புதன், 20 செப்டம்பர், 2023

SIMPLY UNDERRATED MOVIES - EP.2 - NICE TAMIL BLOG - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

1. MAFIA 2020 TAMIL REVIEW


போதை பொருள் தடுப்பு பிரிவின் உயர் விசாரணை அதிகாரியாக இருக்கும் அருண் விஜய் ஒரு மோசமான கும்பலை பின்தொடர்ந்து ஒரு பெரிய நெட்வொர்க்கையே கண்டுபிடிக்கிறார். ஆனால் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் இப்போது ஆபத்து இருக்கும்போது அருண் விஜய் எப்படி பிரச்சனைகளை தீர்த்து வில்லன் பிரசன்னாவின் நெட்வொர்க்கை தகார்க்கிறார் என்று முதல் பாகம் விறுவிறுப்பாக சென்றதால் இரண்டாம் பாகத்துக்காக மரண வெயிட்டிங். என்னை கேட்டால் இந்த படம் எல்லாம் குறைந்தது 50 நாட்கள் தியேட்டர்ரில் திரையிடப்பட்டு ஹிட் கொடுக்க வேண்டும். அவ்வளவு நல்ல ஸ்கிரீன் பிரசன்டேஷன் இந்த படத்தில் கார்த்திக் நரேன் கொடுத்து இருப்பார். 


2. LEELAI  2013 TAMIL REVIEW

நிறைய தமிழ் திரைப்படங்கள் பார்த்து இருந்தாலும் இவ்வளவு அழகாக ஒரு ரொமான்ஸ் மட்டுமே ஃபோகஸ் பண்ணின படத்தை நான் பார்த்தது இல்லை. கல்லூரி காலத்தில் படிக்கும்போது தன்னுடைய தோழியை ரிஜக்ட் பண்ணியதால் நேரில் பார்க்காமல் போனில் பேசும்போதே  கார்த்திக்கை பயங்கரமாக திட்டிவிடுகிறார் கருணை மலர். ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக்கொள்ளாமல் வெறுக்க ஆரபிக்கின்றனர். இருந்தாலும் கார்த்திக் இப்போது கருணை மலரை காதலித்தாலும் தன்னை சுந்தர் என்று பொய்யாக காட்டிக்கொண்டு நிஜமாகவே காதலிக்கிறார். இந்த உண்மை வெளிவரும்போது அடுத்து நடப்பது என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை. வெளிவந்த நாட்களில் பெரிய ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் ஒரு மீடியம் ரொமான்டிக் டிராமாவாக இந்த படத்தை எடுத்துக்கொள்ளலாம். 


3. NAALU PERUKKU NALLATHUNA ETHUVUM THAPPU ILLAI

படத்துடைய பெயரை பார்த்ததும் ஒரு காமெடி படம் என்று தவறாக நினைக்க வேண்டாம். ஒரு சுத்தமான க்ரைம் படம். தினேஷ் செல்வராஜ் ஒரு பிரமாதமான படம் எடுத்துள்ளார். ஒரு பெரிய க்ரைம் படம் என்றால் நைட் விஷன் காமிரா , ரியல்லிஸ்ட்டிக் மேக் அப் , எக்ஸபென்ஸிவ் லைட் எஃபக்ட்ஸ் எல்லாமே நிறைய பணத்தை கொட்டி எடுக்க வேண்டும் அப்போதுதான் ஹிட் ஆகும் என்ற விஷயம் எல்லாமே தவிர்த்து விட்டு ஒரு உண்மையான வாழ்க்கையில் அதிகமான பணத்துக்காக எந்த எல்லைக்கு வேண்டுமென்றாலும் போகும் வில்லன் அவனிடம் இருந்து விலக நினைக்கும் ஹீரோ என்று ஒரு சூப்பர்ரான பிளாட்டை மிக மிக தரமாக ஃபர்ஸ்ட் ஃபிரேம் முதல் லாஸ்ட் ஃபிரேம் வரைக்கும் கொடுத்துள்ளார். கிளைமாக்ஸ்ஸில் ஒரு நல்ல க்ரைம் படம் பார்த்த அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். லைட்டான டார்க் ஹியூமர் , மீடியம் கலர் டோன், பெஸ்ட் நடிப்பு என்று இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட்களை வரிசைப்படுத்தினால் இன்னும் நூறு கூட சொல்லலாம். மொத்ததில் இண்டஸ்ட்ரி கிரேடு படம். 


கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...