Wednesday, September 13, 2023

CINEMA TALKS - VELAYUDHAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

இந்த படம் வெளிவந்தபோது ஒரு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. விஜய் நடித்த கமர்ஷியல் திரைப்படங்களில் அவருடைய மாஸ் எப்போதுமே பெஸ்ட்டாகத்தான் இருக்கும். இந்த படத்துக்கு ஒரு வருடம் முன்னாடி வந்த சுறா படம் கொஞ்சம் டிஸப்பாயிண்ட்மெண்ட்தான். ஆனால் இந்த படம் ஃபேன்ஸ்க்கு ஒரு நல்ல பேக்கப்பாக இருந்தது. ப்ரொடக்ஷன் பட்ஜெட்க்கு டீசண்ட் பாக்ஸ் ஆஃபிஸ். ஆனால் காரணங்கள் என்ன ?

இந்த படத்துடைய கதை. ஒரு கிராமம் , ஒரு குடும்பம் , நண்பர்கள், வட்டாரங்கள் என்று ஒரு இயல்பான வாழ்க்கையை விஜய் வாழ்ந்துகொண்டு இருக்கும்போது சந்தர்ப்பம் சூழநிலைகள் காரணமாக மக்களால் நம்பப்படும் வேலாயுதம் என்ற கதாப்பத்திரமாக விஜய் நிறைய சமுதாய குற்றங்களை பொறுப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ள கட்டாயம் வருகிறது. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ப்ராக்ரஸ் ஆகும் இந்த கதை கடைசியில் ஒரு பெரிய நெட்வொர்க்கயே விஜய் தனியாக எதிர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு வரும்போது அடுத்து என்ன நடக்கும் ? என்பதுதான். 

இந்த படத்தின் பெரிய பிளஸ் பாயிண்ட் விஜய் ஆண்டனியின் பின்னணி இசை மற்றும் சூப்பர் ஹிட் பாடல்கள். சிலலாக்ஸ் பாடல் கண்டிப்பாக நிறைய பேரின் ஸ்போட்டிஃபை பிளேலிஸ்ட்டில் டாப் லெவல்லில் இருக்கும். முன்னதாக வெளிவந்த சுறா படத்தில் வித்யா சாகர் தெலுங்கு ஹிட் ட்யூன்களையே தமிழுக்கு பயன்படுத்தியதால் அவ்வளவாக இசை இம்ப்ரஸ் பண்ணாவில்லை ஆனால் இந்த படம் நல்ல இம்ப்ரஷன். 

ஒரு விஜிலன்ட் சூப்பர் ஹீரோ லெவல்க்கு ஒரு கேரக்டர் டேவலப்மெண்ட் கொடுக்கணும் அதே நேரத்தில் ஹ்யூமர் என்ற வகையிலும் ஒரு நேர்த்தியான கதையின் ஃப்லோ இருக்க வேண்டும் என்று முயற்சி பண்ணியது படத்துக்கு ஒரு அளவுக்கு சக்ஸஸ் கொடுத்துள்ளது. குறிப்பாக கந்தசாமி படத்தின் மிஸ்டேக்கள் இந்த படத்துக்கு இல்லை. 

கிளைமாக்ஸ்ஸில் சகோதரியை காப்பாற்றுவதாக முடிவு இருந்திருக்கலாம் என்றாலும் கிளைமாக்ஸ் காட்சிகள் கதையுடன் நன்றாகவே பொருந்துகிறது. ஜெனிலியா மற்றும் ஹன்ஸிகா பெர்பெக்ட் பேர் என்பதாலும் சந்தானம் காமெடி டிராக் நன்றாகவே வொர்க் அவுட் ஆனதாலும் ஒரு கமர்ஷியல் விஜய் படத்தின் எல்லா விஷயங்களையும் திறன்மிக்க ஃபேமஸ் ஸ்டார்ஸ்களின் பட்டாளம் பூர்த்தி செய்துவிட்டது. இந்த படம் பெஸ்ட் பாக்ஸ் ஆஃபிஸ் கொடுக்க நல்ல காரணங்கள் இந்த படத்தில் இருக்கிறது. வேலாயுதம்  - வெற்றியை விட்டுக்கொடுக்கவில்லை.

இந்த படத்தை ஆம்பிஷன் வகையில் பார்க்கும்போது ஒரு நல்ல தமிழ் சூப்பர்ஹீரோ படத்துக்கான என்ட்ரி எனலாம். டெக்னிக்கல் பாயிண்ட் ஆஃப் வியூல அந்நியன் உங்களுக்கு பெட்டர் என்று படலாம். கந்தசாமி படம் கமர்ஷியல் எலிமெண்ட்ஸ்க்காக அவ்வளவு இம்ப்ரஸ் பண்ணாமல் போய்விட்டது. முகமூடி கூட ஒரு நல்ல முயற்சிதான். மேலும் ஹீரோ அதிகமான சூப்பர் ஹீரோ எலிமெண்ட்ஸ் இல்லை என்றாலும் பார்க்க வேண்டிய படம். வீரன் படம் வேற லெவல். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...