Friday, September 22, 2023

TELLING YOU ABOUT THESE MOVIES - CINEMA TALKS TAMIL [1-3]

ஒரு சில சினிமா படங்களை பற்றி என்னுடைய கருத்துகளை நான் சொல்ல விரும்புகிறேன். இந்த படங்கள் வெளிவந்த மொழியில் இருப்பவர்களால் மட்டுமே நன்றாக புரிந்துகொள்ள முடியும். டப்பிங் பயன்படுத்தி மொழி மாற்றம் பண்ணலாம் ஆனால் நம்முடைய கலாச்சாரம் வேறு என்பதால் இந்த படங்களின் மொத்தமான கதைக்களம் நமக்கு கொஞ்சம் மாறுபட்டதாக தென்படலாம். 

1. THE SCHOOL OF GOOD AND EVIL TAMIL REVIEW



ஸ்கூல் ஆஃப் குட் அண்ட் ஈவில் படத்தை பற்றி என்னுடைய கருத்து என்னவென்றால் நான் பொதுவாக ஃபேண்டஸி படங்களை அதிகமாக குறைகளை சொல்லும் கண்ணோட்டத்தில் பார்ப்பது இல்லை. இந்த படம் விஷுவல்லாக மதிப்பான எஃபக்ட்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது ஆனால் ஸ்டோரி ரொம்பவுமே சிம்பிள்ளாக இருக்கிறது. குறிப்பாக நெகட்டிவ் கேரக்டர் பண்ணும் கதாப்பாத்திரத்துக்கு வயதான தோற்றத்துடன் ஒரு மேக் அப் பண்ணியிருப்பார்கள் அந்த மேக்அப் எனக்கு பெர்சனல்லாக  கொஞ்சம் அதிகமானதாக தெரிந்தது. இருந்தாலும் கதைக்கு தேவைப்பட்டது. இந்த படத்தை ஒரு முறை வாட்ச் பண்ணலாம் என்று சொல்லலாம் ஆனால் ஃபேண்டஸி படங்களின் இந்த இளவரசி கான்செப்ட்ககளை பலமுறை பார்த்த காரணத்தால் இந்த படம் உங்களுக்கு மற்ற இளவரசிகளின் தடைகளை உடைத்து நல்ல விஷயமும் கெட்ட விஷயமும் சேர்ந்து இருந்தால்தான் வாழ்க்கை என்று ஐடியாலஜி கொடுக்கும் அதே கதையைத்தான் சொல்கிறதே என்று மனதுக்குள் தோன்றவைக்கும்.


2. PREDESTINATION TAMIL REVIEW






உங்களுக்கு டைம் டிராவல் படங்கள் அதிகமாக பிடிக்கும் என்றால் மொத்தமாக டைம் டிராவல் பண்ணும் ஒரு தனி நபர் , ஒரே ஒரு தனி நபர் , இந்த வரிகளை நினைவில் வைத்துக்கொள்ளவும் படத்தின் கதையை நான் ஒரே ஒரு வரியில் சொல்லிவிட்டேன் !! இந்த நபர் டைம் டிராவல் பண்ணி கடந்த கால  பிரச்சனைகளை தடுக்க முயற்சி பண்ணியதால் எதிர்காலத்தில் உண்டான விளைவை இந்த படம் சொல்லிவிடும். இந்த படம் நடைமுறை சாத்தியம் கிடையாது ஆனால் வழக்கமான கற்பனைகளை படமாக எடுக்கும் வகையில் இந்த படம் ஒரு அதீதமான கற்பனை. கதையை புரிந்துகொள்ள உங்களுக்கு நிறைய நேரம் எடுக்கும் என்பதற்கு நான் உத்திரவாதம் கொடுக்கிறேன். 


3. THE TERMINAL LIST TAMIL REVIEW

பாதுகாப்பு துறையில் மிகவும் திறமையும் புத்திசாலித்தனமும் உள்ள ஒரு சிறந்த உயர் அதிகாரியாக இருக்கிறார் கமாண்டர் ஜேம்ஸ் ரீஸ் ஆனால் ஒரு சோகமான நிகழ்வு அவருக்கு நடக்கிறது. அவருடைய குழுவில் இருக்கும் அனைவரும் ஒரு ஆபத்தான மிஷன்னில் உயிரை தியாகம் செய்கிறார்கள் , இந்த ஆபத்தான மிஷன் ஒரு பெரிய சதித்திட்டம் என்பதை ஜேம்ஸ் உணர்ந்து சுதாரித்துக்கொள்ளும் முன்னால் அவருடைய குடும்பமும் சதித்திட்டம் போட்டவர்களால் கொல்லப்படவே ஜேம்ஸ் அவருடைய மொத்த வலிமையையும் திறமைகளையும் பயன்படுத்தி அவர்களை பழிக்கு பழி வாங்க போராடுகிறார். ஜேம்ஸ்க்கு மூளையில் நிரந்தர பாதிப்பு இருந்தாலும் அத்தனையும் கடந்து இவ்வளவு பெரிய நெட்வொர்க்கை எதிர்ப்பது இந்த இணைய தொடரை இன்னமும் ஸ்வாரஸ்யமாக மாற்றுகிறது. ஒரு நிதானமான நல்ல மனிதரின் உடல் நலத்தையும் மன நலத்தையும் வேண்டுமென்றே பாதித்து அவர் நேசித்த எல்லோரையும் இழக்க வைத்தால் என்ன நடக்கும் என்பதை கமர்ஷியல் சாயம் இல்லாமல் மிகவும் இண்டென்ஸ்ஸாக இந்த படத்தின் காட்சிகள் நகர்த்தப்பட்டு சொல்லப்பட்டு இருக்கும். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...