Friday, July 26, 2024

GENERAL TALKS - பிரிவினை ஆர்ப்பாட்டமும் அவர்களின் பிற்போக்கு புத்தியும் !


சமீபத்தில் இணையத்தை அலசும்போது அமெரிக்க நாட்டின் கருப்பு இன மக்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதிகளை குறித்த நிறைய காணொளிகளை என்னால் பார்க்க முடிந்தது. இன்று வரைக்கும் கூட இந்த நிறைவேறி பிடித்த வெள்ளை நிறத்து மக்கள் கருப்பு இனத்து மக்களை இப்படி உள்மனதில் இருந்து நிரந்தரமாக வெறுக்கிறார்களா என்று வருத்தமாக உள்ளது. சாதி மதம், பேதம் இனம் என்று நிறைய விஷயங்களில் நம்முடைய மனிதர்கள் அடுத்தவர்களையும் பிரித்துக் கொண்டே இருக்கிறார்கள். பழிவாங்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு ஒரு முடிவே இல்லை என்றும் வெறுப்பு எப்போதுமே நீக்கப்பட வேண்டும் விருப்பம் இருந்து கொண்டே இருந்தால் அந்த வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாய் கொண்டே இருக்கும் . இந்த குறும்படங்களின் வழியாக கருப்பு இன மக்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை  புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு கருப்பு இன இளைஞர் அவருக்காக ஒரு புதிய பெரிய பட்ஜெட் காரை சொந்த காசை போட்டு வாங்குகிறார் ஆனால் அங்கு இருக்கும் வெள்ளை நிற சேல்ஸ்மேன் அவர் அங்கே அந்த காரை வாங்கி விட்டார் என்று அவருக்கு தெரியப்படுத்தி புரிய வைக்கும் முன்னரே அவரைப் பேச விடாமல் தடுத்து அந்த கார் வாங்கிய மனிதரை கருப்பின திருடன் என்று சொல்லி அவமானப்படுத்துகிறான். ஒரே கருப்பின தொழிலதிபர் பெண்மணி ரெஸ்டாரன்ட்டின் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுகிறாள். மேலும் சாப்பாடுகளை பார்சல் வாங்கவும் அனுமதி மறுத்தப்படுகிறாள். கடைசியாக பார்சல் வாங்கிய பின்னாலும் பார்சலுக்கான பணத்தை கொடுத்த பின்னாலும் அந்த பணத்தை அவள் கொடுக்கவே இல்லை என்றும் இரவு சாப்பாட்டுக்கு ஹோட்டல் சாப்பாட்டை திருடி சென்று விட்டாள் என்றும் அவள் மீது பொய் குற்றம் சுமத்தி குற்றவாளி என்று  பட்டம் கட்டி சிறையில் தள்ளப் பார்க்கிறார்கள். மேலும் அவளை ஒரு தனி அறையில் அடைத்து அவளுடைய ஹான்ட் பேக் பையில் ஹோட்டலில் டேபிள்லில் இருக்கும் ஸ்பூன்களை போட்டு இவைகளை இவள்தான் திருடினாள் என்றும் பட்டம் கட்ட பார்க்கிறார்கள். வெள்ளை இனத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி கருப்பு இனத்தை சேர்ந்த இளைஞரை காரணமே இல்லாமல் கண்மூடித்தனமாக தாறுமாறாக தாக்குகிறார் அந்த காவல்துறை அதிகாரியோடு வந்த இன்னும் மூணு வெள்ளை நிறவெறி நிறைந்த அதிகாரிகளும்  அந்த இளைஞரின் கைகளை பின்னால் கட்டி வைத்து அவரை அரெஸ்ட் செய்து செய்யாத தப்புக்கு சிறையில் அடைக்க பார்க்கிறார்கள். மிகவும் சிறப்பாக தனியார் நிறுவனத்திற்கு ப்ராஜெக்ட் களை பண்ணிக்கொண்டு இருந்தாலும் கருப்பு இனத்தை சேர்ந்த அந்த இளைஞர் வெள்ளை இனத்தை சேர்ந்த மேனேஜரால் மிகவும் தவறாக நடத்தப்படுகிறார் மேலும் அவரை வேலையை விட்டு அனுப்பி விடுவேன் என்று மிரட்டவும் செய்கிறார் இந்த வெள்ளை நிறத்தை மேனேஜர் இப்படி எல்லாம் நிறைவேறிக்கு எதிரான நிறைய குறும்படங்களை என்னால் பார்க்க முடிந்தது. ஜப்பான் போடுற வாகனங்களில் கஷ்டப்படும் போது ஒருவருக்கொருவர் எந்த விதமான பாரபட்சமும் பேதமும் பார்க்காமல் சேர்ந்து முன்னேறுவதால் தான் உடைய உடைய அந்த நாடு மறுபடியும் மறுபடியும் இரும்பு சுவர் கொண்டு எழுந்து நிற்கிறது இதுவே அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் அது வெறுப்பை மட்டுமே கொட்டும் நாடு ஆப்பிரிக்க பழங்குடியினர் நிலத்தை ஆட்டைய போட்டு தான் அந்த நாட்டையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இவர்களுடைய நிறவெறி இன்னும் எத்தனை பேரை தான் காவாங்க போகிறதோ என்பதுதான் இப்போது என்னுடைய கேள்வி ! 



No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....