1. ஜாதி என்பது நம் சமூகத்தின் உடலில் ஒட்டிக்கிடக்கும் பிடிவாதமான அழுக்கு, இந்த குப்பையை பணத்துக்காக பயன்படுத்தும் ஆட்கள் தங்கள் குறுகிய மனப்பான்மையாலும் அகங்காரத்தாலும் எளிய மக்கள் முன்னேற்றத்தை விஷப்படுத்துகிறவர்கள்.
2. அவர்கள் காலாவதியான படிநிலைகளை தெய்வக் கட்டளைகளாகப் பிடித்துக்கொள்கிறார்கள்; ஆனால் உண்மையில், அவை அறிவிலி, பயம், மற்றும் தவறான பெருமை ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட மனிதக் கட்டுப்பாடுகள் மட்டுமே.
3. இவர்கள் “பாரம்பரியம்” காக்கிறோம் என்று நடிக்கிறார்கள், ஆனால் அவர்கள் உண்மையில் காக்கிறதென்பது தங்களின் உடைய பலவீனமான போலியான சாதி அகங்காரம் மட்டுமே—சமத்துவம் அவர்கள் கற்பனையான தீண்டத்தகாத விதிகளால் உண்டான காசு பார்க்கும் உயர்வை பறித்துவிடும் என்பதால் அதற்குப் பயப்படுகிறார்கள்.
4, பிறப்பால் மனிதர்களை பிரிப்பது என்பது ஒழுக்க ரீதியாகச் சிதைந்ததே தவிர பெருமை அல்ல, அறிவு ரீதியாகவும் சோம்பேறித்தனமானதே தங்களைத் தகுதி, கருணை, அல்லது திறமை மூலம் வரையறுக்க முடியாததால், மிகச் சுலபமான, மிகவும் அவமானகரமான அடையாளத்தைத் தாங்குகிறார்கள்.
5. சமூக அக்கறை உள்ள புதிய தலைமுறை உலகம் ஒற்றுமைக்காக பாடுபடும் நேரத்தில், அவர்கள் பின்னால் இழுக்கும் பழைய தலைமுறையின் இந்த நாராச சத்தமுள்ள பிடிவாதிகள்; அவர்கள் மனிதாபிமானமற்ற, அடிப்படை ரீதியாக பழமையான தீண்டாமை சிந்தனையைப் பிடித்துக் கொண்டு இருப்பதற்காக மதிப்புக்குரியவர்கள் அல்ல - வெட்கத்திற்குரியவர்கள்.
6. ஒவ்வொரு முறை ஜாதி மூலமாக தங்கள் பாகுபாட்டை நியாயப்படுத்த வாயைத் திறக்கும்போதும், அவர்கள் சிந்தனை எவ்வளவு அடர்த்தியற்றதும் பாதுகாப்பற்றதுமானது என்பது வெளிப்படையாக தெரிகிறது.
7. அவர்கள் தங்கள் வெறுப்பை கேவலமான போலி பக்தியில் சுற்றி, மதத்தையும் கலாச்சாரத்தையும் சமூக சமநிலையின் புறக்கணிப்பு ஆயுதங்களாக மாற்றுகிறார்கள்
8. எவ்விதப் புனித நூலும் கொடுமையையும் பாகுபாட்டையும் ஆசீர்வதிக்கவில்லை என்பதை மறந்துவிடுகிறார்கள். அவர்கள் தங்களை ஒரு இடிந்து வரும் சுவரின் தானாக நியமிக்கப்பட்ட காவலர்களாகக் கருதி, கொஞ்சமாவது அறிவோடு பேசும் பிறரை வெளியே தள்ளத் துடிக்கிறார்கள்;
9. ஆனால் அந்தச் சுவருக்கு அப்பால் இன்னொரு புத்திசாலிகளின் நல்ல மக்களின் உலகம் அவர்களில்லாமல் செழித்து வளர்கிறது. இவர்களுக்கு தெரியும் சாதி வெறி கொண்ட அவர்கள் சொற்கள் நிறைய பிளவுகளை உருவாக்குகின்றன,
10. சாதி வெறியோடு இருக்கும் அவர்கள் பண்ணும் செயல்கள் ஒரு சமூகத்தை காயப்படுத்துகின்றன, அவர்களின் மனப்பான்மை ஒரு நோயைப் போல பரவி முறையாக கட்டுப்படுத்தப்படாவிட்டால் அடுத்த தலைமுறையையும் பாதிக்கும்.
