ஒரு பக்கம் ஒரு நேர்மையான கோபமான காவல்துறை அதிகாரியான விக்ரம். இன்னொரு பக்கம் கொலை பண்ண தயங்காத ஒரு மோசமான நோட்டோரியஸ் வில்லன் வேதா!! - இதுவரைக்கும் வேதாவை பிடிக்கவும் கைது பண்ணவும் போடப்பட்ட அனைத்து திட்டங்களும் கடைசியில் வெற்றியடையாமல் போகும்போது ஒரு நாள் வேதாவே நேருக்கு நேராக வந்து காவல் துறையில் சரணடைந்து கடைசியாக விக்ரமிடம் பேச வேண்டும் என்று சொல்கிறார். இங்கே விக்ரம் - மனிதர்களை நல்லவன் - கெட்டவன் என்று பிரித்து பார்த்து முடிவு எடுப்பவர். ஒருவர் நல்லவராக இருக்கிறார் என்று அவருடைய மனதுக்குள் பட்டால் விட்டுவிடுவார். ஆனால் கெட்டவராக இருக்கிறார் என்று அவருடைய மனதுக்குள் பட்டார் எந்த எல்லை வரைக்கும் சென்று அவர்களின் கதையை முடித்து விடுகிறார்.
குற்றங்களை அவருடைய இளைய சகோதரன் நலமாக இருக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தால் , ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே குற்றங்களின் பின்னணியில் பல வருடமாக ஒரு பெரிய நெட்வொர்க்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வேதா எதற்காக சரணடைய வேண்டும் என்று ஒரு இன்வெஸ்டிகேஷன் பன்னும்போது கதையில் ஸ்வரஸ்யமான திடுக்கிடும் உண்மைகள் வெளிப்படுகிறது.
விக்ரம் வேதா படத்தின் மாஸ் ஸ்டேட்டஸை விட்டுக்கொடுக்காமல் கதையின் ஒரு பகுதியாகவே இரு நேர் எதிரான கதாப்பத்திரங்கள் மோதிக்கொள்வதாக அமைக்கப்பட்டுள்ளது. விக்ரம் கேட்டவர் இல்லை - வேதா நல்லவர் இல்லை. விக்ரம் அவருடைய மனதுக்கு சரி என்று பட்டால் எந்த மாற்றத்தையும் உலகத்தில் உருவாக்குபவர். ஆனால் வேதா நிறைய தடைகளை உடைத்து எறிந்துவிட்டு தான் பாதிக்கப்பட்டாலும் தன்னை சார்ந்தவர்கள் சந்தர்ப்பம் சூழ்நிலையால் கட்டுப்படுத்தப்பட்டு பாதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர்.
நேர் எதிரான இரண்டு கதாப்பத்திரங்களுடன் கதை இருப்பது ஒரு திரைக்கதையாக பார்க்கும்போது நன்றாக இருந்தது. நிதானமான வில்லனாக ஒரு கோபமான ஹீரோவை எதிர்ப்பது காட்சிகள் என்று வரும்போது புதிதானததான். புஷ்கர் - காயத்திரி என்பதால் நல்ல எக்ஸிக்கியூஷன் இந்த படத்தின் கதைக்களத்துக்கு இருக்கிறது. இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் கேரக்டர் டிசைன் வேற லெவல். ஒரு கமர்ஷியல் படம் லெவல்க்கு மாஸ் கொடுத்தாலும் கதை சீரியஸ்ஸான டோன்னில் இருந்து ஒரு நொடி கூட பின்வாங்கவில்லை. இந்த படத்தை பற்றி டீடெயில்லிங்க் அடிப்படையில் பிளஸ் பாயிண்ட் கொடுக்க வேண்டும் என்றால் இன்னும் இருபது பக்கம் கூட எழுதலாம். மொத்ததில் விக்ரம் வேதா - தி எக்ஸ்ட்ரீம் க்ளாஷ் ஆஃப் ஆப்போஸிட் டைட்டன்ஸ்.
No comments:
Post a Comment