இன்றைக்கு ஜெயில்லர் படம் வரைக்கும் பார்த்தாச்சு, கொஞ்சம் ரெட்ரோ பக்கம் திரும்பி பார்த்தால் ஐகானிக் ஹிட் கதாப்பத்திரமான அலெக்ஸ் பாண்டியன் கதாப்பாத்திரதின் மூன்று முகம். சினிமாவுக்கே உண்டான கமர்ஷியல் விஷயங்கள்தான் இந்த படம் மொத்தமும் என்றாலும் படம் கிளைமாக்ஸ் வரைக்கும் டுவிஸ்ட்களுடன் நகர்கிறது. 80ஸ் களின் காமிரா வொர்க் என்றாலும் ஆங்கில்கள் பெரிய பட்ஜெட் படமாக இருக்கிறது. ஒரு காவல் துறை அதிகாரியாக இன்ஸ்பிரேஷன்னாக ரிஸ்க் எடுக்கும் அலெக்ஸ் காலமான பின்னால் அருண் இந்த விஷயங்களை தெரிந்துகொண்டு வில்லன்களை பிடிக்க அலெக்ஸ்ஸின் மறுஜென்மமாக தோன்றுகிறார் ஆனால் அருனுக்கே பெரிய சிக்கல் அவருடைய சகோதரன் ஜான் என்பதுதான் பிளாட் டுவிஸ்ட். அடுத்தடுத்த ஸீன்கள் எதிர்பாராத டோனில் செல்வதாலும் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் ரிஸ்க் எடுத்த சண்டை காட்சிகள் என்பதாலும் இந்த படம் பெஸ்ட். ஒரு ஆர்ட் பிலிம் மட்டும்தான் ஹிட் ஆகும் என்றும் கமர்ஷியல் மாஸ் பிலிம்கள் ஹிட் ஆகாது என்றும் ஒரு கண்ணுக்கு தெரியாத தடை இருக்கும் பட்சத்தில் ஸ்கிரிப்ட் எக்ஸ்ஸிக்கியூஷன் நன்றாக இருப்பதால் ஹிட் படங்களின் பட்டியலுக்குள் 80ஸ் களின் ரெட்ரோ காலத்தில் இந்த படம் நல்ல ஹிட். கிளைமாக்ஸ் கொஞ்சம் மாற்றியிருக்கலாம் ஆனால் 80ஸ்களில் இந்த வகை முடிவுதான் ஆடியன்ஸ் சாய்ஸ்ஸாக இருந்திருக்குமோ ?
No comments:
Post a Comment