Saturday, September 30, 2023

CINE TALKS - இது ஒரு DC பிரச்சனை !! - திரை விமர்சனம் !!

இன்னைக்கு ஒரு காம்பெரிஸன்க்கு எடுத்து பார்த்துகிட்டால் கூட எங்கேயோ கடனில் இருந்த மார்வேல் ஸ்டுடியோஸ் இன்னைக்கு பாக்ஸ் ஆபீஸ்ஸில் நம்பர் ஒன் நிலையில் இருக்கிறது, ஆனால் ஆரம்பத்தில் இருந்து மார்வேல்க்கு நேர் எதிர் போட்டியாக படங்களை கொடுக்கும் டிஸி பார்க்காத பிரச்சனைகளை இல்லை. அதைத்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். 

டி  ஸி எக்ஸ்டென்டெட் யுனிவெர்ஸ் !! அதாவது DCEU - அதிகாரப்பூர்வமாக இந்த பெயர் இல்லை என்றாலும் குறிப்பாக DC படங்கள் என்று சொன்னாலே போதுமானது. இந்த படங்கள் DC யின் வெப் சீரிஸ்ஸ்ஸான FLASH , AIRROW , GOTHAM , SUPERGIRL , மேலும் DC க்கே உரித்தான சிறப்பான பிளஸ் பாயிண்ட்டான அனிமேஷன் படங்களின் யுனிவெர்ஸ் இவைகளோடு இணைக்கப்பட்ட ஒரு MULTIVERSE ல் நடக்கிறது. ஆனால் நடப்பு ஹிட் padangal JOKER மற்றும் THE BATMAN தனியான MULTIVERSE அதனால இந்த படங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மேலும் CHRISTOPHER NOLAN இன் THE DARK KNIGHT படங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். 

இப்போ இந்த படங்கள் பற்றி பார்க்கலாம் . மொத்தம் 15 படங்கள் வெளிவந்துள்ளது. 

1. Man of Steel 

2. Batman v. Superman : Dawn of Justice

3. Suicide Squad

4. Wonder Woman

5. Justice League 

6. Zack Snyder Cut of JL

7. Aquaman

8. Shazam

9. Birds of Prey

10. Wonder Woman 1984

11. The Suicide Squad

12. Black Adam

13. Shazam Fury of The Gods

14. The Flash

15. Blue Beetle

1. MAN OF STEEL - இந்த படம் வெளிவந்த உடனே பாராட்டப்பட்ட ஒரே விஷயம் சூப்பர் மென் கதாப்பத்திரத்தில் இருக்கும் ஒரு உண்மைத்தன்மை , மற்ற படங்களை போல சூப்பர் மேன்னை வில்லன்கள் எதிர்ப்பததாக இந்த படத்தின் கதை இல்லாமல் நிஜமாகவே ஒரு ஏலியன் பூமியில் வாழ்ந்தால் பிரச்சனை எனும்போது என்ன நடக்குமோ அதுதான் கதையாக இருந்தது. மற்ற படங்களில் காட்டப்பட்ட அதே கதையையே மறுமுறை சொல்ல வேண்டாம் என்று புதிதாக எடுத்தது பிளஸ் பாயிண்ட். 

2.BATMAN V. SUPERMAN - பெரிய எதிர்பார்ப்புகளில் வெளிவந்த இந்த படம் DC யின் இரண்டு ICONIC காதப்பாத்திரங்களின் மோதல் , ஆனால் கொஞ்சம் லாஜீக் சொதப்பல் இதுதான் DC க்கு பெரிய பேக்லாஷ். குறிப்பாக ஃபைட் ஸீன்களில் ஃபோகஸ் பண்ணி எடுக்கும் மார்வேல் அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் களம் இறக்கி CAPTAIN AMERICA CIVIL WAR வெளியிட்டது. மேலும் இந்த படத்தை நேரடியாக மோதவே SPIDER MAN ஐயும்  MCU வுக்குள் கொண்டுவந்தது. 

3. SUICIDE SQUAD - வில் ஸ்மித் , மார்க்கட் ராபி , ஜெராட் லிடோ என்று டாப் லெவல் ஸ்டார்களை களம் இறக்கி போன படத்தின் மார்க்கேட்டை பிடிக்க வெளிவந்த இந்த படம் சக்ஸஸ் மேல சக்ஸஸ் , ஆனால் வில் ஸ்மித் மறுபடியும் அவருடைய இந்த ரோல் பிளே பண்ணவில்லை. இந்த படம் கேஷுவல் ரிலீஸ் என்றாலும் நல்ல வெளியீடு கொடுத்தது. 

4. WONDER WOMAN - டிஸியின் மாஸ்டர் பீஸ் என்று இந்த படத்தை சொல்வார்கள் ஆனால் கதை என்ற அடிப்படையில் கொஞ்சம் ஸ்பெஷல் என்றாலும் அடிப்படியான அதே சூப்பர் ஹீரோ ஃபார்முலாதான். கொஞ்சம் பேமினிஸம் கலந்து படம் பாக்ஸ் ஆபீஸ் கலக்கல் பெர்ஃபார்மன்ஸ். 

