Thursday, September 21, 2023

CINEMA TALKS - THIS MOVIE BEST IN ITS OWN WAY !! - TAMIL REVIEW

இந்த படம் ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் படம்தான் ஆனாலும் கதை மற்ற கமர்ஷியல் படங்களை விட ரொம்பவுமே வித்தியாசமாக இருக்கும். இராணுவத்தில் பணிபுரியும் உயர் அதிகாரியான ஜெகதீஷ் அவருடைய குடும்பத்தை பார்க்க மும்பை வருகிறார், ஆனால் ஒரு பயங்கரமான நெட்வொர்க் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நிகழ்த்தப்போவதை ஜெகதீஷ் தெரிந்துகொள்ளும்போது அவருடைய மொத்த திறன்களையும் சப்போர்ட்டையும் பயன்படுத்தியாவது எல்லோரையும் காப்பாற்ற வேண்டும். இதுதான் இந்த படத்துடைய கதை. துப்பாக்கி ஒரு ஸ்பெஷல்லான படம். பெரும்பாலான படங்கள் வில்லனின் இடத்துக்கே சென்று பறந்து பறந்து அடிக்க வேண்டும் என்ற கமர்ஷியல் விஷயங்களை மொத்தமாக கலந்து படத்தை மாஸ் காட்ட வேண்டும் என்று போராடும்போது இந்த படம் ஹீரோவின் ஸ்ட்ராடஜிக்கான திட்டங்களால் ஒரு பல வருடங்களாக இயங்கிக்கொண்டு இருக்கும் பெரிய நெட்வொர்க்கை உடைப்பதாக இருக்கிறது. இந்த படம் வெளிவந்தபோது இதுதான் நம்ம தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருந்தது. மற்ற படங்களின் பிராண்ட்டட் மசாலா நான்ஸென்ஸ்களை இந்த படம் கொடுக்கவில்லை. ஒரு பேர்ஃபேக்ட் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் ஒரு பக்கம் போக இன்னொரு பக்கம் விஜய்-அகர்வால் ரொமான்டிக் காமெடி டிராக் சென்றுக்கொண்டு இருக்கும். இந்த படத்தின் திரைக்கதை டீசண்ட்டாக உள்ளது. ஜில்லா படம் போல மாஸ் காட்சிகளை கொடுக்க முயற்சி பண்ணாமல் கதைக்கு நேராக இந்த படத்தின் திரைக்கதை நகர்கிறது. பாடல்கள் குட்டி புலி கூட்டம் , கூகிள் கூகிள் , வெண்ணிலவே, என்று துப்பாக்கி படம் ஒரு நல்ல ஆல்பம் ஹிட்தான். இந்த படம் வெளிவந்தபோது கதை மிகவும் பெரிதாக இம்ப்ரஸ் செய்து இருந்ததால் இந்த படத்தை பற்றி ஒரு போஸ்ட் பண்ணி இருக்கிறேன். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...