Sunday, September 10, 2023

CINEMA TALKS - EIGHT INTERNATIONAL FILMS YOU NEED TO WATCH - #5 - GREAN FICTIONS - TAMIL REVIEW

நிறைய படங்களை பார்த்து இருப்பவர்கள் இந்த படத்தை பற்றி கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். கிரேயன் ஃபிக்ஷன்ஸ் - ஒரு பள்ளிக்கூடத்தில் சின்ன சின்ன யுட்யூப் வீடியோக்களை விளையாட்டாக எடுத்து ஃபேமஸ் ஆகும் ஒரு வளர்ந்து கெட்ட பையங்களின் வட்டாரம். பிரச்சனை என்று வந்தால் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்கவில்லை என்றாலும் ஒரு கட்டத்தில் ஒரு பையன் அவன் காதலிக்கும் பெண்ணை நிரந்தரமான ஒரு அவமானத்துக்கு உள்ளாகும் சூழநிலையில் மாட்டிக் கொள்கிறான். அந்த பெண்ணை சமாதானம் பண்ணுவதற்குள் காதல் காலியாகவே அடுத்து என்ன நடக்கிறது. அந்த பையன் காதல் தோல்வி மட்டும் இல்லாமல் வீட்டின் பிரச்சனைகளையும் எப்படி சமாளித்தான் என்று இந்த படத்தின் கதை நகர்கிறது. பாராஸைட் படத்தை பார்த்துவிட்டு ஆஹா ஓஹோ என்று ஆஸ்கார் பாராட்டுக்கள் கொடுக்கும்போது சினிமாவில் ஸ்லைஸ் ஆஃப் லைப் ஜெனரில் ஒரு படம் இந்த அளவுக்கு அடிமட்டம் வரைக்கும் சென்று வாழ்க்கையின் ஒரு பாகத்தை காட்டியுள்ளதை கவனிக்க வேண்டும். உலக அளவில் பெரிய வெளியீடு இல்லை என்றாலும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு படம். கிளைமாக்ஸ் கொஞ்சம் வித்தியாசமாக ஆனால் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது. இந்த படத்தில் கொஞ்சம் காட்சிகள் கொஞ்சம் டூ மச் என்று விமர்சனம் கொடுப்பவர்கள் "குட் பாய்ஸ்" படத்தை பார்த்தது இல்லை என்று நம்புகிறேன். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...