Sunday, July 7, 2024

GENERAL TALKS - கணிக்க முடியாத பேராபத்தான ஒரு அனுபவ அட்வென்சர் !


இந்த வாழ்க்கையுடைய உண்மையான பேராபத்து அதனுடைய ரேன்டம்னேஸ்தான், ரேண்டம்னஸ் என்ற வார்த்தையை எப்படி தமிழில் மொழிபெயர்க்கவென்று எனக்கு தெரியவில்லை. இணையத்தை கன்செல்ட் செய்யும்போது சீரற்ற அல்லது குறிப்பற்ற என்ற வார்த்தைகள் இடம்பெறுவதால் நான் குறிப்பற்ற சம்பவங்கள் என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறேன். நாம் நன்றாகவே காரை ஒட்டினாலும் ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் ஆக்சிடென்ட்டாகிறது அந்த ஆக்சிடென்ட்டில் நாம் டிக்கெட் வாங்க மேலே செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்களேன் இது ஒரு குறிப்பற்ற சம்பவம் , தற்செயலாக நடக்கும் சம்பவம் , உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் ஒரு பட்டாம்பூச்சி ஒரு திசையில் பறந்துகொண்டு இருக்கிறது , இன்னொரு பட்டாம்பூச்சி இன்னொரு திசையில் பறந்துகொண்டு இருக்கிறது இவைகள் தனித்தனியாக நடக்கக்கூடிய சம்பவங்கள் , இவைகளில் பேட்டர்ன் எனப்படும் வரிசை அல்லது ஒழுங்கு என்று எதுவுமே இல்லை. இரண்டு தனித்தனியான எண்களுக்கு என்று எந்த சம்மந்தமும் இல்லை , ரேண்டம்மான எண்கள் இவ்வாறே இருக்கும் : 437, 682992, 6 ,7837010 , 782711 , 1226 , 88 ,682581903. 561535 , 66353689 , 1243215 . 67533278 , 51275521 . 498931 , 42421 , 87707923572179007`. 1 . 42718 , 891582 , 2521 . 9999 . 57281 . 22221 என்று சம்மந்தம் இல்லாத எண்கள் இந்த குறிப்பற்ற தேர்ந்தெடுத்தலில் வந்து விழுகிறது. வாழ்க்கையில் நான் மட்டுமே அல்லாது எல்லோருமே சந்திக்கக்கூடிய ஒரு பெரிய பிரச்சனை இப்படி குறிப்பற்ற எதிர்காலத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் நமக்கான நல்ல விஷயங்கள் திரும்ப திரும்ப நடக்குமாறு வாழ்க்கையை மாற்றி அவைகளின் மூலமாக வாழ்க்கையினை வாழும் நூறு வருடங்களும் மன நிறைவாக தேடிய பொருட்களை அடைந்து வாழ முயற்சிப்பதுதான். வாழ்க்கையை வாழ்க்கையின் கட்டுப்பாட்டில் விட்டால் ஒரு ஒரு நாளும் சீரற்ற முறையில் சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கும். இந்த ரேண்டம்மான விஷயங்களில் எத்தனை விஷயங்கள் நடந்தாலும் நான் இந்த பிரபஞ்சத்தின் சக்தியாளரால் நிறைய முறை தோற்கடிக்கப்பட்டாலும் என்னை நான் எப்படியாவது ஜெயிக்க வைத்துவிடுவேன் என்று நம்புகிறேன். என்னுடைய நம்பிக்கைதான் என்னுடைய வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு இருக்கிறது. சராசரிக்கு மேலே யோசிப்பது சாதாரண விஷயம் இல்லை. சரசரிக்கு மேலே யோசிக்க வேண்டும் என்றால் நிறையவே கஷ்டப்படத்தான் வேண்டும். சந்தோஷமாக இருந்துகொண்டே ஜெயித்துவிட முடியாது. அடுத்தவர்களை கஷ்டப்படுத்த கற்றுக்கொள்வதும் ஒரு வகையான அனுபவம்தான். நிறைய வருடங்களே ஆனாலும் இந்த பிரச்சனையை என்னால் சரிசெய்ய முடியாவில்லை ! ஒரு வேளை சரி செய்ய முடிந்தால் நான் கண்டிப்பாக இந்த வலைப்பூவில் அப்டேட் பண்ணுவேன் ! மிஸ் பண்ணாமல் சந்தாவை கொடுத்துவிடுங்கள் !



No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....