ஜெயில்லர் - ஒரு பக்காவான ஆக்ஷன் என்டர்டைன்மெண்ட். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிச்ச இந்த படம் இதற்கு முன்னாடி வெளிவந்த அண்ணாத்த படத்தை பற்றி யோசித்து பார்க்கும்போது மிகப்பெரிய இம்ப்ரூவ்மெண்ட். இயக்குனர் நெல்சன்க்கு இளைய தளபதியின் பீஸ்ட் படத்தை கம்பேர் பண்ணி பார்க்கும்போது இன்னும் பெரிய இம்ப்ரூவ்மெண்ட். இந்த 2023 ஆம் வருடத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் நம்பர் ஒன் படமாக ஜெயில்லர் இருப்பதால் இந்த படத்துக்கான விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
டைகர் முத்துவேல் ஒரு கோபமான ரிடயர்ட் காவல்துறை அதிகாரி , அவருடைய பையன் ACP அர்ஜூன் காணாமல் போகிறார், ஒரு கட்டத்தில் அர்ஜூன் வில்லன்களால் கொல்லப்பட்டுவிட்டார் என்று தெரிந்துகொள்ளும்போது கோபத்தின் அதிகபட்சத்துக்கே போகிறார் முத்துவேல். தன்னுடைய குடும்பத்தை பாதுகாக்க மொத்த பலத்துடன் களத்தில் இறங்குகிறார். இனிமேல் அடுத்து என்ன நடக்கும் என்று ஒரு மிகப்பெரிய டெத் கேம் கடைசியில் ஒரு டுவிஸ்ட்டுடன் முடிகிறது.
விநாயகன் மெயின் வில்லனாக மிரட்டுகிறார். மலையாளத்தில் துல்கர் சல்மான் - சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த கலி படத்துக்கு பின்னால் இந்த படம் இவருக்கு ஒரு ஃபேன்டாஸ்டிக் நெகட்டிவ் ரோல். வசந்த் ரவி பெஸ்ட். முத்துவேல் குடும்பத்தில் மிர்னா மேனன் , மாஸ்டர் ரித்விக் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஒரு பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்துள்ளனர்.
சிவாஜி மற்றும் எந்திரன் போல ஒரு கிராண்ட் அண்ட் மாஸ் ஆன படம் என்று இல்லாமல் இந்த படம் நெல்சன் ஸ்டைல்லில் வெளிவந்த டாக்டர் , பீஸ்ட் போன்று ஸ்ட்ரைட் ஃபார்வார்டு ரியல்லிஸ்ட் கமர்ஷியல் பிலிம் படமாக இருக்கிறது. இந்த ஸ்ட்ரைட் ஃபார்வார்டு ரியல்லிஸ்ட் கமர்ஷியல் என்பது நெல்சன் படங்களின் பெரிய பிளஸ் பாயிண்ட். உதாரணத்துக்கு இராணுவத்தின் மெடிக்கல் குழுவின் டாக்டர் வருண் ஒரு பெரிய கடத்தல் நெட்வொர்க்கையே வெறும் இண்டெலிஜன்ஸ் அண்ட் ப்ளானிங்க் கொண்டு எதிர்ப்பது வேறு லெவல். இங்கேயும் அந்த மேஜிக்தான் ஆனால் கதாநாயகன் முத்துவேல் மிக மிக ஸ்ட்ராங்க் ஆன சப்போர்ட்டை உடையவர். மொத்த வில்லங்களின் நெட்வொர்க்கையும் பாதி படத்துக்குள் உடைத்துவிடுகிறார்.
சுனில் , ஜாக்கி , மோகன் லால் மற்றும் சிவா ராஜ்குமார் சிறப்பு தோற்றங்கள் கண்டிப்பாக நன்றாக பயன்படுத்தப்பட்டு உள்ளது கண்டிப்பாக இந்த படம் நெக்ஸ்ட் பாகத்துக்கு முடிவு எடுக்கப்பட்டு உருவாக்கபட்டதுதான் ஆனால் பாதி படம் எடுத்த பின்னால் கதையில் சேஞ்ச் பண்ணியிருப்பது போல இருக்கிறது. கிளைமாக்ஸ்ஸில் வசந்த் ரவியின் முடிவை மாற்றியிருக்கலாம். ஒரு பெரிய நெட்வொர்க்கில் வசந்த் ரவியும் ஒரு மெம்பர் என்று அடுத்த பாகத்துக்கு ஒரு லீட் கொடுத்து கதையை வேறு வகையில் நகர்த்தினால் "தி கோல்ட் மெடல்" என்ற பழைய ஹாலிவுட் பட சாயலை தவிர்த்து இருந்திருக்கலாம். 2 H 40 MIN என்ற பெரிய ரன்னிங் லெந்த் கொடுத்து இருப்பதால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் VIKRAM படம் போல ஒரு யுனிவெர்ஸ் கொடுத்து இருந்தால் மகிழ்ச்சி ! இருந்தாலும் ஓகே. லைட்டான காமெடி டோனில் ஒரு மாஸ் லெவல் நெல்சன் ஸ்டைல் என்டர்டைன்மெண்ட்.
No comments:
Post a Comment