Friday, July 26, 2024

GENERAL TALKS - சூப்பர் ஹீரோ படங்களுக்கு என்னதான் ஆச்சு ! - 1



இப்போது டிசி திரையுலக திரைப்படங்கள் கடையை சாத்திக்கொண்டு கிளம்பிவிட்டது. நிறைய நாட்களாக மார்வெல் படங்களோடு போட்டியில் இருந்தாலும் தரமான படங்களை கொடுத்தலும் கடைசியாக வெளிவந்த சஷாம் திரைப்படங்களோ அல்லது அக்வா மேன் திரைப்படங்களோ போதுமான அளவுக்கு பணம் சம்பாதித்து கொடுக்கவில்லையே ? மேலும் புதிய முயற்சியாக வெளியிடப்பட்ட ப்ளூ பீட்டில் என்ற திரைப்படம் அதுவும் ஒரு வகையில் நன்றாக இருந்தாலும் வசூல் சாதனை படைக்கவில்லையே ?  இங்கே துறையில் முன்னோடியாக இருக்கும் இவர்கள் எத்தனை வருடங்களாக படங்கள் வெளியிடப்பட்டாலும் ஜாக்ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக் திரைப்படத்தின் தரத்தினை இணைக்க முடியாததால் இந்தத் திரைப்பட வரிசை போதுமான ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் காலியானது என்றே சொல்லலாம். இருந்தாலும் மார்வெல் படங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை என்ன ? பெமினிசம் ! ஒரு அளவோடு இருக்க வேண்டும் என்று சொல்லாமல் இப்போது எல்லாம் படங்களில் இருக்கும் பெமினிசம் ஒரு வகையான விஷத்தன்மையான பெமினிசம் என்றே சொல்லலாம் கடைசியாக வெளிவந்த அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தில் அவெஞ்சர்ஸ் அடுத்த நொறுக்கப்பட்டு ஆதரவு இல்லாமல் கிடைக்கும்போது கேப்டன் மார்வெலின் பயங்கரமான சக்தி அட்டாக்களால் அவெஞ்சர்ஸ் அமைப்பே  பரிதாபகரமாக காப்பாற்றப்படும்படி காட்சிகளை அமைக்கப்பட்டு இருக்கும்போதே மனதுக்கு உறுத்தலாக இருந்தது ! இது இந்த ஒரு படத்துக்கு மட்டும்தானே என்று அப்போது கொடுக்கப்பட்ட இந்த மொக்கை காட்சியின் டாக்ஸிக் பெமினிசம் பெண்கள் ஆடியன்ஸ் மத்தியில் வரவேற்பை தான் அடைந்தது. இருந்தாலும் பிளாக் விடோ படத்தை தவிர்த்து பின்னால் வெளிவந்த வேறு எந்த படத்திலும் பெமினிசம் தான் காட்டிக் கொண்டிருக்கிறார்களே தவிர்த்து பொழுதுபோக்கு விஷயங்களில் கவனமே செலுத்தாமல் சலிப்பு தட்டி விடுகிறார்கள் ! இந்த பெமினிஷன் விஷயங்களில் ஒரு விதிவிலக்கான ஒரு வெப் சீரிஸ் என்றால் அதுதான் மிஸ் மார்வெல்‌ பிஸ்மார்களை பொறுத்த வரைக்கும் கதாநாயகியின் மற்றும் சப்போர்ட்டிங் கேரக்டர்களின் க்யூட்டான நடிப்பு அந்தத் தொடரை காப்பாற்றி விட்டது என்று சொல்லலாம். இருந்தாலும் மார்வெல் திரை உலகம் இன்னும் நிறைய விஷயங்களை இந்த டொக்ஸிக் ஃபேமினிஸத்துக்கு தாரைவார்த்துவிட்டது. 



No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....