இந்த அனிமேஷன் தொடர் பொறுத்தவரைக்கும் நிறைய விஷயங்களை பாராட்டியே ஆகணும். முதல் விஷயம் கேரக்டர் டிசைன். பொதுவாக NARUTO 2004 தொடர் பார்க்கும்போது அந்த தொடர் ரெகுலர் ஆன கார்ட்டூன் போலத்தான் இருக்கும் ஆனால் NARUTO உடைய வாழ்க்கையில் இந்த தொடர் ஒரு முக்கியமான தொடக்க அத்தியாயமாக இருக்கும். ஷிப்புடன் தொடருடைய கதை NARUTO கதைக்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு அப்புறமாக நடக்குது. பொதுவாக பென்டென் மாதிரி தொடர்களில் எல்லாம் ஒரு ஏபிசொட்க்கு ஒரு வில்லன் என்று ஒரு எபிசோட்க்கும் இன்னொரு எபிசோட்க்கும் பெரிய தொடர்ச்சி அவசியம் இல்லை.
POKEMON , BEYBLADE , DOREAMON , மாதிரியான தொடர்களிலும் இந்த மாதிரி CONTINUITY கொண்டுவர வேண்டிய அவசியமே இல்லை . ஆனால் NARUTO வில் முதல் எபிசோட்டில் இருந்து முடிவு எபிசோட் வரைக்கும் நேராக ஒரே கதை என்பதால் இந்த கதையின் கதாநாயகன் NARUTO க்குதான் அவன் வாழ்க்கையின் தனிமையை சமாளித்து மேலும் அவனுடைய நண்பர்களையும் காப்பாற்றியாக வேண்டும். பிரிந்து போன அவனுடைய நண்பன் SASUKE வை மீட்டு LEAF VILLAGE க்கு கொண்டுவந்து நண்பர்களோடு சேர்க்கவும் வேண்டும்.
யாருடைய ஆதரவும் இல்லாமல் வளர்ந்த ஒரு நல்ல மனமுள்ள ஒரு சின்ன பையனுடைய கதாப்பத்திரம் இந்த NARUTO. அதனாலேயை இந்த கதாப்பாத்திரம் எனக்கு பெர்சனல்லாக மிகவும் ஃபேவரட்டாக மாறிவிட்டது.
ஒரு ஆதரவு இல்லாத பையனாக வளரும் NARUTO மற்ற கதாப்பத்திரங்களை போல இல்லாமல் தன்னை சார்ந்தவர்களுக்காக உயிரை பணையம் வைத்து கூட போராடுகிறான், நிறைய கதைகளில் குடும்பத்தோடு வாழ்ந்தவர்களை நல்ல ஹீரோக்களாகவும் தனியாக வளர்ந்தவர்களை வில்லனாகவும் காட்டுகின்றனர். ஆனால் NARUTO அந்த பழைய கதையை தகர்த்து எறிகிறான். மற்ற கார்ட்டூன் கதாப்பத்திரங்களை விட NARUTO மேம்பட்டு இருக்கிறான்.
ஒரு புத்தகம் 600 பக்கங்களை கொண்டது என்றால் படிப்பது கடினம். ஆனால் 600 எபிசோட்கள் ஷிப்புடென் நெடுந்தொடரில் உள்ளது. இந்த மொத்த எபிசோட்களை பார்க்கவும் எனக்கு 20 நாளுக்கு மேலே தேவைப்பட்டது. இருந்தாலும் ஒரு அருமையான கதை. இடைப்பட்ட சில நகைச்சுவை எபிசோட்கள் கதையின் சீரியஸ்ஸான டோன்னை குறைக்கின்றன. உதாரணத்துக்கு KAKASHI யின் உண்மையான முகத்தை பார்க்க படும் பாடுகள். ரோபோட் NARUTO வின் எபிசோட். சின்ன சின்ன பிளாஷ்பேக் சம்பவங்கள். பூனை நிஞ்சாக்களின் தலைவரை தோற்கடித்தல் போன்ற நிறைய எபிசோட்கள் மெயின்னான கதைக்கு சம்மந்தம் இல்லாமல் இருந்தாலும் கதையின் இறுக்கத்தை குறைத்து கதையை ஆர்வத்துடன் ரசிக்கும் தன்மையை கொடுக்கிறது.
கதையின் ஹீரோவாக இருந்தாலும் SHIPPUDEN இன் பல காதாப்பத்திரங்களை சேர்த்து பார்க்கும்போது NARUTO வின் சக்தி ஒரு அளவுக்குதான் இருக்கிறது. ஆனால் NARUTO உலகத்தின் அமைதிக்காக ஒரு பெரிய போரையே தடுத்து நிறுத்த போராடுகிறான். அவனுக்கு நெருக்கம் காட்டுபவர்களை மட்டுமே சப்போர்ட் பண்ணுவது இல்லை. அனைவரையும் சமமாகவே நேசிக்கிறான்.
மொத்தமாக SHIPPUDEN TAMIL டப்பிங் இல்லை என்பதால் ENGLISH இல் 600 எபிசோட்களை பார்த்தேன். படம் பார்க்காமல் என்னால் விமர்சனத்தை கொடுக்க முடியாது. இருபது நாட்கள் என்பது மிகவும் பெரிய நேரம்தான். ஆனால் NARUTO போன்ற ஒரு அருமையான கதைக்காக இந்த இருபது நாட்களை செலவு செய்யலாம் தவறே இல்லை.
ஒரு அளவுக்கு மெச்சுரிட்டி இருக்கிறது. நான் சீரியல் மட்டும்தான் பார்ப்பேன் என்று பழைய பஞ்சாங்கத்தை மறுபடியும் மறுபடியும் சொல்லப்போவது இல்லை என்று சொல்லும் புதிய தலைமுறை பெரியவர்களும் இந்த தொடரை சேர்ந்து பார்க்கலாம். நினைவு இருக்கட்டும் இது 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக எடுக்கப்பட்ட ஒரு ஜப்பான் அனிமேஷன் அதனால் நல்ல கதைக்களத்தை ரசித்து ரசித்து பார்க்க முடியும்.
NARUTO - SAKURA - SASUKE என்ற முக்கோண காதல் கதையாக இருக்கட்டும். ROCK LEE இன் கலகலப்பான அட்வென்சர்ராக இருக்கட்டும். OROCHIMARU எடுக்கும் முடிவுகளாக இருக்கட்டும். HINATA வின் வருடக்கணக்கான உண்மை காதலாக இருக்கட்டும் இந்த எல்லா கதைகளையுமே இந்த தொடருடன் முடிக்கவில்லை. NARUTO வின் மகனான BOROTO UZUMAKI யின் கதைகளோடு தொடர்ந்துகொண்டு இருக்கின்றது.
ஜப்பானிய அனிமேஷன் 15+ என்ற வகையில் TOP 3 அனிமேஷன்னாக கருதப்படும் 1. NARUTO 2. ONE PIECE 3. DRAGONBALL என்ற மூன்று கதைகளில் NARUTO கதையில் மட்டும்தான் நமது டைட்டில் ஹீரோக்களின் கதையின் ஸ்டோரி ஆர்க் முடிக்கப்பட்டு உள்ளது. ONE PIECE இல் 1000+ எபிசோட்களுக்கு மேலே புதையலை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். DRAGON BALL இந்த புள்ளியில் நான் பார்த்தது இல்லை. ஆனால் பார்த்தால் என்னுடய கருத்துகளை போஸ்ட் பண்ணுகிறேன்.
No comments:
Post a Comment