11. உண்மை மிக எளிது—ஒரு மனிதனின் மதிப்பு என்பது அவரது குடும்பப்பெயர், பிறப்பு அல்லது சமூகத்தால் அளவிடப்படுவதில்லை; அது அவரது செயல்களின் நேர்மையாலும், இதயத்தின் கருணையாலும் அளவிடப்படுகிறது. ஜாதியை பேசும் போலி பணத்தை சம்பாதிக்கும் ஆட்கள் அந்தப் பாடத்தை கற்றுக்கொள்ளும் வரை, அவர்கள் வெட்ககரமான கடந்தகாலத்தின் இரக்கத்திற்குரிய நினைவுச்சின்னங்களாகவே இருந்து, எதிர்காலம் அவர்களை விட்டு முன்னேறிக்கொண்டிருக்கும்போது தங்களின் தொடர்பின்மையை சத்தமாகப் பிரசாரம் செய்யத் தவறமாட்டார்கள்.
3 கருத்துகள்:
Jaathi Paakara Aalungala Evanaalum Maatha Mudiaathu. Local Aalungala Kaikulla Pottutu Oru Aaatam Aaduvaanunga Paaru.
“இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்” என்ற ஹாலிவுட் படத்தில் ஆல்டோ கதாபாத்திரமான பிராட் பிட்டோடு கொஞ்சம் பேர் சேர்ந்து கொண்டு யூதர்களைக் கொன்று குவித்த ஆரிய முட்டாப்பயல்களான ஜெர்மானியர்களைப் பிடித்துத் துவைத்து, அவர்களது நெற்றியில் ரத்தம் வழிய சுவஸ்திக் குறிகளை இட்டு அனுப்பி வைப்பார்கள். படத்தின் இறுதியில் கோசான் ஹிட்லர், கோமாளி கோயபல்ஸ் மற்றும் இன்னபிற இடிவிழுந்தான்களை ஒரு தியேட்டரில் வைத்து உயிரோடு சொக்கப் பனை கொளுத்துவதோடு படம் முடிவடையும்.
காந்தி தண்டி யாத்திரைக்குச் செல்லும் வழியில் காந்தியின் தடியைப் பிடித்து காந்தியை வழிநடத்தினேன்! விவிலிய ஆசான் மோசே பத்து கட்டளைகளை வாங்க சீனாய் மலைக்குச் செல்லும்போது வழிநெடுகிலும் விளக்குத் தூண்களை அமைத்தது நான்தான்! நிலாவில் ஆர்ம்ஸ்ட்ராங்க் இறங்குகையில் ஏணி வைத்துக் கொடுத்தது நான்தான்! நாளந்தா பல்கலைக் கழகத்தில் கணினி ஆசிரியராகச் சில காலம் பணிபுரிந்தேன்! திருவள்ளுவர் திருக்குறளை எழுதுகையில் எழுத்தாணியை எண்ணையில் ஊறவைத்து துருவை அகற்றியது நான்தான்! ஆதாமூக்கும் ஏவாளுக்கும் சண்டை வந்த போது அவர்களின் உறவுக்குப் பாலம் அமைத்துக் கொடுத்தது நான்தான்! என்ற ரேஞ்சில் கப்சாக்களை அள்ளிவிடும் ஆப்கானிஸ்தான் பிரதமர் மொரேந்திர நோண்டிக்கு ஆதரவாக பாஸ்டர் ஒருவர் பிரச்சாரம் செய்தார்.
“சபையோரே! கூ.பா.ஜா வுக்கு ஓட்டுப் போட்டால்தான் நம்முடைய தேவனின் ஆலயங்கள் காப்பாற்றப் படும்! ஆகவே உங்கள் கர்த்தருக்குப் பிரியமான வாக்குகளை அல்லி மலரின் அக்கா சின்னத்தில் குத்துமாறு கடவுளின் ராஜியத்தில் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்!”
சபையோர் எத்தகைய விடாக்கண்டன்கள் என்பது அவருக்கும் தெரியும்! ஆலயத்தை மூடினால் காணிக்கை போடுபவருக்கு நஷ்டமா? காணிக்கை வாங்குகிறவருக்கு நஷ்டமா? மயிரே போச்சி மாணிக்கம்!