5, JUSTICE LEAGUE - ஸ்டுடியோவின் எதிர்காலத்தை குழி தோண்டி புதைத்த படம் இந்த படம். ஸ்கிரிப்ட் மற்றும் எக்ஸிக்யூஷன் கொஞ்சம் கூட சரியில்லை. விமர்சனங்களை குறைக்க WB அவர்களின் படங்களின் ஒரு ஸ்டில்லை பயன்படுத்தினால் கூட COPYRIGHT ஸ்டிரைக் பண்ணி சேனல்லை தூக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த படம் ZACH SNYDER இடம் இருந்தாலும் அவருடைய வாழ்க்கையில் நடந்த சோகத்தால் ப்ரொடக்ஷன் விட்டு வெளியேற அவெஞ்சர்ஸ் படங்களின் இயக்குனர் JOSS WHEDON கிட்ட கொடுத்தபோது அவ்வளவாக படத்தின் நிஜமான பாயிண்ட்டை ஃபேன்ஸ்க்கு கொடுக்க முடியவில்லை. 

6. ZACH SNYDERS JUSTICE LEAGUE - ஃபேன்ஸ்க்கு பெரிய ஹாப்பியான மோமென்ட் , இந்த படம் நிஜமாக ZACH SNYDER கொடுக்க நினைத்த FOLLOW UP
ஆக இருந்தது. மேற்கொண்டு முக்கியமான 6 சூப்பர் ஹீரோக்களுக்கும் தனித்தனி ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுத்து படத்துக்கு பக்காவான டேவலப்மெண்ட் கொடுக்கப்பட்டது. குறிப்பாக FLASH டைம் டிராவல் ஸீன் இந்த படத்தில் வேற லெவல். 

7. AQUAMAN - ஜேஸன் மேமொவா - பார்க்க WWE யின் ஃபைட்டர் போல இருந்தாலும் அவருடைய AQUAMAN காதப்பாத்திரத்துக்கு பக்காவான பேர்பார்மென்ஸ் கொடுத்து இருப்பார். மேலும் ஆர்த்தர் லவ்ஸ் மேரா என்று DC யின்  ஃபர்ஸ்ட் லவ் ஷிப் இந்த படத்தில்தான் ஆரம்பிக்கும் மற்றபடி ஸ்டோரி ஆர்க் மற்றும் விஷுவல்ஸ் எந்த வகையில் ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வெளிவந்த பக்காவான என்டர்டென்மெண்ட் இந்த படம். இன்னைக்கு தேதி வரைக்கும் DC யில் அதிகமாக கலெக்ஷன் பண்ணுண படம் இதுதான். 

8. SHAZAM - DC யின் டோன்னை தரை லோக்கல் வரைக்கும் இறக்கி ஹியூமர்ராக சேர்த்து சேர்த்து ஃபேமிலியோடு பார்க்கும் என்டர்டென்மெண்ட் படமாக வெளிவந்து SHAZAM . இந்த படத்தின் கதாப்பாத்திரங்கள் மிகவும் சிறப்பாக படத்தை நடித்து கொடுத்து இருப்பார்கள். DC யின் வரலாற்றில் ஸீரியஸான படங்களை புறக்கணித்துவிட்டு நார்மல் லெவல் படங்களின் சாப்டர்ரை ஸ்டார்ட் பண்ணிய படம் இந்த ஷசாம் . 

9. BIRDS OF PREY - நான் பார்க்காத படங்களை பற்றி கருத்துக்களை சொல்ல முடியாது. இந்த படம் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பார்த்தால் இந்த வரிகளை அப்டேட் பண்ணுகிறேன். 

10. WONDER WOMAN 1984 - முதல் படத்தின் நல்ல பேரை அடுத்த படம் சோதப்பிவிடும் என்பதற்கு நிஜ வாழ்க்கை உதாரணம் இந்த படம் , ஒரு கடமைக்கு யோசித்துக்கொள்ளுங்களேன் மாயாஜாலத்தால் எல்லாமே மாறிவிடும் என்றால் அப்புறம் எதுக்கு சூப்பர் ஹீரோ மற்றும் வில்லன்கள். ஆனால் இந்த படத்தின் கிரேயடிவிட்டியை பாராட்டியே ஆகவேண்டும். ஒரு சில காட்சிகள் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றே தெரியாது என்ற வகையில் இருந்தாலும் படம் பார்க்க டீசண்ட்டாகத்தான் இருந்தது. 

11. THE SUICIDE SQUAD - மறுபடியும் ஃபேமஸ்ஸான ஹீரோக்களுடன் களம் இறங்கிய இந்த சூப்பர் ஹீரோ படம் அடிப்படியில் ரொம்ப நல்ல படம் இருந்தாலும் கரோனா வைரஸ் பண்ணிய பாவம் இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் எடுக்கவில்லை. கண்டிப்பாக ஹிட் ஆகியிருக்க வேண்டிய படம்தான். 

12. BLACK ADAM - இங்கே ஷசாம் படம் வெற்றிக்கு பின்னால் DC யின் ஒரு புது முயற்சி. குறிப்பாக ஜஸ்டிஸ் சொசைட்டி என்ற சூப்பர் ஹீரோ அமைப்பை கதைக்குள் கொண்டுவந்த விதம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. 

13. 



No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...