மாயவன் - ஒரு தடை செய்யப்பட்டு கைவிடப்பட்ட இந்த சயின்ஸ் ப்ராஜக்ட் எப்படிப்பட்டது என்றால் உயிர் போகும் நேரத்தில் இன்னொருவரின் உடலுக்குள் டேக்னாலஜி மூலமாக நானோ சிப்களை பயன்படுத்தி உயிரை டிரான்ஸ்ஃப்வர் செய்யும் ஒரு பயங்கரமான தொழில் நுட்பம் கொண்டது. இந்த ப்ராஜக்ட் மாயவன் பயன்படுத்தும் வில்லன்தான் இந்த கதையின் அடித்தளம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா !! இதனால்தான் இந்த படம் வழக்கமான சயின்ஸ் ஃபிக்ஷன் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ்ஸாக இருக்கும் , கதாநாயகர் சந்தீப் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பெரிய இன்வெஸ்டிகேஷன் செய்து நடந்த கொலைகளுக்கு எல்லாம் காரணம் இவர்தான் என்று கண்டுபிடிக்கும்போதே இன்னொருவர் உடலுக்குள் நினைவுகளை கடத்தி மறு அவதாரம் எடுத்து மிகப்பெரிய சவாலாக இருக்கிறார் வில்லன். இப்படித்தான் படம் மிக மிக இண்டரெஸ்ட்டிங்காக போகிறது. இன்று நேற்று நாளை படத்துக்கு பின்னால் ஒரு தரமான சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இந்த மாயவன் . பொதுவாக மற்ற படங்கள் போல இல்லாமல் எல்லோருக்கும் முக்கியமான கேரக்டர் டிசைன் கொடுத்து வில்லனை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கவே கஷ்டப்படும் அளவுக்கு திரைக்கதையை அவ்வளவு ஜீனியஸ்ஸாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர், நிறைய காட்சிகளில் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் எல்லாமே பெஸ்ட் இன் கிளாஸ். படம் பார்க்கவே பிரமிக்க வைக்கிறது. ஃபர்ஸ்ட் பாகம் ஒரு ஹீரோ சென்டர்ட் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்று தொடங்கி செகண்ட் பாகம் ஒரு எட்ஜ் ஆஃப் சீட் சயின்ஸ் ஃபிக்ஷன்னாக எடுக்கப்பட்டுள்ளது , உலகத்தரத்தில் ஒரு தமிழ் இமாஜினேஷன் , டேனியல் பாலாஜி மற்றும் சந்தீப் பெஸ்ட் ஆஃப் பெர்ஃபார்மன்ஸ். மனநல மருத்துவராக வரும் கதாநாயகியும் அவருடைய பங்குக்கு அவருடைய கதாப்பத்திரத்துக்கு ஜஸ்டிஸ் கொடுத்துள்ளார். இன்னைக்கு தேதி வரைக்கும் நம்ம தமிழ் சினிமாவில் எடுக்கபட்ட சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன்னில் டேக்னிக்கல் பாயிண்ட் ஆஃப் வியூவில் இந்த படத்தை அடித்துக்கொள்ள முடியாது, ஸாங்க்ஸ் தேவையான பிளேஸ்ஸில் இருக்கிறது. கிளைமாக்ஸ் வேற லெவல். படம் பார்த்தால் உங்களுக்கே புரியும். ஒரு மனிதன் சாகாவரம் பெற்று வாழ்ந்தால் அவனால் என்னென்ன விஷயங்களை பண்ண முடியும் என்று மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் இந்த படம் ஒரு கொடுத்த ஃபார்முலாவையே திரும்ப திரும்ப கொடுக்காமல் புதிதாக கொடுத்து வெற்றியடைந்துள்ளது. நம்முடைய தமிழ் சினிமாவுக்கு இந்த மாதிரியான படங்கள்தான் தேவை,. மாயவன் போன்ற டெக்னிகல் பாயிண்ட் ஆஃப் வியூவில் இருந்து பெஸ்ட்டாக இருக்கும் படங்கள்தான் தமிழ் சினிமாவின் எதிர்காலமாக இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய கருத்து. இந்த படத்துடைய ஒரு வசனம் யோசிக்க வைக்கிறது , எதையுமே அந்த தெய்வம் நினைத்தால்தான் மாத்த முடியும் ஆனால் நீயே அந்த தெய்வம் ஆகணும்னு யோசிக்க கூடாது.
No comments:
Post a Comment