Wednesday, September 13, 2023

CINEMA TALKS - LIFT - TAMIL REVIEW - A PERFECT HORROR FILM ! - திரை விமர்சனம் !



ஒரு பெஸ்ட் ஆஃப் பெஸ்ட்  ஹாரர் படம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா ? அப்படியென்றால் உங்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். ஒரு பிரைவேட் ஐ.டி. ஆஃபிஸ்ஸில் வேலை பார்க்கிறார் குருபிரசாத் . யாரையுமே கண்டுகொள்ளாத ஒரு தைரியமான துல்லியமாக செயல்படும் ஒரு ஐ. டி. எம்ப்ளாய்யர். இவர் அடிக்கடி ஹரிணியின் வாழ்க்கையில் பார்க்கும்போதெல்லாம் மோதலாகவே முடியும்படி நடந்துகொள்கிறார். ஆனால் ஒரு நாள் குரு-ஹரிணி இந்த இரண்டு பெரும் ஆஃபிஸ் விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு பேய்கள் கட்டுப்பட்டுக்குள் அடைபட்டு கொள்கிறார்கள்.

ஒரு புதிர் கட்டிடம் போல கதவுகள் , ஜன்னல்கள் , படிக்கட்டுகள் என்று எங்கே சென்றாலும் அதே இடத்துக்கு திரும்ப வருவதால் இனிமேல் இந்த இருவரும் எடுக்கப்போக்கும் சாமர்த்தியமான முடிவுகள் இவர்களை வெளியே கொண்டு வருமா ? என்று ஒரு விறுவிறுப்பான கதைக்களத்தில் படம் செல்கிறது. 

காஞ்சனா . டார்லிங் , அரண்மனை ஃபிரான்சைஸ் போல படத்தையை காமெடிக்காக தியாகம் பண்ணாமல் ஒரு உறுதியான திரைக்கதை படத்துக்கு மாஸ் ஸ்டேட்டஸ் கொடுக்கிறது. குறிப்பாக கவின் இதுவரை பயமுறுத்திய சக்திகளை நேருக்கு நேராக எதிர்க்கும் காட்சிகள் வேறு ரகம். கவின் மற்றும் அமிர்தா இந்த படத்துக்கு ஒரு பாண்டஸ்டிக் சாய்ஸ். இந்த கதாபாத்திரங்களுக்கு மிகவும் சிறப்பாக நடிப்புத்திறன் கொடுத்துள்ளனர். கண்டிப்பாக பாராட்டலாம். 

இரண்டு மணி நேரம் போவதே தெரியாமல் படம் அட்வென்சர்ராக போகிறது. இந்த படத்தின் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் பார்த்தவர்களுக்கு துல்லியமான சவுண்ட் மிக்ஸ்ஸின்க் வேறு லெவல் அனுபவம் கொடுத்து இருக்கும். 

பொதுவாக ஹாரர் பிலிம்கள் கிட்டத்தட்ட நல்ல பாக்ஸ் ஆஃபிஸ் கொடுத்துவிடுதால் சாலிட்டான ஸ்கிரீன்-பிளேயை மிஸ் பண்ணுகின்றன. ஆனால் லிப்ட் அப்படி இல்லை. லிப்ட் படம் அதனுடைய சஸ்பன்ஸ் கடைசி வரைக்கும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதுதான் படத்தின் வெற்றிக்கு செம்ம பிளஸ் பாயிண்ட். இந்த படம் மொத்தத்தில் கிளைமாக்ஸ் வரைக்கும் ஒரு விறுவிறுப்பான சாலிட் கோஸ்ட் ஹான்ட் அட்வென்சர்.

இந்த LIFT படத்துல கவின் போனில் இருக்கும் RINGTONE என்ன ? டிக்கி டிக்கா !! சிக்கி சாங்குச்சான்னு என்னமோ வருமே !! இந்த RINGTONE என்னன்னு ரொம்ப நாட்கள் தேடினேன் !! இது , உனக்கும் எனக்கும் ஆனந்தம் அப்படின்னு ஒரு பாட்டுடைய YOUTUBE REMIX வெர்ஷன் ! YOUTUBE ல பாருங்க கண்டிப்பாக இருக்கும். KAVIN PHONE RINGTONE IN LIFT MOVIE ! 😎🎵🎵🎵🎵🎵🎵🎶🎶🎶🎶🎶🎶🎼🎼🎼🎼🎺🎺🎺🎺🎺🎻🎻🎻🎻🎻🎹🎹🎹🎹🎹

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...