ஒரு இண்டரெஸ்ட்டிங் ஆன க்ரைம் நாவல் படித்து இருக்கிறீர்களா ? பொதுவாக ரெட்ரோ காலத்தின் க்ரைம் நாவல் படிப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம் உள்ளது ! நம்ம ஹீரோக்கள் மிக துல்லியமாக இன்வெஸ்ட்டிகேஷன் பண்ணுவார்கள் இருந்தாலும் வில்லன்கள் சாமர்த்தியமாக தப்பிப்பார்கள். இந்த போட்டி மிகவும் ஸ்வரஸ்யமாக இருக்கும்.
ஒரு சினிமா படத்தில் இவ்வளவு விறுவிறுப்பு நிறைந்த கதையை பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. இந்த படத்துடைய கதையை பார்க்கலாம். காவல் துறையில் படிப்பு படித்து உயர் அதிகாரியாக வேலைக்கு சேருகிறார் கதாநாயகன் அசோக் செல்வன். இப்போது அவருக்கு கொடுக்கப்படும் முதல் கேஸ் அவருடைய திறமைக்கு மிகப்பெரிய சோதனையாக இருக்கிறது.
தொடர் கொலைகளில் பின்னணி என்னவென்று கண்டறிய முடியாததால் ஒரு ஒரு மூன்று நாளுக்கும் ஒரு உயிர் பறிபோகிறது. தன்னோடு பணிபுரிபவர்கள் அனைவரிடமும் கடினமாக நடந்து கொள்ளும் சரத் குமார் மற்றும் இணைந்து பணிபுரியும் அனாலிஸ்ட் நிகிலாவின் கதாப்பத்திரங்கள் அருமை !
கென்னடி செபாஸ்டியன் வில்லன் கதாப்பத்தித்தில் பயங்கரமாக வில்லனாக சரத் பாபு சிறப்பாக கத்தப்பத்திரத்தை நடித்து கொடுத்துள்ளார். இன்டர்வல் வரைக்கும் சஸ்பன்ஸ் கொடுத்து இன்டர்வேல்க்கு பின்னால் திரில்லின்ங் ஆன ஒரு வேறு லெவல் காட்சித்தொகுப்பு கொடுத்து கதையின் விறுவிறுப்பு கூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சரத் பாபு பிளாஷ் பேக் வேறு லெவல்.
இந்த படம் 2010 களில் நடப்பதாக செட் பண்ணப்பட்டு இருப்பதால் அந்த காலத்தின் கூகிள் ஹோம் பேஜ் முதல் ஆப்பிள் ஹெட்ஃபோன் வரைக்கும் டெக்னாலஜியில் டீடெயில்லிங்க் கொடுத்து இருப்பது படத்துக்கு இன்னும் ஒரு பிளஸ் பாயிண்ட். மேலும் கதையை விட்டுவிட்டு காதல் டிராக்குக்கு கதை கடைசி வரைக்கும் போகாமல் இருந்தது இன்னும் ஒரு பிளஸ் பாயிண்ட்.
2000-2015 வரையிலான காலகட்டத்தை தமிழ் சினிமாவின் பொற்காலம் எனலாம் , மேஜர் காமிரா டெக்னோலஜிக்கள் அப்போதுதான் களம் இறக்கப்பட்டது. டெக்னாலஜியினால் கதை எழுதப்படுவது முதல் போஸ்ட் பிராசசிங் வரைக்கும் சினிமாவின் அனைத்து துறைகளுக்கும் ஒரு பெரிய அப்கிரேடு கொடுத்த காலகட்டம் இந்த காலகட்டம். இந்த காலகட்டத்தில் நடக்கும் ஒரு கதை என்பதால் நேர்த்தியாக காட்டியுள்ளார்.
ஒரு பெர்பெக்ட் சூப்பர் ஹிட் க்ரைம் படம் எடுக்க வேண்டும் அதே நேரத்தில் அதிகமாக மக்கள் விரும்பும் வகையிலும் அந்த படம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த படத்தை உங்களுக்கு ரெஃபரென்ஸ்ஸாக எடுத்துக்கொள்ளலாம் அந்த அளவுக்கு இந்த படம் சிறப்பானது.
No comments:
Post a Comment