மாஸ்டர் என்ற பெயரை கேட்டாலே நமக்கு நம்ம தளபதியின் மாஸ்டர் படம்தான் நினைவுக்கு வரும். ஆனால் இந்த கொரியன் படத்தை பார்த்து இருக்கிறீர்களா ? இந்த படம் ஒரு அருமையான ஃபினான்ஷியல் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் படம். ஒரு முறை பாருங்கள் கண்டிப்பாக வோர்த்தாக இருக்கும்.
கதைக்கு போகலாம், தொடங்கிய சில வருடங்களுக்குள் சவுத் கொரியாவின் ஒரு ஃபேமஸ் ஆன இன்வெஸ்ட்மெண்ட் பண்ணும் தனியார் கம்பெனியாக மாறிவிட்டது நமது ஒன் நெட்வொர்க். இந்த கம்பெனியின் தலைவர் பிரெஸிடெண்ட் ஜின். மக்களிடம் இல்லாததை எல்லாம் சொல்லி நம்பிக்கையை உருவாக்கி ஒரு பெரிய பணம் தேற்றிய பின்னால் காணாமல் போகிறார். காவல் துறையில் எவ்வளவோ முயற்சிகளை பண்ணினாலும் இந்த பண மோசடியை தவிர்க்க முடியாவில்லை.
உடனடியாக ஒரு கதாநாயகன் உதயமாகி சீட்டு கம்பெனியில் ஏமாந்த பணத்தை மீட்க கிளம்பி எதிரிகளின் இடத்துக்கு சென்று விளாசினால் இந்த படம் வேலாயுதம் படமாக மாறியிருக்கும் அதுதான் இல்லை. ஆரம்பத்தில் இருந்து நம்ம பிரெஸிடெண்ட்க்கு உதவியாக இருந்ததால் இப்போது பிரச்சனையில் மாட்டிக்கொண்ட பார்க் இப்போது நம்ம பிரெஸிடெண்ட் பணத்தை ஏமாற்றி வெளியே தலைமறைவாக இருப்பதால் நமது காவல் துறையுடன் இணைந்து ஒரு பெர்பெக்ட்டான பிளான் போட்டு தூக்க வேண்டும்.
ஒரு பெரிய மோசடி அமைப்பை வேரோடு பிடிக்க வேண்டும் என்பதால் அடுத்தடுத்த சம்பவங்களை கொண்டு மிக துல்லியமாக கதை நகருகிறது. பெரும்பாலும் ஃபினான்ஷியல் க்ரைம் படங்களில் இவ்வளவு ஆக்ஷன் நன்றாக பேக்கேஜ் பண்ணப்படாது. குறைந்தபட்சம் இந்த படம் நம்ம டிரான்ஸ்போர்டர் ரீஃபூயல்ட் படம் போல சோதப்பவில்லை. இந்த மாதிரி சொதப்பல் படங்களுக்கு எல்லாம் கண்டிப்பாக போஸ்ட் போட வேண்டுமா ? கமெண்ட் பண்ணவும்.
ஆக்டிங் என்று வரும்போது குறையே இல்லை. ஒரு பெரிய நாடு தழுவிய நிறுவனத்தின் மோசடிக்கு பின்னால் அந்த தலைமையை பிடித்து தண்டனை கொடுப்பது சாதாரணமான விஷயம் இல்லை. இந்த படம் அந்த சீரியஸ் மைண்ட்ஸேட்டை காப்சர் பண்ணி படத்தின் திரைக்கதையில் வேகத்தை கூட்டியுள்ளது/ மொத்ததில் வோர்த் டு வாட்ச் எனலாம்.
No comments:
Post a Comment