குறைவான ஸ்கிரீன் டைம் - வியக்க வைக்கும் விஷுவல் எஃபக்ட்ஸ். அப்படியே சூப்பர் மெரியோ வீடியோகேம் உலகத்தையே நம்முடைய கண்களுக்கு முன்னால் கொண்டுவந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். சமீபத்தில் இல்லூமினேஷன்க்கு DESPICABLE ME - SING - SECRET LIFE OF PETS வரிசையில் அடுத்த கட்டமாக ஒரு படம் கிடைத்துவிட்டது என்றால் அதுதான் சூப்பர் மெரியோ ப்ரோஸ் மூவி. பொதுவாக நான் விமர்சனங்கள் பண்ணுவது கிடையாது. ஒரு படம் பார்க்கிறோம் என்றால் அந்த படத்தினை பார்த்த பின்னால் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதால் மட்டுமே இந்த வலைத்தளம். ஒரு மணி நேரம் முப்பத்தி மூன்று நிமிடங்கள் ஒரு தரமான ஒன் லைன் என்டர்டைன்மெண்ட். ஒரு சிம்பிள் ஆன கதைக்கு ஒரு சிம்பிள் ஆன ப்ரெசெண்ட்டேஷன். ஒரு வீடியோ கேம் பேஸ் பண்ணின ஒரு ஃபேமிலி படத்துக்கு தேவையான எல்லா விஷயங்களையும் படத்தில் கொடுத்துள்ளனர்.
ஷார்ப்பான ஒரு பில்லியன் மார்க்கை தாண்டி இந்த படம் 2023 இன் நம்பர் ஒன் பாக்ஸ் ஆஃபிஸ் படமாக இருக்க காரணம் என்ன ? WRECK IT RALPH படம் போல கதை அமைக்கப்பட்டு இருந்தாலும் நல்ல தரமான விசுவல்ஸ் மற்றும் வீடியோ கேம்களின் சோர்ஸ் மெடீரியல்க்கு சாதகமாக படத்தை கொடுத்துள்ளார்கள். ஃபேமிலி ஆடியன்ஸ்ஸின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் இந்த படம் பூர்த்தி செய்துவிடும். அனிமேஷன் வகையில் ஒரு நல்ல படம்தான். ஸ்டோரி எப்போதும் போல என்டர்டைன்மெண்ட் ஃபோகஸ்ஸட்டாக இருப்பதால் பெரிதாக சொல்லிக்கொள்ள முடியாது. ஆனால் வீடியோகேம் ரசிகர்களுக்கு தரமான படம். நானும் TEKKEN க்கு லைவ் ஆக்ஷன் எடுக்கிறேன். ASSASSINS CREED க்கு லைவ் ஆக்ஷன் எடுக்கிறேன் என்று சோதப்பவில்லை. காமெடி படங்களில் கதையில் லாஜீக் பார்க்க கூடாது. டாம் அண்ட் ஜெர்ரி போல இதுவும் ஒரு சேம் டு சேம் படைப்புதான். அந்த வகையில் மறுப்பு இல்லை. மினியான்ஸ் படத்தில் லாஜீக் பார்க்கின்றோமா ? காமெடிதான் பார்க்கிறோம் இல்லையா ? அந்த வகையில் பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் இந்த படம் கண்டிப்பாக ஒரு நல்ல பொழுதுபோக்குதான்.
ஒரு சில விஷயங்களை பிலிம் அடாப்ஷன் கொண்டுவர முடியாது என்று ஒரு சவால் இருக்கும்போது அமெரிக்க படங்கள் மட்டும் இப்படிப்பட்ட சவால்களை முறியடித்துக்கொண்டே இருக்கிறது. இந்த படம் ஒரு பில்லியன் கலெக்ஷன் எடுத்து வசூல் குவித்து பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment