Friday, July 26, 2024

GENERAL TALKS - ADI LATCHAVATHIYE ENNAI ASATHURA RADHIYE RATCHASIYO DHEVATHAIYO RENDUM SERNDHA PENNO - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


லெஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே 
லெஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே 
இராட்சஸியோ தேவதையோ இரண்டும் சேர்ந்த பெண்ணோ 
அடை மழையோ அனல் வெயிலோ ரெண்டும் சேர்ந்த கண்ணோ
தொட்டவுடன் ஓடுறீயே தொட்டவுடன் ஓடுறீயே
தொட்டாச்சிணுங்கி பெண்தானோ தொட்டாச்சிணுங்கி பெண்தானோ
அழகினாலே அடிமையாக்கும் ராஜ ராஜ ராணி !
அடி லெஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே 
லெஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே 

பூவரச இலையிலே பீப்பீ செஞ்சு ஊதினோம்
பள்ளிக்கூட பாடம் மறந்து பட்டாம்பூச்சி தேடினோம்
தண்ணிப்பாம்பு வரப்பில் வர தலை தெறிக்க ஓடினோம்
பனங்காயின் வண்டியில் பசு மாட்டு தொழுவத்தை 
சுற்றி வந்து பம்பாய்க்கு போனதாக சொல்லினோம் 
அடடா அந்நாள் வசந்தம் அதுதானா வசந்தம் 
மீண்டும் அந்த காலம் வந்து மழலையாக மாற்றுமா

அடி லெஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே 
லெஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே 

காவேரி நதியிலே தூண்டில்கள் போட்டதும்
கண்ணே உன் தூண்டில் முள்ளில் குட்டி தவளை விழுந்ததும் 
கை கொட்டி கேலி செய்த ஞாபகங்கள் மறக்குமா

கட்டவண்டி மையினால் கட்ட பொம்மன் மீசையை 
கண்ணே நீ வரைந்து விட்டு ராஜராஜன் என்றதும்
அடடா அந்நாள் வசந்தம் அதுதானா வசந்தம் 
காலம் கடந்து போன பின்னும் காதல் கடந்து போகுமா !


லெஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே 
லெஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே 
இராட்சஸியோ தேவதையோ இரண்டும் சேர்ந்த பெண்ணோ 
அடை மழையோ அனல் வெயிலோ ரெண்டும் சேர்ந்த கண்ணோ
தொட்டவுடன் ஓடுறீயே தொட்டவுடன் ஓடுறீயே
தொட்டாச்சிணுங்கி பெண்தானோ தொட்டாச்சிணுங்கி பெண்தானோ
அழகினாலே அடிமையாக்கும் ராஜ ராஜ ராணி !
லெஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே 
லெஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே 

No comments:

Post a Comment

GENERAL TALKS - நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கலப்பு உலோகங்கள் !

  1. Steel (Iron + Carbon) 2. Stainless Steel (Iron + Chromium + Nickel) 3. Bronze (Copper + Tin) 4. Brass (Copper + Zinc) 5. Sterling Silve...