மொத்ததில் அருணாச்சலம் படம்தான் , ஆனால் சீனாவில் வெளிவந்த ஒரு ஃபேன்டாஸ்டிக் காமெடி என்டர்டைன்மெண்ட் , நம்ம கதாநாயகன் ஆசைப்படுவது எல்லாம் ஒரு ஃபுட்பால் பிளேயர் ஆக வேண்டும் என்பதுதான் ஆனால் விதி நமது கதாநாயகனின் வாழ்க்கையில் விளையாடுகிறது. இந்த படத்துடைய பெரிய பிளஸ் பாயிண்ட் இந்த படம் அடுத்த க்ரேஸீ ரிச் யெஸியன்ஸ் இல்லை என்பதுதான்.
ஒரு பெரிய சொத்துக்கு அதிபதியாக இருக்கும் ஒரு மனிதர் சாகும் முன்னால் அவருடைய பேரனுக்கு சொத்து கிடைக்க வேண்டும் என்று முடிவு பண்ணுகிறார் ஆனால் அந்த பையன் முப்பது நாட்களுக்குள் நூறு கோடி CNY தொகையை செலவு செய்ய வேண்டும். இந்திய பண மதிப்பில் 1137 கோடி INR ரூபாய். இப்படி அதிர்ஷ்ட மழை அடித்தால் எப்படி வாழ்க்கை மாறுகிறது என்பதே இந்த படம்.
படம் முழுக்க காமெடி காமெடி காமெடி ! சினிமா என்பது ஒரு கலையின் வடிவம், கடைசியில் காதலி இறந்துபோக வேண்டும். காதலன் ஆக்சிடென்ட் ஆக வேண்டும். அதுதான் மாஸ்டர் பீஸ் கதை என்று காதுக்குள் கதை விடும் கலா ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து அழலாம். வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க பணம் மட்டும் முக்கியம் இல்லை என்று சொல்பவர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கவும். சினிமா என்றால் இதுதான் என்று பழைய சோக கதைகளுக்கு அவார்ட் கொடுத்த காரணத்தால் மட்டும்தான் அவைகள்தான் சினிமா என்று கருத்து சொல்கிறார்கள். உண்மையில் ஒரு முழு லெந்த் காமெடி படம் கூட மிகப்பெரிய பட்ஜெட் போட்டு மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் எடுக்க முடியும் என்றால் இந்த படத்தை சொல்லலாம்.
மொத்ததில் ஒரு பெஸ்ட் படம். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். ஆனால் அருணாச்சலம் படமே பிரெவ்ஸ்டர்ஸ் மில்லியன்ஸ் படத்தின் ரீமேக் தானா ? இது புதிதாக இருக்கிறதே !!
No comments:
Post a Comment