Tuesday, September 12, 2023

CINEMA TALKS - EIGHT INTERNATIONAL FILMS YOU NEED TO WATCH - #8 - THE WANDERING EARTH - TAMIL REVIEW

 குறிப்பாக இந்த படம் - THE WANDERING EARTH - இந்த காலத்து ஸ்பேஸ் படங்களின் வரிசையில் ஒரு தனித்த இடத்தையே பிடித்துள்ளது. இந்த படத்துடைய கதை, நம்ம பூமி ஒரு 2050 களின் கால கட்டத்தில் சூரியனின் ரெட் ஜேயண்ட் அழிவு காலத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இப்படியே போனால் பகல் நேரங்கள் அதிக வெப்பமாகவும் இரவு நேரங்கள் மிக அதிக குளிராகவும் மாறிவிடுவதால் மனித இனமே அழிந்துவிடும். 

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அவர்களாக முடிந்த வரைக்கும் நிலைமையை ஆராய்ச்சி பண்ணுகிறார்கள். இருந்தாலும் இந்த பிரச்சனையை சமாளிக்க ஒரே வழி என்னவென்றால் பூமியை அதனுடைய வட்டப்பாதையில் இருந்து நகர்த்தி சூரியனை விட வெகு தொலைவுக்கு கொண்டு சென்று வேறு ஒரு சூரியனின் பாதைக்குள் கொண்டுவந்து வைக்க வேண்டியதுதான். 

இந்த படத்தில் காட்டுவது போல பூமியை கொஞ்சம் கொஞ்சமாக சூரியனை விட்டு நகர்த்துவது அறிவியல் அடிப்படையில் சாத்தியமாக முடியுமா என்று என்னிடம் கேட்கவேண்டாம் ஆனால் கதைக்கு இந்த களம் நன்றாக பொருந்துகிறது. இப்படி இருக்கும்போது நமது காதனாயகனும் அவனுக்கு சப்போர்ட் பண்ணும் நண்பர்களும் ஒரு மிகப்பெரிய ஆபத்தில் இருந்து எப்படி மக்களை காப்பாற்றுகிறார்கள் என்பதே இந்த படத்தின் கதை. 

இந்த படம் வெளிவந்த பின்னால் ஸ்பேஸ் படங்களில் வரலாற்றில் இந்த படம் முக்கியமான படமாக இருக்கிறது. தி மார்ஷியன் படத்துக்கு பின்னால் இவ்வளவு காலம் கடந்து ஒரு லைப் இன் ஸ்பேஸ் வகையறா படம். விஷ்வல் எஃபக்ட்ஸ்களில் தரமான சம்பவங்களை பண்ணியுள்ளார்கள். இசை மற்றும் படத்தொகுப்பு சிறப்பாகவே இருக்கிறது. கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம். 

இந்த படத்தின் முன்கதை PREQUEL தொகுப்பாக இன்னொரு படம் THE  WANDERING EARTH - II சமீபத்தில்தான் வெளிவந்தது. இந்த படத்தை நான் இந்த நேரத்தில் பார்க்கவில்லை. நான் பார்த்தால் கண்டிப்பாக விமர்சனம் கொடுக்கிறேன். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...