இப்போது சமீபத்திய பிரச்சனை என்னவென்றால் மற்ற கதைக்களம் போல இல்லாமல் NARUTO மற்றும் NARUTO SHIPPUDEN தொடர்ந்து 720 எபிசோட்களாக NARUTO வின் ஒரே ஒரு நேர்க்கோடான ஸ்டோரிலைன்னை மட்டுமே ஃபாலோ பண்ணிக்கொண்டு இருந்தது. இப்போது இந்த தொடரை ஃப்யுர் ஜப்பான்னிஸ் மொழியில் பார்த்த அந்த கால ரசிகர்கள் இந்த புதிய தமிழ் மற்றும் ஆங்கில மொழி டப்பிங்களுக்கு வெறுப்பு போஸ்ட் பண்ணிக்கொண்டு வருகின்றனர்.
அதாவது மொத்தமாக 720 எபிசோட்களாக ஒரே கதையாக பார்த்து ஜப்பானில் சொந்த மொழியில் பார்த்து பழக்கப்பட்டதால் மறுபடியும் ஆங்கிலத்தில் பார்த்து ஆங்கில வெர்ஷன் நன்றாக இருக்கிறது என்று சொல்வதை இந்த சீனியர் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் இந்த பிரச்சனைக்கான காரணம். உதாரணத்துக்கு பிரேமம் , கீதா கோவிந்தம் , ஓம் சாந்தி ஓஷானா போன்ற படங்களை தமிழ் டப்பிங்கில் பார்ப்பதும் இல்லையென்றால் சொந்த மொழியாக மலையாளத்தில் பார்ப்பதும் அவரவர் விருப்பத்துக்கு உட்பட்டது என்றால் இந்த மொழியில்தான் பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.
ஜப்பானிய , கொரியா , மேல் நாட்டு ஆங்கில மொழிகளில் நேரடியாக அல்லது சப்டைட்டில் சேர்த்து பார்க்கும்போது அந்த கதாப்பத்திரங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு பார்க்க முடியும் என்பது ஒரு பக்க கருத்து, இருந்தாலும் எல்லோராலும் எல்லா மொழியையும் கற்றுக்கொள்ள முடியாது, உங்களுக்கு BTS இசைக்குழு பிடிக்கிறது, உங்களால் கொரியன்னில் பேச முடியும் என்றால் உங்களுக்கு நிஜ மொழியில் அவர்கள் சொல்லும் வசனங்கள் புரியலாம் ஆனால் உங்களை போலவே எல்லோருமே இருக்க மாட்டார்கள். ஆகவே சீனியர் ரசிகர்கள் விட்டுக்கொடுத்து போவது நல்லது.
குறிப்பாக மூன்று வருடங்களுக்கு முன்னால் அவஞ்சர்ஸ் என்ட் கேம் படத்தில் விஜய் சேதுபதி வாய்ஸ்கொடுக்கும்போதே உண்மையான டப்பிங் குழுவை கொண்டுவருவதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் டப்பிங்கில் பார்க்கவே நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். NARUTO SHIPPUDEN பொறுத்த வரைக்கும் எடிட்டிங் பண்ண வேண்டிய ஃபேன் சர்வீஸ் விஷயங்கள் நிறைய இருக்கின்றனர் ஆனால் நேரடியான ஸ்டோரிலைன்னில் இந்த ஃபேன் சர்வீஸ் விஷயங்கள் இடம்பெறவில்லை. இந்த ஃபில்லர் எபிசோட்கள் இல்லை என்றாலும் நேரான கதையை உங்களால் பார்க்க முடியும்.
டெலிவிஷன் டெலிகேஸ்ட்டில் இந்த தமிழ் டப்பிங் கொண்டுவருவது கடினம் ஆனால் OTT யில் தமிழ் டப்பிங் வருவதற்க்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. NARUTO SHIPPUDEN ஒரு மெச்சூரிட்டி நிறைந்த நெடுந்தொடர் என்றும் இந்த தொடர் வழக்கமான ஜாக்கி சான் மற்றும் டோராவின் பயணங்கள் போல இருக்காது என்றும் ஃபேன்ஸ் புரிந்துகொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment