Sunday, September 3, 2023

LITERALLY DREAMS - என்னுடைய கனவுகள் - மொத்த தொகுப்பு !

நாம் தூங்கி எழுந்தவுடன் நமது மொத்த கனவுகளில் எண்பது சதவீதம் காணாமல் அழிந்துவிடுகிறது. சில நேரங்களில் நூறு சதவீதமும் அழிந்துவிடுகிறது. மனிதனை ஒரு ரோபோட்டிடம் இருந்து பிரிக்கும் முக்கியமான விஷயம்தான் நம்முடைய கனவுகள். அந்த வகையில் நான் அதிகமாக சினிமா பார்ப்பதால் நிறைய சினிமாட்டிக் கனவுகள் எனக்கு வந்துள்ளன. இவைகளுக்கு விளக்கம் என்ன என்று எனக்கு தெரியாது ! கனவுகள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு இந்த கட்டுரை பயன்படும் என்று நம்புகிறேன். மொத்த கனவுகளும் லொகேஷன்கள் அடிப்படையில் ஆனதுதான், நம்மால் பார்க்காத ஒரு லொகேஷன்னை கனவுகள் காட்டாது. நிறைய நேரங்களில் என்னுடைய வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்தான் கணவுகளில் இருக்கும். ஒரு சில நேரம் மட்டும் என்னமோ வேறு ஒரு யுனிவெர்ஸ்ஸில் இருப்பது போன்று என்னுடைய கனவுகள் இருக்கும். நான் பார்க்காத லொகேஷன்னில் இருக்கும் இந்த கனவுகள் ஒரு வேலை எதிர்கால உலகமாக இருக்கலாம். 

