Friday, September 8, 2023

CINEMA TALKS - FROZEN & FROZEN II - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 FROZEN PART ONE PART TWO REVIEW


FROZEN 


பொதுவாக டிஸ்னி தயாரிப்புக்கள் ஃபேமிலி ஆடியன்ஸ்க்காகவும் ஃபிரான்சைஸ் வருமானத்துக்காகவும் டெய்லர் மேட் என்பதை மறுக்க முடியாது. இந்த வகையில் ஃப்ரோசன் படங்களை தள்ளிவைத்துவிட முடியாது. இளவரசி எல்ஸா தன்னுடைய இளம் வயதில் பனியை கட்டுப்படுத்தும் சக்திகளை பெறுகிறாள் ஆனால் ஆரம்பத்தில் தன்னுடைய சக்திகளை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் ஒரு நாட்டின் இளவரசியாக இருந்தாலும் தனித்தே இருக்கிறார். அவளுடைய சகோதரி ஆனாவிடம் கூட அருகில் சென்று பேச முடிவது இல்லை.  என்னதான் நமது இளவரசி எச்சரிக்கையுடன் சக்திகளை பயன்படுத்த முடியாமல் இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவருடைய சக்திகள் வெளிப்படுகிறது. நிரந்தரமான பனிக்காலம் அவருடைய ஆட்சிப்பகுதிக்குள் உருவாகிறது. பனியின் இளவரசியாக கருதப்பட்டு அவளுடைய நாட்டின் மக்களால் வெறுக்கப்படுகிறாள். அந்த நாட்டை விட்டே தனியாக செல்கிறாள்.  இப்போது அக்காவை சமாதானம் பண்ணினால்தான் நாட்டை இந்த நிரந்தரமான பணிப்பொழிவின் தாக்கத்தில் இருந்து காப்பாற்ற முடியும் என்பதை புரிந்துகொள்கிறாள் தங்கை ஆனா , இன்னொரு பக்கம் எல்ஸாவை கொல்ல சதித்திட்டங்கள் நடக்கிறது. கிளைமாக்ஸ்ஸில் என்ன நடக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை. 


ஓரு ம்யூஸிக்கல் படம் என்று பார்த்தாலும் ஃப்ரோசன் குறை வைக்கவில்லை. குறிப்பாக லெட் இட் கோ பாடலை ஃபேமினிஸத்தின் தேசிய கீதம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை. 


பொதுவான டிஸ்னி கதைகளில் இருக்கும் ஃபேண்டஸியை அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு பின்னணியில் ஒரு சிம்பிள் ஆன ஒரு அக்கா தங்கை கதையை சொல்லும் இந்த படம் வெளிவந்த நாட்களில் ஈஸியாக பாக்ஸ் ஆஃபிஸ் #1 இடம் பிடித்துவிட்டது. இன்னைக்கு வரைக்கும் இந்த சாதனையை மற்ற படங்களால் முறியடிக்க முடியாவில்ல. சொல்லப்போனால் அமெரிக்காவில் பொம்மைகளின் விற்பனைக்காகவே அந்த பொம்மைகளின் கதையாக எடுக்கப்படும் படங்கள் நிறையவே இருக்கிறது. ஜி. ஐ. ஜோ படங்கள் , டிரான்ஸ்ஃபார்மர்ஸ் படங்கள் , லீ. கோ. படங்கள் போன்ற படங்கள் இந்த ஃபிரான்சைஸ் பொம்மைகள் விற்பனைக்காக எடுக்கப்பட்ட படங்கள். இந்த வகையில் நல்ல வெளியீடு இருந்ததாலும் நிறைய பேமினிஸ்ட் கருத்துக்கள் இருந்ததாலும் இந்த படம் வெற்றிப்படமாக இருந்தது. 



FROZEN II


ஃப்ரோசன் படத்தின் அடுத்த பாகம் ஃப்ரோசன் 2 - கண்டிப்பாக முதல் படத்தின் சக்ஸஸ் எடுக்க வேண்டும் என்றால் நல்ல எஃபர்ட்ஸ் கொடுத்து இரண்டாவது படம் எடுக்க வேண்டும். நிறுத்தி நிதானமாக 8 வருடங்களுக்கு மேல் ப்ரொடக்ஷன்னில் இருந்தது இந்த படம், நல்ல பேமினிஸ்ட் பாயிண்ட் ஆஃப் வியூ இருப்பதால் இந்த இரண்டாவது பாகத்துக்கு ஃபேமிலி - மகளிர் ஆடியன்ஸ் பக்கம் இன்னும் அதிகமாக சப்போர்ட் இருக்கும் என்ற கணிப்பு கண்டிப்பாக தவறவில்லை. சென்ற படத்தின் ஆனா-எல்ஸா-கிறிஸ்டோபர்-ஓலாஃப் கூட்டணி இந்த முறை ஆனாவுக்கு மட்டுமே கேட்கும் இசையை பின்னணியாக கொண்டுள்ளது. இந்த வகையில் அவளுடைய சக்திகளுடன் இணைக்கப்பட்ட ஃபேண்டஸியான மாய உலக இசையின் பின்னணி என்ன ? என்று ஆராய்ச்சி பண்ண கிளம்புவதில் இருந்து தொடங்குகிறது. இதன் பின்னணியில் நான்கு மாயாஜால சக்திகளில் ஒரு சக்திதான் ஆனாவின் சக்தி என்று ஆனா புரிந்துகொள்வதால் அந்த வில்லேஜ்க்கு நடக்கப்போக்கும் பேராபத்தில் இருந்து அனைவரையும் இந்த குழுவால் காப்பாற்ற முடிகிறதா ? என்ற கதைக்களம் இந்த படத்தில் இருக்கிறது. 


ஃபேண்டஸி வேர்ல்ட் பில்டிங் இந்த படத்தில் டீசண்ட்டாக இருக்கிறது. டோனி ஸ்டார்க்குக்கு விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்த நாட்களை யோசித்து கம்பேர் பன்னும்போது இந்த படத்திலும் டப்பிங்கில் பெரிய ஸ்டார்கள் சோதப்பி விடுவார்களோ என்றால் அப்படி இல்லை. ஷ்ருதி ஹாசன் , திவ்ய தர்ஷினி, சத்யன் , மிகவும் நல்ல டப்பிங் வொர்க் கொடுத்துள்ளனர். இருந்தாலும் புரஃபஷனல்லாக டப்பிங் கொடுக்கும் திறமையான ஆர்டிஸ்ட்களை விட்டுவிட்டு ஏற்கனவே லட்சத்திலும் கொடியிலும் சம்பாதிக்கும் செலிப்ரிட்டி நடிகர்களை அழைத்து ஸ்டுடியோக்கள் டப்பிங் கொடுக்க சொல்வது நியாயமா ? இந்த போஸ்ட் படிப்பவர்கள் நியாயம் சொல்லுங்கள். 


கதை சுமாராக இருந்தாலும் காட்சிப்படுத்துதல் பிரமாதம். ஃபேண்டஸி எலிமெண்ட்ஸ்க்கு பஞ்சம் இல்லை. ஒரு ஃபிரான்சைஸ் என்ற வகையில் பார்க்கும்போது ஒரு நல்ல என்ட்ரியாக இந்த படம் இருக்கிறது. 






No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...