பொதுவாக டிஸ்னி படங்களில் பெரும்பாலான படங்கள் ஹிட் ஆக ஒரே காரணம் ஒரே ஒரு விஷயமாகத்தான் உள்ளது , அதுதான் ஃபேர்ரி டேல் இளவரசி - இந்த வகையில் நான் பார்த்த இன்னொரு வகையான ஒரு நல்ல காமெடி படம் தி என்ச்சான்டெட் - இந்த படத்துடைய கதையே மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது ஒரு அனிமேஷன் ஃபேர்ரி டேல் இளவரசி அவளுடைய ஃபேர்ரி டேல் கதையின் ஒரு பகுதியில் ஒரு போர்டல் உருவானதால் இன்றைய மாடர்ன் உலகத்தில் லைவ் ஆக்ஷன் உலகத்துக்குள் வந்துவிடுகிறாள். நிறைய இடங்களுக்கு தனியாகவே செல்லும் இந்த இளவரசி ஒரு இளவரசனை கண்டுபிடிக்க வேண்டும் என்று முயற்சி பண்ணவே இப்போது மகளுடன் தனியே வசிக்கும் குடும்ப நல விவாகரத்து லாயரான ராபர்ட் வீட்டில் தங்குகிறாள், இந்த போர்டல் மூலமாகவே இளவரசியை காப்பாற்ற வரும் இளவரசன் என்ன பண்ணுகிறான், வில்லனாக இருக்கும் சூனியக்காரியின் சதித்திட்டங்கள் என்ன என்ன என்று வழக்கமான டிஸ்னி கதைகளில் தொடர்ந்து வரும் கான்செப்ட்களை ஒரு ஆஃப்பிஷியல் டிஸ்னி படத்திலேயே கலாய்த்து இருப்பதுதான் ஸ்வரஸ்யமாக இருக்கிறது.
இந்த படத்தின் ஒரு ஒரு காட்சியிலும் பிரைமரியாக கதாநாயகி யேமி ஆடம்ஸ் ஒரு சீனியர் ஆக்டர்ராக அவருடைய பெஸ்ட் ஆஃப் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்துள்ளார். ஒரு இளவரசி காதப்பாத்திரமாக நன்றாகவே அவருடைய காதாப்பத்திரத்தை தாங்கியுள்ளார். மியூஸ்ஸிக்கல் படம் , கொஞ்சம் ஃபேமினிஸம் , அழகான காஸ்ட்யூம் டிசைன் என்று மற்ற பிரின்சஸ் படங்களின் எந்த அம்சங்களும் இந்த படத்துக்கு விட்டுப்போகவில்லை. அதுவே இந்த படத்துக்கு மிகவும் பிளஸ் பாயிண்ட்தான். மேலும் சொல்லப்போனால் காமெடியை ஃபோகஸ் பண்ணிய திரைக்கதை இந்த வகையில் பாக்ஸ் ஆபீஸ் கொடுப்பது கடினம் [இன்ஸ்பெக்டர் கேட்ஜெட் படத்தை மறக்க வேண்டாம்] அந்த வகையில் புதிதான முயற்சியை கொடுத்தாலும் இந்த படம் வெற்றி அடைந்துள்ளது பாராட்டுக்கு உரியது. கண்டிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸ்க்காக எடுக்கப்பட்ட ஒரு பெரிய பட்ஜெட் படம்தான் இந்த என்சான்டட். இந்த படத்தின் அடுத்த பாகம் டிஸ்ஸென்சாண்டட் 2022 இல் வெளிவந்தது. இந்த படம் பார்த்தால் என்னுடைய கருத்துக்களை போஸ்ட் பண்ணுகிறேன்.
No comments:
Post a Comment