இந்த படத்தை எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது என்றே தெரியவில்லை. பணக்கஷ்டத்தின் அதிகபட்சத்தில் இருக்கும் ஒரு குடும்பம் - இந்த குடும்பத்தில் போதுமான வருமானம் இல்லாததால் நல்ல வேலையாக தேடுகிறார்கள். இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஒரு பணக்கார வீட்டில் ஒரு டியூஷன் ஆசிரியராக ஒரு வேலை. தன்னுடைய நண்பனின் உதவியால் அந்த வீட்டின் இளைய சகோதரன் கீ-வூ - அந்த வீட்டின் சம்பளம் அதிகமாக உள்ளதால் போலி சர்டிபிகேட் அடித்து அந்த வீட்டில் வேலையை பிடிக்கும் கீ-வூ தன்னுடைய அக்கா கீ-ஜங்க்கு பணக்கார குடும்பத்தின் கடைக்குட்டி குழந்தைக்கான ஓவிய ஆசிரியர் வேலையை வாங்கி கொடுக்கிறார். இந்த இருவருமே போலியானவர்கள் என்று பணக்கார குடும்பத்துக்கு கடைசி வரை தெரியாது.
கொஞ்சம் கொஞ்சமாக பணக்கார குடும்பத்தை நம்பவைத்து அப்பாவை பெர்சனல் டிரைவர்ராகவும் அம்மாவை வேலைக்கார பெண்மணியாகவும் மாற்றுகிறார். பணக்கார குடும்பத்தின் நம்பிக்கையால் அவர்களை நன்கு ஏமாற்றி அவர்கள் வீட்டுக்குள் நுழைந்த பார்க் குடும்பத்துக்கு அங்கே காத்திருந்த அதிர்ச்சி என்ன ? கடைசியாக குடும்பம் சந்தித்த பேராபத்து என்ன ? என்று இந்த படத்தின் கதை செல்கிறது !
படம் ஒரு அளவுக்கு மிக்ஸ்ஸான விமர்சனங்கள்தான். பெஸ்ட் படம் என்று சொல்ல முடியாது. ஒரு சினிமாவாக பெர்பெக்ட்டாக எக்ஸ்ஸிக்கியூட் பண்ணப்பட்ட படம் என்று சொல்லலாம். வாழ்க்கை மிக மிக உயர் தரத்தில் வாழும் பணக்கார வாழ்க்கைக்கும் அடிமட்டத்தில் வாழும் ஏழை வாழ்க்கைக்கும் ஒரு நேர் எதிர் போராட்டமாக இருந்தால் அந்த போராட்டத்தின் முடிவு கடைசியில் எத்தனை உயிர்களை பாதிக்கும் என்று இந்த படத்தின் கிளைமாக்ஸ். நிறைய அகடமி அவார்ட்களை வாங்கியுள்ளதால் ஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் லைப் ஆஃப் பைய் படங்களை போல ஒரு ஃபாரீன் படமாக இருந்தாலும் நல்ல டெபுட்தான். ஒரு ஆஸ்கார் விருது ஒரு பக்கத்துக்கு சாதகமாக கொடுக்கப்படுவது இல்லை என்பதற்கு இந்த படம் ஒரு நல்ல எக்ஸாம்பில்.
No comments:
Post a Comment