இந்த உலகத்தில் இன்னைக்கு தேதிக்கு மனுஷங்க வாழ்க்கையில் இருப்பது எல்லாமே முடிக்க முடியாத பிரச்சனைகள் , உடைக்க முடியாத தடைகள் , இன்னும் நிறைய குழப்பங்கள். இது எல்லாத்துக்குமே நான் என்ன சொல்வேன் என்றால் முதலில் ஒரு கற்பனையான விஷயத்தை கொண்டு எல்லாவற்றையும் சாதித்து விடாலாம் என்று நம்பாதீர்கள். கண்ணுக்கு தெரிந்த பொருட்களை வைத்துதான் பெரும்பாலும் இங்கே வெற்றி அடைய முடியும். ஒரு வியாபாரம் பண்ணனும். வெறும் அறிவும் திறன்களும் நினைவுத்திறனும் இருந்தா மட்டுமே போதுமா ? காசு வேணும் இல்லைன்னா பொருட்கள் வேணும் ! நான் சொல்லக்கூடிய பொருட்கள் என்பது நல்ல உடைகள் , நல்ல உணவு , நல்ல இருப்பிடம் என்று எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். இந்த பள்ளிக்கூடாமோ கல்லூரிகளோ உங்களுக்கு பொருட்களை கொடுக்க வேண்டிய விஷயமாக இருக்க வேண்டியது ! ஆனால் கற்பனைகளை கொடுத்துக்கொண்டு இருக்கு ! உலகத்துடைய 70 சதவீதம் ஆக்சிஜேன் கடல் வாழும் தாவரங்களாலும் பிளாங்க்டன் போன்ற உயிரினங்களாலும் கிடைக்குது ஆனால் மரங்களை காப்போம் மழையை பெறுவோம்ன்னு கற்பனை கதைகளை நம்ப வைக்கிறார்கள் . உலக பிளாஸ்டிக் குப்பைகள் முழுக்க சிதைந்து சின்ன சின்ன தூசுக்களாக கடலில் இருக்கும் மீன்களை கொன்றுக்கொண்டு இருக்கிறது, ஆனால் இது எதை பத்தியும் கவலைப்படாமல் நம்ம மக்கள் ஃபுட்பால், கிரிக்கெட்க்கும், சினிமா பொழுதுபோக்குகளுக்கும் சப்போர்ட் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கும் நிலை இப்போது இருக்கிறது. இதைதான் பாக்கணும் , இதைத்தான் பேசணும் , இதைத்தான் பண்ணனும் என்று பொதிகை டிவி நிகழ்ச்சிகள் போல இருக்கும் எல்லா விஷயங்களுக்கும் தணிக்கை பண்ணியே மக்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தால் அறியாமையும் மூட நம்பிக்கையும் மட்டும்தான் இருக்கும். ஒரு படத்தில் வருவது போல சாணமும் மஞ்சள் தூளும் சயின்ஸ்ன்னு சொல்லிக்கொடுங்கன்னு நான் யாரையும் மண்டையை கழுவ நினைக்கவில்லை. இந்த உலகம் என்பது இந்த உலகத்தில் இருக்கும் பொருட்கள், நிறைய பட்டப்படிப்புகள் படித்து இருக்கலாம் ஆனால் நீங்க படித்த படிப்பு என்னும் கற்பனைகளை உடனடியாக பொருட்களாக மாற்றம் பண்ணி சேகரித்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் நிறைய நாட்கள் உயிரோடு இருக்கப்போவது இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். மேலும் இன்றைய நண்பன் நாளைய எதிரி , இன்றைக்கு பொருட்கள் இருந்தால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும், அதே பொருட்கள் நாளைக்கு உங்களிடம் இல்லாமல் போனால் உங்களின் அப்பா, அம்மா, சகோதரர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று யாருமே உங்களை மதிக்க மாட்டார்கள். இந்த மாதிரி பொருட்களை சேகரிக்க இப்போதே தொடங்குங்கள். உங்களுக்கு நல்ல யோசனை சொல்கிறேன். ஒரு ஒரு செயலுக்கும் ஒரு டெட்லைன் வைத்துக்கொள்ளுங்கள். சின்ன செயலாக இருந்தாலும் பெரிய செயலாக இருந்தாலும் டெட்லைன் வைத்துக்கொள்ளுங்கள். இந்த டெட்லைன்னை ஒரு முறை , ஒரே ஒரு முறை கூட மீற வேண்டாம். இதுதான் நான் உங்களுக்கு கொடுக்கும் ஒரு அட்வைஸ். இந்த அட்வைஸ் ஃபாலோ பண்ணினால் உங்களால் எல்லா விஷயத்திலும் நேரம் குறித்து சாதிக்க முடியும். இங்கே உங்கள் கண்ணுக்கு தெரியாத நிறைய விஷயங்கள் உள்ளது. அந்த விஷயங்களை அடைந்து வாழ்க்கையை இலாபகரமாக மாற்றுங்கள். இன்னைக்கு கம்ப்யூட்டர்களுக்கு எல்லாமே உயிர் இருப்பதால் மனிதனுடைய உயிர் பற்றியே யாருக்குமே கவலை இல்லை. இவர்களா உங்களுக்கு சப்போர்ட் பண்ணப்போகிறார்கள் ? இல்லை.. இல்லவே இல்லை.. உங்களுக்கு நீங்கள்தான் சப்போர்ட் ! புரிந்து உங்களை நீங்கள் சப்போர்ட் பண்ணிக்கொள்ளுங்கள். இந்த விளையாட்டை நாம் கண்டிப்பாக வெற்றி அடைந்தே ஆக வேண்டும்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !
ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...
-
ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் சொல்லடி அவனுக்கு நான் ச...
-
பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அ...
No comments:
Post a Comment