ஃப்யூச்சர்ரில் ஸேட் பண்ணியது போன்ற இந்த கனவு மிக முக்கியமானது. ஒரு கல்லூரி ஆனால் இயற்கையான ஒரு பெரிய ஓட்டு வீடு போன்ற அமைப்புக்குள் இருக்கிறது. கல்லூரி தூரம்தான் ஆனால் பிளாக் பெயிண்ட் அடிக்கப்பட்ட கிராவிட்டி ரேசிஸ்டண்ட் பஸ் கொஞ்சம் மாவட்டங்களை தாண்டி ஒரு மணி நேரத்துக்குள் அங்கே கல்லூரிக்குள் கொண்டுவந்து விட்டுவிடுகிறது. இந்த காலகட்டம் கண்டிப்பாக ஃப்யூச்சர்தான், மேகங்கள் எல்லாம் உடைந்த கண்ணாடி போல செயற்கையான பனிக்கட்டியால் உருவாக்கப்பட்டு இருந்தது. மழை என்று இருந்தாலே அது பெரும்பாலும் ஆலங்கட்டி மழைதான். வானம் பிங்க் மற்றும் ஆரஞ்ச் டோன் கலந்த வெளிச்சமான பகலாக இருந்தது. என்னுடைய சொந்த வீடு மாறியிருந்தது. நான் இந்த கணவுக்குள் ஒரு யுட்யூப் விமர்சகராக இருக்கிறேன். எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது ஒரு கிராவிட்டி இல்லாத ஆட்டோ ஒரு நேரான 45 டிகிரி ரோட்டில் உச்சியில் ஒரு பகுதியில் இருக்கும் ஒரு கிளினிக் பக்கமாக கொண்டு சென்றது. இந்த கனவுகளில் சென்னை போன்றே பெரு நகரங்கள் மாசுபட்டு குற்றவாளிகளை சப்போர்ட் பண்ணினால்தான் மக்கள் வாழ வேண்டும் என்ற நிலைமை இருந்தது. கிராமப்பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சுமாராக இருந்தது. ஜிபிஎஸ் கைவிடப்பட்டு இருந்தது. எங்காவது செல்லவேண்டும் என்றால் பஸ்ஸில் செல்ல வேண்டும். காஸ்ட் சிஸ்டம் கைவிடப்பட்டு இருந்தது. பெரிய பெரிய பணக்காரர்கள் கூட லொகேஷன்களுக்கு டிராவல் பண்ணுவதை தவிர்த்துவிட்டார்கள். மரங்கள் அழிக்கப்பட்டதால் நுணுக்கமான சின்ன சின்ன இலைகளை உடைய கொடிபோன்ற பாசியை போன்ற செடிகள் கட்டிடம் முழுக்கவும் வளர்க்கப்பட்டு இருந்தது. இந்த செடிகள்தான் உலக ஆக்ஸிஜன் சப்ளை ! இருக்கும் மரங்கள் பாதுகாக்கப்பட்டு இருந்தன ! இன்டர்நெட் ரீசார்ஜ்  பிளான்கள் 1 GB ஒரு மாதத்துக்கு என்று குறைவாக லிமிட் பண்ணப்பட்டு இருந்தது. யாருமே ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தவில்லை. பட்டன் ஃபோன்கள் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பட்டன் ஃபோன்களில் படங்கள் பார்க்கலாம்.  மருத்துவமனைகள் க்ராஸ் ஜெனெடிக் ஆராய்ச்சிகள் மூலமாக நோய்களை குணப்படுத்தின! உடல் பாகங்கள் விலங்குகளின் சதைகளின் திசுக்களால் ஆபரேஷன் பண்ணி மாற்றப்பட்டு இருந்தன ! அறுவை சிகிச்சைகளில் வலி இல்லை. டிவி கேம் ஷோக்கள் VR வகையில் விளையாடப்பட்டு இருந்தது. திரைப்படங்களின் தயாரிப்பு நின்றுபோய் இருந்தது. தியேட்டர்களில் கூட்டம் இருந்ததே இல்லை. தியேட்டர்களில் உரிமைகள் வாங்கப்பட்ட படங்கள் மட்டுமே போடப்பட்டுக்கொண்டு இருந்தன. குறிப்பாக எந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் திரைப்படங்களை எடுப்பதையே நிறுத்திவிட்டார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஏலியன் அட்டாக் என்னுடைய கனவில் இருக்கிறது. நான் பார்த்த ஏலியன் உயிரினம் தரைப்பகுதியை மொத்தமாக ஈரமான நிலமாக மாற்றி மண்ணுக்குள் இருந்து எந்த லொகேஷன் வேண்டுமென்றாலும் செல்லக்கூடியது. ஒரு செடி கூட முளைக்காமல் மண் முழுவதும் சேரும் ஈரமாகவும் வான் முழுவதும் வருடம் 365 நாட்களும் கருப்பான மேகங்களாகவும் மாற்றியிருந்தது. இந்த சேறு தரையில் அவைகளின் வேகம் அதிகமாக இருந்தது என்னுடைய வேகம் குறைவாக இருந்தது. நான் தப்பி ஓடினால் இரண்டு மைல் ஓடினாலும் கைவிடப்பட்ட கட்டிட சுவர்கள் தவிர வேறு எதுவுமே அந்த சேறு தரையில் இல்லை. அந்த ஏலியன் உயிரினம் பிரவுன் கலர் ஹியூமன்னாடய்ட் . பேசாது ஆனால் எல்லா மொழிகளையும் புரிந்துகொள்ளும், மனிதர்களை கொல்லாது ஆனால் தரைக்கடியில் இருக்கும் சிறைகளில் அடைத்துவிடும். உயிருள்ள மூன்று அடி ரோபோட்கள் பயங்கரமாக பில்ட் பண்ணப்பட்ட கரங்களால் தாக்கக்கூடியவை. இவைகளை தடுக்கவே கைகள் கால்கள் நமது உடலின் பாகங்களை பிளாஸ்டிக் - மெட்டல் கலவையாக மாற்றிக்கொள்ளும் டெக்னாலஜி எதிர்காலத்தில் இருந்தது. இது சிறப்புதானே. ஆனால் இந்த ரோபோட்கள் ஃப்ளைட் முதல் ஹெலிகாப்டர் வரை கட்டுப்படுதத்தி தரையிலோ அல்லது கட்டிடத்தின் மேலோ மோதவிட்டு விளையாடும் சக்திகளை உடையது. பேய்கள் இருக்கிறது. ஒரு பயணத்துக்கு போகும் நண்பர்களாக நாங்கள் செல்லும்பொது இறந்த ஆவிகளின் தொல்லைகளை சகித்துக்கொள்ள வேண்டும் என்று பேசிக்கொண்டுதான் சென்றுக்கொண்டு இருப்போம். வெளிச்சம் எப்போதுமே எல்லா அறைகளிலும் இருக்க வேண்டும். இருள் என்றால் ஆவிகள் தாக்கலாம். ஆவிகள் அறிவியலின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதால் பிரச்சனையே இல்லை. இந்த மொத்த கனவுகளிலும் உலகமே குளிர்ச்சியாக இருந்தது. பிரைவேட் கம்பெனிக்களே இல்லை. எல்லாமே கவர்ன்மெண்ட் கம்பெனிகள்தான். நம்பர் போடப்பட்ட சிறிய அறைகள்தான் ஜெயில்களில் இருந்தது. அந்த அறைகளில் போதுமான வசதிகள் இருந்தன. ஜெயில் ஒரு மெடிக்கல் கிளினிக் மற்றும் பள்ளிக்கூடம் போல இருந்தது. மரியாதை இல்லாமல் யாரும் யாரையும் பேசுவது இல்லை. ஹாஸ்பிடல் மெடிக்கல் பேசண்ட்ஸ்க்கு உதவி பண்ணவும் பள்ளி குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பதும் விளையாடும்போது பார்த்துக்கொள்வதும்தான் சிறையில் இருப்பவர்களுக்கு முக்கியமான வேலை. சிறையை விட்டு வெளியே சென்று வரலாம் ஆனால் ஒரு ஃபுட் பால் மைதானம் வரை தொலைவுதான் போக வேண்டும் அதற்கு மேல் செல்ல அனுமதிகள் இல்லை. ஒரு ஒரு அறைகளும் செவ்வக வடிவில் 6 அடி அகலம் மற்றும் 20 அடி நீளத்துக்கு இருந்தது , மொத்தம் 1000 அறைகள் மட்டுமே இருந்தது. பாதுகாப்புக்கோ அல்லது எதிரிக்களோடு சண்டை போட முன்வந்தாலோ சிறையை விட்டு ஒரு டீம் அமைத்து கொண்டுகூட வெளியே போகலாம் வரலாம். சாப்பாடு நன்றாக இருக்கும். இது எல்லாம்தான் என்னுடைய கனவில் வந்த எதிர்கால காட்சிகள். உங்களுக்கு ஏதாவது புரிந்தால் சொல்லுங்கள். யாருக்கு தெரியும், இவைகள் எதிர்காலமாக கூட இருக்கலாம். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...