விண்ணைத்தாண்டி வருவாயா - இந்த படம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ஒரு மிகவும் ஸ்பெஷல்லான ரொமான்டிக் பிலிம் , பொதுவாக ஹாலிவுட் ரொமான்ஸ் பிலிம்களில் கதைக்களம் மிகவும் நேர்த்தியாக முக்கியமான இரண்டு கேரக்டர்களின் வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன செயல்களை கூட மிகவும் அழகாக காண்பித்துக்கொண்டு இருக்கும். அந்த லெவல் ஸ்கிரீன் பிளே ஒரு தமிழ் படத்துக்கு கொடுத்ததுதான் இந்த படத்துடைய பிளஸ் பாயிண்ட் என்று நான் சொல்லுவேன். காட்சிகள் மிகவும் இயல்பாக நகர்கின்றன. கார்த்திக் தன்னுடைய பக்கத்து வீட்டு பெண்ணான ஜெஸ்ஸியை காதலித்தாலும் வீட்டில் கடுமையான எதிர்ப்பு இருப்பதால் பிரிந்து செல்கின்றனர், இருந்தாலும் இவருடைய பக்கத்தில் இருந்து காதலை வெற்றியடையைவைக்க பண்ணும் நிறைய முயற்சிகள் ஒரு அளவுக்கு பலன் கொடுத்தாலும் கடைசியாக ஒரு கட்டம் வருகிறது. கார்த்திக்கின் மொத்த ஆம்பிஷன்னையும் விட்டுக்கொடுத்து சினிமாவில் இயக்குனர் ஆகும் கனவை விட்டுக்கொடுத்தால் மட்டும்தான் காதல் கைகூடும் என்று ஒரு நிலைமை வந்தால் கார்த்திக் என்ன செய்வார் என்பதுதான் இந்த படத்தின் கதை, சிலம்பரசன் மற்றும் திரிஷா மிகவும் சிம்பிள்ளான நடிப்பை கொடுத்து எஃபர்ட்லெஸ்ஸ்ஸாக அவர்களின் கதாப்பத்திரங்களை பதிவு பண்ணி நகர்கிறார்கள். மொத்த கதையும் ரொமான்டிக் போர்ஷன் மட்டுமே ஃபோகஸ் என்பதால் சினிமாட்டிக் காமிரா வொர்க் மிகவும் அமேஸிங். பாடல்களுக்கு அவசியம் இல்லாமல் ரொமான்ஸ் மட்டுமே ஒரு பிலிம் என்ற வகையில் ப்ரெசெண்ட் செய்யப்பட்டாலும் பாடல்கள் படத்துக்கு லேக்காக இல்லை. லா லா லாண்ட் மற்றும் பேர்ஸ்வேஷன் படங்கள் போல ரொமான்ஸ் மட்டுமே மெயின்னாக ஃபோகஸ் பண்ணிய படம்தான் ஆனால் நம்ம ஊருக்கு இந்த பிரசன்டேஷன் புதியது, ஏ ஆர் ரகுமான் மியூசிக் , சிலம்பரசன் பெஸ்ட் ஆஃப் பெர்ஃபார்மன்ஸ் , மோர் கேரக்டர் டிரைவ்வின் ஸ்கிரீன் பிளே அதனால்தான் இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இதனால் இந்த படம் நெக்ஸ்ட் அலைபாயுதே படமா என்று கேட்டால் கண்டிப்பாக கிடையாது. இந்த படம் இந்த ஜெனர்ல ஒரு அளவுக்கு பெஸ்ட் என்றுதான் சொல்லணும். இந்த படத்தை மிஞ்சிய படம் இன்னொன்று இருக்கிறது அதுதான் நீதானே எந்தன் பொன்வசந்தம். இன்னொரு போஸ்ட்டில் இந்த படத்தை பற்றி பார்க்கலாம்.
No comments:
Post a Comment