Friday, July 26, 2024

GENERAL TALKS - மார்வெல் போலி ஃபேமினிசாத்தால் அடையும் பாதிப்பு !


மிஸ் மார்வெல் தொடரின் வெற்றிக்கான காரணம் அது நன்றாக கதைக்களம் கொடுத்தது மட்டுமல்ல. சிறப்பான எழுத்துத் திறனும் அந்த தொடருக்கான வெற்றியின் காரணமாக அமைந்தது. இந்த தொடரின் கதை மற்றும் பிளாக் விடோ படத்தின் கதை இவைகளை தவிர்த்து பின்னதாக கொடுக்கப்படும் இந்த மொக்கையான மார்வலின் பெமினிசம் பேசும் கதைகளில் கொஞ்சமும் எழுத்து திறன் என்று இருப்பதாக காணப்படுவதே இல்லை உதாரணத்துக்கு பிளாக் பாந்தர் வகாண்டா போரேவர் என்ற திரைப்படத்தை பாருங்களேன் மொத்தமாக மூன்றுக்கும் மேற்பட்ட பெண் கதாபாத்திரங்கள் இருந்தாலும் சக்திகளை வைத்துக்கொண்டு சண்டை போடுவதைத் தவிர்த்து கதை என்றும் கேரக்ட்டர் டெவலப்மென்ட் என்றும் பெரிதாக ஒன்றும் இல்லை.  இன்னொரு பக்கம் மார்வெல் திரையுலகத்தின் மிகப்பெரிய மொக்கை என்று இன்ஹியூமன்ஸ் என்ற ஒரு நெடுந்தொடரை  சொல்லலாம் என்றால் அதைவிட மொக்கையான விஷயம் தி மார்வெல்ஸ் என்ற வகையில் வெளியிடப்பட்ட ஒரு மொக்கையான திரைப்படம். இந்த படத்தை தியேட்டரில் பார்த்தால் தூங்கி விடுவார்கள். நிறைய திறன்மிக்க கதாநாயகர்களை வைத்துக் கொண்டு இவர்கள் ஒன்றுமே செய்யவில்லை பொம்மையைப் போல வெறும் பொம்மையை வைத்துக்கொண்டு குழந்தை விளையாடுவதை போல கதாநாயகர்களின் நடிப்பு திறன்களை வைத்துக்கொண்டு இயக்குனர் விளையாடி உள்ளார் இந்தப் படத்தை வெளியிட்ட இயக்குனர் ஒரு பெண் இயக்குனர் என்பதாலும் மேலும் பெண்களுக்கான உரிமைகள் இருக்கிறது என்று மனதுக்குள் கற்பனை பண்ணிக்கொண்டு மற்ற மார்வேல் படங்களை நான் பார்த்ததே இல்லை என்றும் குறிப்பாக அவெஞ்சர்ஸ் போன்ற திரைப்படங்களில் என்ன நடந்தது ஏது நடந்தது என்பதை பற்றி எல்லாம் எனக்கு கவலையே இல்லை என்றும் சொல்லி இருக்கிறார் இந்த இயக்குனர்.  நான் எழுதுகிறேன் இது ஒரு பெண் எழுதிய எழுத்து அதனால் இதை திரையில் வரவேண்டும் வந்தே ஆகவேண்டும் என்று புரொடியூசர் காசை நாசம் பண்ணியே காசு பார்த்த இயக்குனர் இவர்தான். இந்த தோல்விக்கு பின்னராகவாவது பேமினிசதை காட்டி ஓகே போடுவதை தவிர்த்து டெட்புல் மற்றும் வுல்வெரின் திரைப்படத்தை தொடர்ந்து இன்னும் நிறைய மார்வெல் படங்களை மொக்கை போடாத நல்ல படமாக வெளியிடுவார்கள் என்று நம்புகிறோம். 

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....