Friday, September 22, 2023

BLACK V. WHITE - LIFE IS CHESSBOARD - இது ஒரு அருமையான கருத்து !!!

நான் இந்த வலைப்பூவில் மிகவும் அதிக நாட்களாக பதிவுகளை பதிவிட்டு வருகிறேன். இந்த வலைப்பூவில் கருத்துக்களை பதிவு பண்ணுவதால் நான் போதுமான மன நிறைவை பெறுகிறேன் அது வேறு விஷயம். ஆனால் இப்போது ஒரு முக்கியமான விஷயத்தை பார்க்கலாம். இந்த உலகத்தில் எல்லோரையும் நல்லவர்கள் என்றும் கெட்டவர்கள் என்றும் பிரிக்க முடியுமா ? இப்படி பிரிப்பதுதான் தவறு ! நீங்க கேட்கலாம் முழுக்க முழுக்க நல்லவர்களாக இருக்கலாமேன்னு ? கடவுள் சத்தியமாக சொல்கிறேன் போதுமான பணம் , பொருள் , இல்லையென்றால் மன நிறைவும் இல்லையென்றால் அது நடக்காது. 

தன்னை பெரிய நல்லவர்கள் என்றும் வீட்டையும் குடும்பத்தையும் சந்தோஷமாக பார்த்துக்கொள்கிறேன் என்றும் சொல்லிக்கொள்வார்கள் ஆனால் அவர்களால் கடைசி வரைக்கும் நல்லவர்களாக இருக்க முடியாது. இப்போ பி-காம்ப்ளக்ஸ் விட்டமின்களின் சத்துமானத்துக்காக கோழிக்கறி , ஆட்டுக்கறி , அசைவ உணவுகள் , முட்டை மற்றும் பால் ஆகியவற்றை உடலுக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நுணுக்கமான நரம்புகள் சத்துமானம் இல்லாமல் பாதிப்பு உருவாகும் , கண்கள் பார்வை குறையவும் காதுகள் கேட்காமல் போகவும் நிறைய வாய்ப்புகள் உள்ளது, பி காம்ப்ளக்ஸ்  விட்டமின்கள் சேர்த்துக்கொள்ளாமல் போனால் உடல்நலம் பாதிக்கவும் காரணமாகலாம் இதனால் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரு உயிரினத்தை கொன்று சாப்பிடுவது தவறு இல்லை என்றுதான் இயற்கை நியதி இருக்கிறது. அப்படி இருக்கும்போது வரலாற்றுடைய எந்த பாகத்தில் இந்த நல்லவர்கள் - கெட்டவர்கள் என்ற கதைகள் உருவாகியிருக்கும் ?

இங்கதான் நான் ஒரு அருமையான கருத்து சொல்கிறேன் கேளுங்கள் ! இந்த நல்லவனாக இருப்பது , நல்லவர்கள்தான் கடைசியில் ஜெயிப்பார்கள் இது எல்லாமே தோற்றுப்போனவர்கள் சேர்ந்து உருவாக்கிய கற்பனை விஷயங்கள். ஒரு மனுஷனா பிறந்த நல்லது செய்ய வேண்டிய கட்டாயத்தில் நல்லது செய்துதான் ஆக வேண்டும் கெட்டது செய்ய வேண்டிய கட்டாயத்தில் கெட்டது செய்துதான் ஆக வேண்டும். ஒருவர் பண்ணிய கெட்ட விஷயங்களை மன்னிக்க மட்டும்தான் முடியும் ஆனால் செய்த விஷயங்கள் இல்லை என்று ஆகாது, அடுத்தவர்கள் நல்ல விஷயத்தை ஈஸியாக மறந்து விடுவார்கள் ஆனால் கெட்ட விஷயங்களை நன்றாக நினைவுக்குள் வைத்துக்கொள்வார்கள். அப்படி இருக்கும்போது வரலாற்றில் கெட்ட விஷயங்கள்தான் நிலைக்கும். 

உங்களுடைய பெர்சனல் லைப்ல நீங்க நல்லவர்களாகவும் இருக்கலாம் கேட்டவர்களாகவும் இருக்கலாம். நல்லவர்கள் 100 வருடம் வாழ்க்கையை கஷ்டப்பட்டு வாழ்வார்கள், கெட்டவர்கள் 100 வருடம் வாழ்க்கையை சந்தோஷமான வகையில் வாழ்வார்கள். பழைய பழமொழிகளை விட்டுவிடுங்கள். நீங்கள் நல்லவர்களாக இருந்தால் கொஞ்சம் பேர் உங்களுக்கு எதிரியாக இருப்பார்கள். கெட்டவர்களாக இருந்தால் நிறைய பேர் உங்களுக்கு எதிரியாக இருப்பார்கள். வருங்கால பாட புத்தகத்தில் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி கெட்டவர்களாக இருந்தாலும் சரி நிறைய வெற்றிகளை அடைந்து யாராலும் தொடக்கூட முடியாத பொசிஷன்னில் இருக்க வேண்டும். 

நல்லது கெட்டது - சரி தவறு என்று பார்க்க வேண்டாம் , வாழ்க்கை என்பதே செயல்கள்தான் , நல்ல செயல்கள் மற்றும் கெட்ட செயல்கள் என்று பிரிக்க முடியாது !! வெறும் செயல்கள் !! உங்களுக்காக ஒருவர் வேலை செய்கிறார் என்றால் அவர் நல்ல செயல்களையும் செய்வார் மேலும் கெட்ட செயல்களையும் செய்வார் ஆனால் அவர் செய்த கெட்ட செயல்களுக்காக அவர் வெளியே அனுப்பப்பட்டால் அவர் இல்லாமல் அந்த வேலையை முடிக்க முடியாது !! கவனம் தேவை - வாழ்க்கை ஒரு செஸ் போர்ட் போன்றது . நல்ல விஷயமும் கெட்ட விஷயமும் சரியாக பாதிக்கு பாதி இருந்துதான் ஆக வேண்டும்; இங்கே எல்லோருமே நல்லவர்களாக இருந்தாலும் கெட்டது நடக்கும். ஆனால் நல்லவர்கள் ஒருவர் பண்ணிய சின்ன தப்புக்கு கூட கொடூர தண்டனைகளை கொடுத்துவிடுவார்கள். அப்படி இருக்கும்போது இவர்களுக்கு கெட்டவர்களாக இருப்பதே மேல் என்றுதான் தோன்றும். 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...