ஒரு காவல் துறை அசைன்மெண்ட்க்காக அருள்நிதி ஒரு பயங்கரமான கொலை- கொள்ளை கும்பல் குறித்த பழைய கேஸ் ஃபைல்லை எடுக்கிறார், இந்த கொலைகார கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க நெருங்க அருள்நிதியும் அவருக்கு உதவியாக இருக்கும் காவல் துறை துணை ஆய்வாளரான பவித்ராவும் கிடைக்கும் தகவல்களை எல்லாம் வைத்து கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார்கள். ஆனால் ஒரு இன்வெஸ்டிகேஷன் படத்தில் யாருமே எதிர்பார்க்காத ஒரு இண்டர்வெல் டுவிஸ்ட் கொடுத்த படம் இந்த படம்.
படத்துடைய ஒரு பாகம் ஒரு பக்காவான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்ற கவனத்தில் பயணித்தாலும் அடுத்த இன்னொரு பாகம் ஒரு சூப்பர் நேச்சுரல் என்ற ஜேனரில் பயணிக்கிறது. சின்ன சின்ன குறிப்புகள் ஆரம்ப காட்சிகளில் கொடுத்தாலும் இண்டர்வெல் டுவிஸ்ட் படத்துக்கு இன்னொரு லெவல் அப்கிரேடு என்றே சொல்லலாம். சிறப்பான நடிப்பு திறன், நிறைய நைட் டைம் காட்சிகளில் தரமான லைட்டிங் அண்ட் காமிரா வொர்க். போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் பக்காவான எடிட்டிங் என்று மிகவும் ஸ்பெஷல் ஆன இந்த டைரி திரைப்படம் ஒரு பிளஸ் பாயிண்ட்.
சூப்பர் நேச்சுரல் ஹாரர் படங்களை பார்த்தால் டெமோனடி காலனி , லிப்ட் போன்ற படங்கள் சூப்பர் நேச்சுரல் பட்டியலின் ஜெனரில் இருந்தாலும் இப்போது இந்த படம் ஒரு நல்ல எஸ்கேப்பிஸ்ட் ஸ்கிரீன் ட்ரீட்மெண்ட். ஒரு தற்கால கட்டுக்கதையாக நம்பக்கூடிய விஷயத்தை ஒரு ஹைவேஸ் பயணத்தோடு மேட்ச் பண்ணி சோர்ஸ் மெடீரியல்க்கு இன்னொரு லெவல் பரிணாமத்தையே கொடுத்துள்ளதால் இந்த படத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.
மொத்த சினிமா வரலாற்றுக்களை எடுத்துக்கொண்டாலும் கமர்ஷியல் தமிழ் சினிமாக்களின் வெற்றிப்பட்டியலில் சேர்த்து பார்த்தால் இந்த படத்துக்கு கண்டிப்பாக டாப் ஃபைவ் பொசிஷன் கிடைக்கும்.
No comments:
Post a Comment