந்தால் அதுவே பெரிய முட்டாள்தனம்தான். இதனை விடவும் கடினமான சூழ்நிலைகளை நான் சந்தித்து இருக்கிறேன். ஆனால் மனதுக்கு கஷ்டமாக இருப்பது அப்போது அந்த காலத்தில் என்னுடைய உயிரை காப்பாற்ற எனக்கு இருந்த சக்தியும் பணவசதியும் இப்போது இல்லை என்பதுதான். இது ஒருவிதமான நம்பிக்கை துரோக சதியாக இருக்கிறது. எதிர்காலத்தில் என்னுடைய சக்திகள் பிரபஞ்சத்தின் சக்தியாளரை விடவும் அதிகமாகப்போகிறது என்பதும் அதனால்தான் என்னால் வெற்றிகளை அடையமுடியாமல் காலம் என்னை தடுக்கிறது என்பதும்தான் என்னுடைய கணிப்பு. நடந்துகொண்டு இருக்கும் சம்பவங்களை நன்றாக ஆராய்ந்த பின்னால்தான் இத்தகைய கணிப்பை என்னால் கணிக்க முடிகிறது. இந்த பிரச்சனைகளுக்கு ஒரே ஒரு தீர்வானது நேருக்கு நேராக சண்டையிட்டு வலியை கொடுத்து தோற்கடித்து பழிவாங்குவதுதான் என்பதால் இனிமேல் கவனமாக இருக்க வேண்டும்‌. தொலைந்துபோன என்னுடைய கௌரவத்தையும் மரியாதையையும் நான்தான் மீட்டமைக்க வேண்டும். 

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....