Sunday, July 28, 2024

GENERAL TALKS - விதி எப்போதும் நேர்மையற்ற ஆட்களை சப்போர்ட் பண்ணுகிறதா ?


இன்றைக்கு தேதி வரைக்கும் விதியுடைய மிகப்பெரிய ஆசை என்னவென்றால் நான் இந்த போராட்டத்தில் தோற்று போய் பின்வாங்கியே ஆக வேண்டும் என்பதுதான்.இருந்தாலுமே விதி உடைய இந்த மிகப்பெரிய பேராசை கண்டிப்பாக நிறைவேறாது. இதுவரைக்கும் பட்ட கஷ்டங்களுக்கான கோபம் கண்டிப்பாக என்னுள்ளே இருக்கிறது இந்த கஷ்டங்களுக்கான கோபம் தான் எனக்கு தேவையான வெற்றியை ஈட்டி தரும் என்று நம்புகிறேன். இந்த உலகத்தில் கொஞ்சம் பேருக்கு வெற்றியடைவதற்கான தகுதியே இருக்காது ஆனால் அவர்கள் எல்லோருமே வெற்றி கிடைப்பதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் விதியின் நண்பர்களாக இருப்பார்கள். இவ்வாறு வெற்றியடைபவர்களை வைத்துதான் கஷ்டப்படுபவர்களை இன்னும் அதிகமாக கஷ்டப்பட வைக்கிறது இந்த பொல்லாத விதியானது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ?. இத்தகைய மோசமான செயல்களை நாம் எப்படியேனும் தடுத்தாகவே வேண்டும். இன்றைக்கு தேதிக்கு கார்ப்பரேட் கம்பெனிகளையே எடுத்துக் கொள்ளுங்களேன். மக்களுடைய சராசரி பிரச்சனைகளை இன்னும் அதிகப்படுத்த கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களுடைய லாப நோக்கத்துக்காக மட்டும் யோசித்து பணத்துக்கு மட்டுமே ஆசைப்பட்டு இதுவரைக்கும் குறைவான பணத்துக்கே கஷ்டப்படும் மக்களை இன்னும் பணத்துக்கு கஷ்டப்படும் மக்களாக மாற்றி அவர்களுடைய கஷ்டங்களில் இவர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள். இது ஒரு வகை கலாச்சாரம் என்றால் இதே மாதிரியான கலாச்சாரத்தை தான் எல்லோருமே ஃபாலோ பண்ண நினைக்கிறார்கள். இந்த வகையில் இன்றைய கூட ஒரு செய்தியை கேள்விப்பட்டேன். ஒரு முக்கியமான பாடப்பிரிவிலிருந்து அம்பேத்கர் பண்ணிய நல்ல விஷயங்கள், கடந்த காலத்தில் நடந்த ஜாதி கொடுமைகள் மேலும் அவைகளில் இருந்து மக்கள் எப்படி மீண்டு வந்தார்கள் என்ற வரலாறு குறிப்புகள் , எப்படி மக்களுக்குள் ஒற்றுமையை கொண்டு வருதற்காக பெரிய மனிதர்கள் போராடினார்கள், இந்தியாவில் இருக்கும் நிறைய மொழிகள் உடைய கலாச்சாரங்கள், மதங்களுக்குள்ளே நிலவுகின்ற ஒற்றுமை, அனைத்து மக்களையும் சமாதானமாக பாவிக்கும் நம்முடைய நாட்டின் இறையாண்மை கொள்கை, என்று நிறைய விஷயங்களை எடுத்து விட்டு சமஸ்கிருத சோகங்களையும் (மன்னிக்கவும் சுலோகங்களையும்) இல்லாத சரஸ்வதி நதியையும் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், திராவிடர்கள் தான் வந்தேறிகள் என்றும் ஆரியர்கள் தான் ஆட்சியில் காலாகாலமாக இருந்தவர்கள் என்றும் குழந்தைகளுக்கு பொய்யாக சொல்லிக் கொடுக்கும் நோக்கத்தோடு பாடப்புத்தகங்களில் கூட மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரியான கேவலமான வேலைகள் பண்ணும் ஆட்களுக்கு ஆதரவாக விதி இறங்குவதால்தான் விதியை யாராலும் அவ்வளவாக ஜெயிக்க முடியவில்லை. இந்த விஷயங்கள் அனைத்துக்கும் பழி வாங்கியே ஆக வேண்டும். இந்த உலகத்தின் அனைத்து குற்றங்களும் தடுக்கப்பட வேண்டும் இதுதான் என்னுடைய ஆசை. 

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....