இயக்குனர் மணிரத்னம் ஒரு படத்தை கொடுக்கும்போது அந்த படத்துடைய யுனிவெர்ஸ்க்குள் ஆடியன்ஸ்ஸை கொண்டுபோய்விடுவார். அந்த வகையில் ஒரு பெர்பெக்ட்டான க்ரைம் பிலிம் லேஜெண்ட்ஸ் சீனியர் ஆக்டர்ஸ் எல்லோருமே சேர்ந்து நடித்த படம் என்றால் சொல்லவா வேண்டும். இந்த படம் வேற லெவல்லில் இருக்கும். இந்த படம் தொடங்கும்போது காட்பாதர் படம் போலத்தான் இருக்கும் என்று பலர் தெரிவித்து இருக்கலாம் ஆனால் இந்த படம் ஒரு தனித்த ORIGINAL லான கதையாக உங்களுக்கு பிடித்த க்ரைம் படங்களின் பட்டியலில் ஒரு தனி இடத்தை பிடித்துவிடும் என்று நான் உங்களுக்கு கண்டிப்பாக உத்தரவாதம் கொடுப்பேன்.
மிகப்பெரிய க்ரைம் சாம்ராஜ்ஜியத்தின் தலைவராக இருக்கும் சேனாபதியின் மறைவுக்கு பின்னால் மூன்று வேறு வேறு இடங்களில் தனித்தனியாக வளர்க்கப்பட்ட மூன்று மகன்கள் மொத்த கிரிமினல் நெட்வொர்க்கையும் கைக்குள் போட்டுக்கொள்ள நடக்கும் போட்டியாக இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. ப்ரிமியம்மான ரகுமான் இசை, மேலும் வண்ணங்களை அப்படியே கேப்சர் பண்ணி ஒரு தனி உலகத்துக்கே கொண்டுபோகும் மிக தெளிவான ஒளிப்பதிவு கொடுத்துள்ளார் சந்தோஷ் சிவன். படத்தின் ஒரு ஒரு காட்சியும் அடுத்து என்ன நடக்கும் என்று விருவிருப்பை சேர்ப்பதால் கிளைமாக்ஸ்ஸில் விஜய் சேதுபதியின் பெர்ஃபார்மன்ஸ் யாருமே எதிர் பாரத ஒரு பெரிய சர்ப்ரைஸ். பாடல்களின் விஷுவல்கள் படத்தின் க்ரைம் டோன்க்கு கொஞ்சம் வெளியே என்றாலும் லொகேஷன் செலக்ஷன்ஸ் வேற லெவல் என்பதால் படத்தை மொத்தமாக ரசித்து பாராட்ட முடிகிறது. ஒரே வரியில் சொல்லப்போனால் ஒரு அருமையான படம்.
No comments:
Post a Comment