வியாழன், 1 ஜனவரி, 2026

DREAMTALKS - EPISODE - 5 - களமும் கடினமான வேலைகளும் !

 


எப்போதுமே நம்ம வாழ்க்கையில் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள மறுக்கிறோம் ! சராசரியான பலமோ பணமோ திறன்களோ எதையும் சாதிக்க முடியாது, உலகம் அப்டேட் ஆகும்போது மக்கள் அப்டேட் ஆகிறார்கள், எந்த ஒரு தொழில் உலகத்தில் போட்டியும் பொறாமையும் நிறைந்ததுதான் இருக்கும், நடு ரோட்டில் நின்று இந்த சாதனையை செய்ய உலகம் கொடுக்கும் கஷ்டத்தை குறைத்துக்கொள்ளுங்கள் என்று இந்த மொத்த உலக மக்களிடமும் கெஞ்சினாலும் எந்த மாற்றமும் வராது, நாம் செய்யவேண்டிய உழைப்பு அதிகமாக இருக்கிறது. இதனை எதனால் புரிந்துகொள்ள மறுக்கிறோம். காலத்தை பொறுத்து வேலையை தள்ளிப்போடுகிறோம். நம்ம மனபோராட்டம்தான் இவைகளுக்கு காரணம். மன  போராட்டங்களில் பல வகை இருக்கிறது, இந்த வகை என்பது வேலை பாரத்துக்கான மன போராட்டம். உதாரணத்துக்கு ஒரு எடையை இன்னொரு இடத்துக்கு நகர்த்த வேண்டும் என்றால் போதுமான பலம் இருந்தால் தூக்கி வைத்துவிடலாம், இருந்தாலும் குறிப்பிட்ட ஒருவர் மட்டும்தான் அந்த வேலையை செய்யவேண்டும் என்றால் அந்த குறிப்பிட்ட ஒருவருக்கு நேரம் இடம் கொடுக்க வேண்டும் , வீட்டில் இருந்து பயணம் செய்து வேலை பார்க்கும் இடத்துக்கு வரவேண்டும், எடை அதிகமாக இருக்கும்போது கருவிகளையும் ஆட்களையும் உடன் அழைத்து வரவேண்டும் , ஆக சின்ன வேலை என்று நினைக்கும் விஷயங்கள் எல்லாம் களத்தில் இறங்கி பார்த்தால் பெரிய வேலைதான். இதனைத்தான் புரிந்துகொள்ள மறுக்கிறோம், களத்தில் இறங்கி வேலை பார்த்தால் மட்டும்தான் கடினத்தன்மை என்பது புரியும், செயல்திட்டங்கள் வேலையை தொடங்கும் வரையில் பார்க்க எளிமையான விஷயங்களாக இருக்கும் இருந்தாலும் வேலையை தொடங்கினால்தான் இந்த போர் தொடங்கப்படுகிறது, செம்ம டயர்ட்டாக மாறிவிடுகிறோம், வேலையை விட்டு விடுமுறை எடுத்து வெளியே செல்ல போராடுகிறோம் !! 




கருத்துகள் இல்லை:

@TAMIL-CINEMA-REVIEW - THE DEVIL WEARS PRADA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

இந்த திரைப்படத்தின் கதை எளிமையானது , நேரடியாக படத்தை பார்த்தே தெரிந்துகொள்ளுங்கள் ஆனால் திரைப்படத்தின் கதைக்களம், புகழ்பெற்ற ஃபேஷன் இதழியல் ...