நே ஷா - சினிமாட்டிக் யுனிவெர்ஸ் - கேட்கவே வித்தியாசமாக இருக்கிறது இல்லையா ? சீன ஃபேண்டஸி நாவல் கதாப்பத்திரங்களை அடிப்படையாக கொண்டு முதல் படம் நே ஷா ஒரு ஃபேமிலி ஆக்ஷன் அட்வென்சர் டிராமாவாக 2019 இல் வெளிவந்தது. இந்த படத்தை எடுத்தது ஒரு பெரிய லெவல் அனிமேஷன் ஸ்டுடியோவாக இல்லை என்றாலும் படம் பார்க்கும்போது ஒரு பிரீமியம் அமெரிக்கன் அனிமேஷன் ஸ்டுடியோவின் தரத்துக்கு கொஞ்சம் மேலாக இந்த படத்தின் அனிமேஷன் இருக்கிறது. புதிய வாய்ஸ் ஆக்டர்கள் , புதிய டீம் , ஈவென் நம்ம இயக்குனர் கூட இந்த படம்தான் அவருக்கு முதல் படம் இருந்தாலும் படம் பிளாக் பஸ்டர் ஹிட். ஒரு நல்ல கதையும் , நல்ல விநியோகமும் மேலும் சிறப்பான திரை வெளியீடும் இருந்தால் மிகப்பெரிய அளவில் சாதிக்கலாம் என்பதை யாராவது இந்த படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் ரெகார்ட்ஸ்களை பார்த்தாலே புரிந்துகொள்ளலாம்.
NE ZHA - 2019 - MOVIE
இந்த படத்தின் கதை - சிறிய வயதில் இருந்தே சபிக்கப்பட்ட குழந்தையாக வளரும் நே ஷா , அம்மாவாலும் அப்பாவாலும் செல்லமாக வளர்க்கப்படுகிறார், மிகவும் கோபக்கார பையனாக நே ஷா அந்த நாட்டின் மக்களால் வெறுக்கப்படுகிறார். இன்னொரு பக்கம் தோற்கடிக்கபட்ட டிராகன்களின் கடைசி வாரிசான ஆவோ பிங்க் ! நிறைய டுவிஸ்ட்கள் மற்றும் டர்ன்களுக்கு பின்னால் கிளைமாக்ஸ்ஸில் இந்த இரண்டு நேர் எதிர் சக்திகள் சந்திக்கும்போது உண்டாகும் மோதல்வரை இந்த படத்தின் கதைக்களம் இருக்கிறது.
இந்த சினிமாட்டிக் யுனிவெர்ஸ் வகையில் அமைக்கப்பட்டுள்ள அடுத்த படம் ஜியாங் ஜியா ! முந்தைய படம் போல காமெடியை ஒரு பாகமாக கொண்டு இருக்காமல் ஒரு நேருக்கு நேராக கடவுள்களின் சக்திகளில் இருந்து மனிதர்களை காப்பாற்ற போராடும் ஒரு மனிதனையும் அவனுடைய வாழ்க்கையில் சந்திக்கும் கதாப்பத்திரங்களுமே இந்த படத்தின் கதை. சொல்லப்போனால் அனிமேஷன் மிகவும் பிரமாதம். முந்தைய படம் போல இல்லாமல் சீரியஸ் ஆன டோன் இந்த படத்தில் இருப்பதால் கண்டிப்பாக இந்த படத்தின் திரைக்கதையும் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நிறைய வருடங்களாக மிக மிக அதிகமாக விஷுவல் எஃபக்ட்ஸ் கொடுத்து உருவாக்கப்பட்ட படம் என்பதால் காம்ப்ளக்ஸ் ஆன கிராபிக்ஸ் அனிமேஷன் கூட மிக நேர்த்தியாக கொடுக்கப்பட்டு இருப்பது இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட். பாக்ஸ் ஆஃபிஸ் டீசண்ட்டாக உள்ளது. முதல் படம் போல இல்லை என்றாலும் இந்த படம் முதல் படத்தின் வெற்றிக்கு ஒரு அளவுக்கு ஈடு கொடுத்து இருக்கிறது. இந்த படத்தின் வரிசையின் அடுத்தடுத்த பாகங்களை எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment