ஒரு பக்கம் EVERYTHING EVERYWHERE ALL AT ONCE - இது ஒரு மல்டிவேர்ஸ் பற்றிய ஒரு படம் - இந்த மல்டிவேர்ஸ் சம்மந்தப்பட்ட படங்கள் அடிக்கடி இப்போது பார்க்க முடிகிறது, ஒரு கத்தாப்பாத்திரம் நாம் பார்க்கும்போது இதே கதாப்பத்திரம் வேறு ஒரு சூழ்நிலையில் வேறு ஒரு மனிதனாக வளர்ந்து வேறு குணநலன்களுடன் வேறு நினைவுகளுடன் ஒரே கதைக்குள் இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் மல்டிவேர்ஸ் ரசிகர்களின் ஆவல், அதாவது அய்யங்கார் அம்பி , ப்ளேபாய் ரெமோ , விஜிலண்ட் அந்நியன் இந்த மூவரும் ஒரே டைம்லைன்னில் இருக்க வேண்டும்.. இல்லையென்றால் அவெஞ்சர்ஸ் இருக்கும் உலகத்தை விட்டுவிட்டு ஜஸ்டிஸ் லீக் உலகத்தில் குதிக்க வேண்டும். ஸ்டுடியோ பற்றி கவலை இல்லை. ஒரே படத்தில் நிறைய பரிமாணங்களை பார்க்க வேண்டும் என்று மல்டிவேர்ஸ் வகையில் நிறைய கற்பனை பண்ணும் சினிமா ஆர்வலர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல தீனியாக இருக்கும்.
வாஷிங் மெஷின் நிறுவனத்தால் சின்ன அளவில் துணிகளை சலவை போடும் வேலை செய்து வருமானம் ஈட்டும் ஒரு அம்மா- அப்பா - இவர்களுடைய மகள் தன்னுடைய பெண் இனத்திலேயே திருமணம் செய்ய வேண்டும் என்று குடும்பத்தில் ஒரு குழப்பம் கொண்டுவரும்போது இந்த மல்டிவேர்ஸ் நிகழ்ச்சி நடக்கிறது. மகளை காப்பாற்ற வேண்டும் என்றால் அம்மா அவருடைய அனைத்து மாறுப்பட்ட பிரபஞ்சத்தில் இருப்பவர்களின் நினைவுகளையும் தன்னுடைய மூளைக்குள் பதிவு பண்ணிக்கொண்டு இப்போது வில்லனாக இருக்கும் அவருடைய மகளின் வில்லன் வெர்ஷன்னை தோற்கடிக்க வேண்டும் என்று ஒரு நாடக பாணியில் தொடங்கும் கதை ஆக்ஷன் பாணிக்கு அவதாரம் எடுக்கிறது. கண்டிப்பாக இந்த படம் 25+ தான். படத்தை ஃபேமிலியோடு பார்க்க வேண்டாம். தனியாக பாருங்கள்.
No comments:
Post a Comment