VISWAROOPAM - TRAILER
VISWAROOPAM - II - TRAILER
விஷ்வரூபம் - 1 மற்றும் விஷ்வரூபம் - 2 - இந்த படத்துடைய கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால் ஒரு உயர் நிலையில் இருக்கும் உளவுத்துறை அதிகாரி அவருடைய அனுபவத்தால் ஒரு பயங்கரமான மிஷன்னை முடித்துவிட்டு நிறைய பேரை காப்பாற்றியுள்ளார். ஆனால் கடந்த காலத்தில் அவருடைய எதிரிகளாக இருந்த ஆட்கள் நிறைய வருடங்களுக்கு பிறகு அவரை சந்திக்கும்போது அவருடைய அவருக்கும் அவரை சார்ந்த அனைத்து நேர்மையான மக்களுக்கும் உயிருக்கே ஆபத்தாக இருக்கும் சம்பவங்கள் நடக்கிறது , மிகவும் திறமையும் அனுபவமும் மிக்க கதாநாயகரின் குழுவினரால் இவ்வளவு பயங்கரமான நெட்வொர்க்கின் முயற்சிகளை தடுக்க முடியுமா என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம் . ஒரு இன்டர்நேஷனல் பிலிம் ரிலீஸ்ஸில் இருக்கும் அளவுக்கு மிக சிறப்பான காமிரா வொர்க் இந்த படத்தில் இருக்கிறது, குறிப்பாக ஒரு சில காட்சிகளில் லொகேஷன் ஸெட் அவ்வளவு ரேயலலிஸ்ட்டிக் , இந்த படத்துடைய சீரியஸ்னஸ் வேற லெவல். ஃபர்ஸ்ட் படம் அதனுடைய கதை நெக்ஸ்ட் பாகத்தில் கன்டினியூ ஆவது போக காட்டியதால் அடுத்த பாகத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்தது ! நிறைய வருடங்களுக்கு பிறகு அடுத்த பாகம் வெளிவந்தாலும் இந்த படம் அதன் முதல் பாகத்தை விட சூப்பர்ராக இருந்தது. இருந்தாலும் ஒரு சில காரணங்களால் பாக்ஸ் ஆபீஸ் என்ற வகையில் பிளாக் பஸ்டர் சாதனையை ஃபர்ஸ்ட் பாகம் அளவுக்கு கொடுக்கவில்லை என்றாலும் டீசண்ட்டான ஸீக்வல் ரெவின்யூ கொடுத்தது. தமிழ் சினிமாவில் எனக்கு இருக்கும் பெரிய ஆதங்கம் என்னவென்றால் ஒரு நல்ல ப்ரொடக்ஷன் பாயிண்ட் ஆஃப் வியூவில் புதிதாக ஒரு கதை கொடுக்கப்படும்போது கொண்டாட தவறிவிடுவார்கள் ! கமர்ஷியல் பாயிண்ட் ஆஃப் வியூவில் மாஸ் படங்களாக வெளிவரும் படங்களுக்கு எல்லாம் வசூல் சாதனையை கொடுத்துவிடுவார்கள். இந்த டிரெண்ட் மாறினால் நன்றாக இருக்கும். ஒரு சில நெட்டிவ் கோலிவுட் டுவிஸ்ட்களை தவிர விஸ்வரூபம் 2 ஒரு நல்ல ஸ்பை பிலிம் சாய்ஸ். இப்போது பாராட்டுக்களை எங்கே இருந்து ஆரம்பிக்கலாம் , முன்னதாக உன்னை காணாது பாடல் , டான்ஸ் கொரியோகிராபி வேற லெவல் . கமல்ஹாசன் பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் கதாப்பத்திரமாக படத்துக்குள்ளே இந்த விஸ்வநாதன் கதாப்பத்திரத்துக்கு ஜஸ்டிஸ் கொடுத்துள்ளார். ஆனால் மறுபடியும் ஸ்மார்ட்டான அதிகாரியாக மாறும்போது அந்த டிரான்ஸ்ஃபார்மேஷன் ஃபைட் காட்சிகள் வேற லெவல்லில் இருக்கும். அதன் பின்னால் நியூ யார்க் சம்பவத்தை தடுக்கும் காட்சிகள் ஒரு டீசண்ட் எண்டர்டெயின்மெண்ட் , பிளாஷ் பேக் காட்சிகள் டெக்னிகல்லாக ஃபேன்டாஸ்டிக். இந்த படத்தை பற்றி இன்னும் நிறைய விஷயங்கள் பேசலாம்.
No comments:
Post a Comment