புதன், 27 செப்டம்பர், 2023

CINEMA TALKS - THALAIVAA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 இந்த படம் 2013 இல் வெளிவந்தது , இந்த படத்துடைய கதை - விஷ்வா இப்போது ஆஸ்ட்ரேலியாவில் தமிழ் பசங்க என்ற  நடன அமைப்பாளர்களின் குழுவை அமைத்து அவருடைய நண்பர் லோகுவுடன் அமைதியான வாழ்க்கையில் இருக்கிறார் ஆனால் அவருக்கே தெரியாத விஷயம் என்னவென்றால் அவருடைய அப்பா ராமதுரை இப்போது மும்பையின் ஒரு பகுதியில் CORRUPT ஆன ஆட்சியில் இருந்து மக்களை பாதுகாப்பாக காப்பாற்றிக்கொண்டு இருக்கிறார் என்பதுதான். விஷ்வா காதலிக்கும் பெண்ணான மீரா ஒரு காவல் துறை சிறப்பு அதிகாரி என்று தெரியாமல் ராமதுரையை சந்திக்க அழைத்து செல்லும்போது அவரை அரெஸ்ட் பண்ண காரணமாக விஷ்வாவே மாறுகிறார். இந்த நிலையில் வில்லன்களால் அவருடைய அப்பா கொல்லப்படவும் விஷ்வா  எப்படி மக்களை காப்பாற்றுகிறார் , பிரச்சனைகளில் இருந்து வெளியை வருகிறார் என்பதே இந்த படத்தின் கதை. காமிரா வொர்க் எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு கமர்ஷியல் பாயிண்ட் ஆஃப் வியூவில் பார்த்தால் கதை ஒரு அளவுக்கு 2000 ஸ்களின் காலகட்டத்தில் இருப்பதை புரிந்துகொள்ள முடியும் ஆனால் விஷுவல்லாக எந்த குறையும் இல்லை. யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது பாடல் முதல் ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும் பாடல் வரைக்கும் ஒரு நல்ல சவுண்ட் டிராக் என்பதில் பிரச்சனை இல்லை. கிளைமாக்ஸ் போர்ஷன் இன்னும் கிராண்ட்டாக இருந்திருக்கலாம் , மற்றபடி அழகாக எடுக்கப்பட்ட அந்த ரொமான்டிக் டான்ஸ் காட்சிகள் மற்றும் சந்தானத்தின் டைமிங் காமிக் டயலாக்ஸ் படத்துக்கு பிளஸ் பாயிண்ட். ஆனால் கதை கொஞ்சம் அவுட் டேட்டட்  என்பதை மறுக்க முடியாது.  குறிப்பாக கிளைமாக்ஸ் ஃபைட் இன்னும் கிராண்ட்டாக இருந்து இருக்கலாம். மொத்தத்தில் ஒரு டீசண்ட் எண்டர்டெயின்மெண்ட். ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம். 

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...