இந்த படத்தை பார்க்கும்போது பொதுவாக கமர்ஷியல் மாஸ் படங்களிலும் இவ்வளவு ஸ்ட்ராங்க்கான ஸ்கிரிப்ட்டை கொண்டு வர முடியுமா என்று ஆச்சரியமாக உள்ளது. நிறைய கமர்ஷியல் படங்கள் ஹீரோ வில்லன் சண்டை என்று உங்கள் நேரத்தை சோதனைக்கு உள்ளாக்கிவிடும் ஆனால் இந்த படம் மிக மிக பெஸ்ட்டாக இருந்தது. 1990 களில் பணக்கார குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் திருமணம் இல்லாமல் பிறந்ததால் புஷ்பராஜ் தனித்து விடப்படுகிறார். ஆனால் வாழ்க்கையில் பணம் சம்பாதித்து அதிகாரத்தை உள்ளங்கைக்குள் கொண்டு வர வேண்டும் என்று வைராக்கியமாக ஒரு மிகப்பெரிய மரக்கட்டை கடத்தும் நெட்வொர்க்கேயை கொஞ்சம் கொஞ்சமாக இவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார் புஷ்பராஜ். போதுமான சப்போர்ட் இல்லை என்றாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தனி ஒரு மனிதனாக எதிர்க்கிறார். இவருடைய வாழ்க்கையில் நடக்கும் மோதல்கள் ஒரு பக்கம் போகவே இன்னொரு பக்கம் காதல் முதல் கல்யாணம் வரை என்று இன்னொரு டிராக் போகிறது. மொத்தத்தில் படம் ஒரு கமர்ஷியல் மாஸ் எண்டர்டெயின்மெண்ட். கதாநாயகராக அல்லு அர்ஜூன் கதாநாயகியாக ராஸ்மிகா ஒரு மிகவும் பெட்டாரான சாய்ஸ். கமர்ஷியல் சாயம் கலந்து இருந்தாலும் ஆக்ஷன் காட்சிகள் மிகவும் சிறப்பான சினிமாடோகிராபியில் கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்டண்ட் வேற லெவல். வில்லன்களாக நடிக்கும் கதாப்பத்திரங்கள் மிகவும் ஸ்ட்ராங்க்கான ஆக்டிங் கொடுத்துள்ளனர். ஒரு மாஸ் படம் என்று இருந்தாலும் ஆக்டிங் ஸ்டாண்டர்ட் இன்னொரு லெவல்லில் இருப்பதால் இந்த படம் ரசிக்கும் படியான பெர்ஃபார்மன்ஸ்களை உள்ளடக்கியுள்ளது. சுனில் பிரமாதமான வில்லனாக மிரட்டுகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் வந்து அடுத்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு நிரந்தரமாக ஒரு பிராமிஸ் கொடுத்துவிட்டு செல்கிறார் ஃபாஹத் ஃபஸில். அடுத்த படம் புஷ்பா - THE RULE -ல் பயங்கரமான ஆக்ஷன் கன்ஃபார்ம்மாக உள்ளது.
No comments:
Post a Comment