இவ்விடத்தில் கிறிஸ்தவர்கள் குறித்த ஒரு தெளிவான புகைப்படம் தேவைப்படுகிறது. இங்கே கிறிஸ்தவர்கள் என்போர் யார்? அவர்கள் எதற்காக கிறிஸ்தவத்துக்குள் போனார்கள்? இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பாக அடிமைப் பட்டவர்கள் யார் யார்? அடிமைபடுத்தினவர்கள் யார் யார்? எதற்காக அடிமைப் படுத்தினார்கள்? தாங்கள் எங்கிருந்து இவ்விடத்திற்கு வந்தோம் என்பதே கிறிஸ்தவர்களுக்கு மறந்துபோய் விட்டது.
தாங்கள் ஒரு கிழித்துப் போடப்பட்ட தாத்தனின் எள்ளுப்பேரன்கள் என்பதை மறந்த கிறிஸ்தவர்கள்தான் இங்கே அதிகம். எந்த சர்ச்சிக்குப் போகிறீர்கள்? என்று கேட்டார்களென்றால் அவர்கள் உங்கள் ஜாதியைக் கேட்கிறார்கள் என்று அர்த்தம். கிறிஸ்தவர்களிடம் ஒரு புரட்சியின் சிங்கம் இப்படிக் கேட்பதாக எடுத்துக் கொள்வோம்,
விப்ளவ சிம்ஹம்: “கிறிஸ்தவத்தில் ஜாதி எங்கிருக்கிறது?”
கிருத்துவ ஆத்துமா: “பழைய ஏற்பாட்டுல கோத்திரங்கள் இருக்குல்லா?”
“பழைய ஏற்பாட்டில் எங்கே கோத்திரங்கள் இருக்கிறது?
“இந்த எபேசியரு, பிலிப்பியரு, இஸ்ரவேலரு, தெசலோனிக்கேயருன்னி இரிக்கியானுவல்லா?”
“அவர்கள் அந்தந்த நாட்டைச் சேர்ந்தவர்களல்லவா? அதில் ஜாதி எங்கிருக்கிறது?”
“யாம் நா மட்டும் என்ன பாகிஸ்தாங்காரனா?”
“அதைத்தான் நானும் கேட்கிறேன் மூதேவி? நீ என்ன பெத்லகேம் நகரத்து மாட்டுத் தொழுவத்திலா பிறந்தாய்?”
“இல்ல நா இந்தியாலல்லா பொறந்தைய்ன்?”
“அப்போ நீ ஒரு இந்தியந்தானே?”
“இந்தியம்தாய்ன்! ஆனா கிஸ்டீனு?”
“சரி இப்போ சொல்லுங்கள்! நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்?”
“கிஷ்டியாம்னு சொல்லியாச்சிலாவே?”
“கிறிஸ்தவத்தில் ஜாதி இருக்கிறதா?”
“இல்லாமலா சொல்லுதாவ? யேசு கிறிஸ்துவே ஆசாரிதான?”
“அவரை யூதர் என்றுதான் சொல்கிறார்கள்? அவர் செய்த வேலைதான் தச்சுத் தொழில்!”
“அதெல்லாய்ன் எனக்கு அறியாது! எங்க பாஸ்டறு அப்டித்தாய்ன் செல்லியிரிக்கினும்?”
இப்படித்தான் கிழிந்து கிடக்கிறது இந்தியாவில் கிறிஸ்தவம். நெற்றியில் பொட்டு வைத்த கிறிஸ்து, கையில் சூலம் தரித்த கிறிஸ்து, மயில் காவடியில் யேசு, காவிக் குறியிட்ட ஏசு என பல ரூபங்களில் இந்தியாவில் இயேசு கிறிஸ்துவை மீண்டும் மீண்டும் இங்குள்ள கிறிஸ்தவர்கள் சிலுவையில் அறைகிறார்கள். விவிலிய காலத்தில் வாழ்ந்த அத்தனை முட்டாள்களின் மத்தியில் சமத்துவம் பேசிய ஒரே மனிதர் காம்ரெட் இயேசுகிறிஸ்துதான்.
உருவத்தை வழிபடாதீர்கள் என்றார். அவருக்கே சிலைவடித்து மண்டியிட்டு கண்ணீர் வடித்தார்கள் கிறீஸ்’தவறு’கள். ஆலயத்தை வியாபாரக் கூடமாக்காதே என்று தடி கொண்டு சுழன்றடித்தார் இயேசு. இன்று கிறிஸ்தவம் மட்டுமே கோடிகள் கொழிக்கும் தொழிலாய் வளர்ந்து நிற்கிறது.
