Thursday, September 21, 2023

THINGS TO KNOW ABOUT EXTERNAL HDD PURCHASE - முக்கியமான விஷயங்கள் !!

SEAGATE-2TB - ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் டிரைவ் வாங்கியதால் சமீபத்தில் கிடைத்த அனுபவத்தை நான் பகிர்ந்துகொள்கிறேன். ஒரு மாத காலம் இந்த ஹார்ட் டிஸ்க் பயன்படுத்தியதால் கிடைத்த அனுபவங்கள் மற்றும் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ள நான் இந்த வலை போஸ்ட் பதிவு பண்ணுகிறேன். 





1. DISK DEFRAGMENT பண்ண முடியாது. 

ஒரு ஹார்ட் டிஸ்க் டிரைவ் ஒரு வட்டமான நேரான தகடு என்பதால் ஃபைல்களை எழுதும்போது இடவசதி பார்த்து நேராக எழுதாது. ஒரு இடத்தில் 100 MB , ஒரு  இடத்தில் 40 MB , ஒரு இடத்தில் 800 MB என்று சின்ன சின்ன பாகங்களாக பிரித்துதான் எழுதிவிடும். இதனால் ஹார்ட் டிஸ்க் ஸ்லோவாக மாறிவிடும். இந்த வரிசை மாற்றம் எல்லாம் மாற்றிவிட்டு நேராக ஒரே ஃபைல்லில் எழுதி வைத்து அரேஞ்ச் பண்ண வேண்டும் என்றால் அதுக்குதான் டிஸ்க் டீஃபராக்மெண்ட் என்ற வசதி விண்டோஸ்ஸில் இருக்கிறது. ஆனால் எக்ஸ்டர்னல் டிரைவ்களுக்கு இது போன்று டிஸ்க் டீஃபராக்மெண்ட் செயல்முறையை பண்ண முடியாது. கலைந்த வரிசைகளை நேராக பண்ணவேண்டும் என்றால் மொத்தமாக ஹார்ட்டிஸ்க்கை ஃபார்மட் பண்ணிவிட்டு பின்னர் மறுமுறை நேராக எழுதவேண்டும். அதுதான் ஒரே வழி இருந்தாலும் இந்த விஷயத்தை பரிந்துரை பண்ண முடியாது. கடினமாக ஹாண்டில் பண்ணினால் ஹார்ட்டிஸ்க் பழுது ஆகலாம். 

2. எந்தெந்த ஃபைல்களை ஸ்டோர் பண்ணலாம் ?

பெரிய சைஸ் உள்ள எல்லா ஃபைல்களும் ஸ்டோர் பண்ணலாம். சின்ன சின்ன ஃபைல்களை அதிக எண்ணிக்கையில் ஸ்டோர் பண்ண வேண்டாம். பென் டிரைவ் போன்ற FAT-32 வகை நினைவகத்தில் 4 GB க்கு மேல் இருக்கும்  ஃபைல்களை COPY பண்ண முடியாது ஆனால் EX FAT ஃபைல் சிஸ்டம் 8 TB வரைக்கும் பெரிய ஃபைல்களை COPY பண்ணும் , படங்கள் , சாஃப்ட்வேர் போன்ற விஷயங்களுக்கு இந்த ஹார்ட் டிஸ்க் நன்றாக பயன்படும். குட்டி குட்டி ஃபைல்களை போடும்போது . ZIP அல்லது . RAR சிங்கிள் ஃபைல்களாக மாற்றி காப்பி பண்ணவும். இப்படி பண்ணவில்லை என்றால் 1300 ஃபைல்கள் கொண்ட பெரிய சைஸ் அதிக என்னிக்கை ஃபைல்ஸ் இருக்கும் ஃபோல்டர்களை  காப்பி பண்ண ரொம்ப நேரம் டைம் ஆகும். 

3. கவனம் தேவை :

பென் டிரைவ் போன்று தட்டு தட்டென்று தட்டிவிட்டு வீசி கடாசிவிடாலாம் என்று நினைக்காதீர்கள். ஹார்ட் டிஸ்க் என்று சொல்லப்படும் இந்த வன் தகடுகள் நகரும் ஃபைல் எழுதும் முள் போன்ற ரைட்டர் பகுதியை உடையது. இது உடைந்தால் மொத்தமாக அனைத்து ஃபைல்களும் காலியாகிவிடும். காந்தங்களை பயன்படுத்தினாலும் உள்ளே இருக்கும் நகரும் மற்றும் நகராத பார்ட்ஸ் காலியாக மாறிவிடும். இவ்வாறு சேதமானால் இந்த பொருளை வாங்க நீங்கள் போட்ட காசு கோவில் உண்டியலில் போட்ட பணம்தான்.

4. ஆன்லைன் வேண்டாம் கடைகளில் வாங்குங்கள் :

ஹார்ட் டிஸ்க் நிறைய பெர்சனல் ஃபைல்களை போட்டு வெக்க வேண்டாம். சினிமா , சாஃப்ட்வேர் என்று பொதுவான ஃபைல்களை போட்டு வையுங்கள். மேலும் கடையில் வாங்குங்கள். ஆன்லைன்னில் வாங்கினால் சர்வீஸ் பண்ணுவது கஷ்டம். விலையில் ஒரு 1000 வரைக்கும் அதிகமாக இருக்கலாம் ஆனால் ஃபைல்கள் முக்கியம் என்னும்போது லோக்கல் கடைகளில்தான் சொல்லிவிட்டு அடுத்து என்ன பண்ணலாம் என்று முடிவெடுத்து பார்க்க பார்க்க முடியும். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...