Wednesday, September 13, 2023

CINEMA TALKS - MUNDASUPATTI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

இந்த படம் ஒரு காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியான நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியின் ஷார்ட் பிலிம்மை பேஸ் பண்ணி எடுத்த படம். இந்த குறிபிட்ட நாளைய இயக்குனர் ஷார்ட் பிலிம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்பொது நான் அந்த எபிசோட் பார்த்து இருக்கிறேன்.  இந்த படத்துடைய சோர்ஸ் ஷார்ட் பிலிம் முண்டாசுப்பட்டி பாரக்கம்போது போட்டோ எடுத்தால் நோய் வந்து இறந்துவிடுவார்கள் என்று பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே ஒரு மூட நம்பிக்கைக்குள் வாழும் ஊர், அங்கே 80 களின் ஐகானிக் YASHICA பிலிம் ரோல் காமிராவால் போட்டோ எடுப்பதில் திறன்மிக்க ஸ்டுடியோ உரிமையாளர், ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத சூழலால் ரஜினிகாந்த் , விஜயகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக மாற வேண்டிய நம்ம முனிஷ்காந்த் போட்டோவை அவருடைய காலமான பெரியப்பாவின் கடைசி போட்டோவாக கொடுத்த காமெடி இன்னைக்கு வரைக்கும் மறக்க முடியாது. 

இந்த படத்தில் பாராட்ட வேண்டிய இன்னொரு விஷயம் லொகேஷன் மற்றும் காமிராவொர்க். நிறைய டெக்னோலஜிக்கள் இல்லாத காலகட்டம் என்றாலும் வீடுகள் , பள்ளிக்கூடம் , கடைகளின் தெருக்கள் , கோவில் என்று எல்லா லொகேஷன்னும் என்னமோ மாயாஜாலம் போல படத்தில் கதையின் ஒவ்வொரு காட்சிக்கும் அப்படி மேட்ச் ஆகிறது. 

80 களின் வாழ்க்கை , 90 களின் வாழ்க்கையை குறித்த படங்கள் சுப்ரமணியபுரம் முதல்  மெகந்தி சர்க்கஸ் வரைக்கும் நிறையவே இருந்தாலும் இந்த படம் ரொம்பவுமே ஸ்பெஷல். இந்த படம் ஒரு போட்டோகிராபர் அவருடைய காதலிக்காக ஒரு மூட நம்பிக்கையின் களஞ்சியமாக இருக்கும் ஊரையே நேருக்கு நேராக எதிர்க்க வேண்டிய நிலைமையை கொஞ்சம் காதல் நிறைய நகைச்சுவை என்று சிறப்பாக சொல்லியுள்ளது. இந்த படத்தில் எனக்கு பிடித்த பிளஸ் பாயிண்ட். விஷ்ணு விஷால்- நந்திதா காதல் கதை அவ்வளவு எதார்த்தமாக இருந்தது. காமெடி ஒரு பக்கம் இருந்தாலும் இந்த காதல் காமெடிக்கு இடத்தை கொடுக்கவில்லை. ஒரு நல்ல கெமிஸ்ட்ரி நிறைந்த காதல் கதையாகவே இந்த படத்தின் டோனில் இருந்து தனித்து நிற்கிறது.

அதிக நேரம் எடுத்தாலும் மொத்தமாக 2 மணி நேரம் 28 நிமிடம் இந்த படத்தை பார்க்கும்போது ஒரு அருமையான ரெட்ரோ காமெடி படம் பார்த்த ஒரு நல்ல ஃபீலிங்க் இந்த படத்தில் இருக்கும். முனிஷ் காந்த் கதாப்பத்திரம் மறுபடியும் ரிட்டர்ன் வந்து மொத்த படத்துக்கும் ஒரு நல்ல சப்போர்ட் கொடுத்துள்ளார், ஃப்யூச்சர்ரில் அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கள்தான். கவலைப்படாதீர்கள் முனிஷ்காந்த். உங்களின் அடுத்தத்த படங்களாக வெளிவர இருக்கும் சினம்கொண்ட சிறுத்தை படத்துக்கு நூறு நாள் வெற்றி கிடைக்க இந்த வலைப்பூ விமர்சனக்குழு சார்ப்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். 

முண்டாசுப்பட்டி ஒரு பெஸ்ட் இன் கிளாஸ் என்டர்டைன்மெண்ட். இந்த படம் போல இனிமேல் இன்னொரு பீரியட் டிராமா படம் வந்தாலும் அவுட் அண்ட் அவுட் காமெடி என்டர்டைன்மெண்ட் ஆக படம் கிடைக்குமா என்பது யோசனைதான் !தானா சேர்ந்த கூட்டம் படம் கூட இப்படித்தான் அந்த டைம்லைன் வகையில் நல்ல டீடெயில்லிங்க் கொடுத்தாலும் கிடைத்த  பாக்ஸ் ஆஃபிஸ் மீடியம்தான். மூட நம்பிக்கைகளை கடைசிவரைக்கும் புரியவைத்தாலும் ஒரு சிலரிடம் இருந்து எடுக்கவே முடியாது. ஆனால் நல்ல படங்களை இந்த மாதிரி எடுத்தால் கண்டிப்பாக ரசித்து ரசித்து பார்க்கலாம்.




No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...