ஆலயங்கள் அப்பங்களையும், கொலைப் பிராயச்சித்தங்களையும், ரட்சிப்பையும், பரலோகக் கதவுகளின் சாவிகளை விற்பனை செய்யும் சூப்பர் மார்க்கெட்களாகிப் போனதுதான் கிறிஸ்தவர்கள் செய்த ஊழியம். மற்ற மதங்கள் அனைத்தும் இதற்கு சகோதரர்கள்தாம். எவனும் சளைத்தவனில்லை.
கிறிஸ்தவத்தில் இருக்கும் சாதி வெறி இங்கே வேறு எந்த மதத்திலும் கிடையாது. ஒரு சாதிக்காரனின் ஆலயத்தை பெரும்பான்மைச் சாதிச் சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக அபகரித்து முழுங்கத் துவங்கியதில் இங்கு செத்துப் போனது கிறிஸ்தவம்.
இந்துக்களாய் ஒன்று திரள்வோம்! என்று சொல்லிக் கொண்டு சாதியாய்ப் பிரிவார்கள்! நீ வேறு! நான் வேறு! என்று நெஞ்சி முதல் குஞ்சாமணி வரைக்கும் கோடு பிரித்து வர்ணம் பூசிக்கொள்ளும் வானரங்களுக்கு அறிவு என்பது குதத்தில் கூட கிடையாது!
இசுலாமில் சாதி கிடையாது என்று சொல்லிக்கொண்டு இரண்டு மூன்று பிரிவுகளாய்ப் பிரிந்து நின்று வர்க்கபேதமும், நிறபேதமும், சாதிபேதமும் பேசுவார்கள். கிறிஸ்தவனான ஆபிரகாமின் வேலைக்காரி ஆகாருக்குப் பிறந்த இஸ்மவேலின் சந்ததிதான் இசுலாம் என்று சொல்கிறார்கள். மதத்தின் பேரால் இவர்கள் போடுகிற வெடிகள் வேறு காதுகளை அடைக்கிறது. மதம் பிடித்தவர்களுக்கு மூளை என்பது முட்டியில் கூட இல்லை.
கிறிஸ்தவம், இசுலாம், இந்து ஆகிய மதங்கள் மூன்றும் மத்திய தரைக்கடல் நாடுகளிலிருந்து உயிர்தப்பி அல்லது கொள்ளையடிக்க வந்த திருட்டுப் பயல்களால்தான் பாரத நாட்டுக்கு வந்தது. முட்டாள்கள் அதை பற்றிக் கொண்டு தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று கூவிக் கொண்டேயிருக்கிறார்கள்.
மதம் முக்கியம் என்று சொல்லிக்கொண்டே உங்கள் குரல்வளையை அறுத்திருக்கிறார்கள். உங்களுக்குக் கொஞ்சமும் சொரணையில்லை. உங்கள் குடலை உருவி அம்பானிக்கும் அதானிக்கும் மாலையாய் அணிவித்திருக்கிறார்கள். உங்களுக்குக் கொஞ்சமும் வெட்கமில்லை.
பிரச்சார மைக்கில் பேசும் சூசைகளுக்கு மண்டையில் மயிரில்லை! கூடவே திரியும் கோம்பையன்களுக்கு தோலில் சொரணையில்லை. எவன் ஆட்சிக்கு வந்தாலும் நீங்கள் உழைத்தால்தான் உங்களுக்குச் சோறு! எந்த மதமோ, மத நூலோ மனிதர்களைக் காப்பாற்றாது. அரசியல் அமைப்புச் சட்டமும், சட்டப் புத்தகமும்தான் மனிதர்களைக் காப்பாற்றும்! மதம் முட்டாள்களை மட்டுமே உருவாக்கும்! மதங்களை மயிரென மதியுங்கள்!
காலம் காலமாக இந்த பூமி முட்டாள்களால்தான் ஆளப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் ஆகப் பெரிய சோகம். கடவுளைப் படைத்தது சேப்பியன்களின் கரும்புழை! சேப்பியன்சைப் படைத்தது இயற்கையின் பெரும்பிழை!
கருத்துரையிடுக