இப்ப உங்களுக்கு நம்ம தனுஷ் சாரை பிடிக்கும்ன்னு வெச்சுக்குவோம், ஆனால் ரொம்ப பணக்கார ஸ்டுடியோ ஒன்று நம்ம தனுஷ் சாரை ஸ்கேன் பண்ணிட்டு அவருடைய வாய்ஸ் ரெகார்ட் பண்ணிட்டு இனிமே எந்த படம் எடுத்தாலும் நம்ம தனுஷ் அந்த படத்துல நடிக்கலேனாலும் கம்ப்யூட்டர் ஸ்கேன் பண்ணி நடிக்க வெச்சா என்ன ஆகும் ?
தனுஷ் சாருக்கே இந்த லெவல்ல பிரச்சனை கொடுக்க ஒரு கம்ப்யூட்டர் டப்பாக்களால் விசுவல் எஃபக்ட்ஸ் கொடுக்கும் ஸ்டுடியோவால் முடிந்தால் சின்ன சின்ன ஆக்டர்ஸ் எல்லோரையும் ஸ்கேன் பண்ணி ஒரு சின்ன தொகையை கொடுத்துட்டு பின்னாடி தேவைப்படும் போது எல்லாம் 2035 ல கூட பயன்படுத்திக்குவாங்க இந்த ஸ்டுடியோக்கள்.
இது எல்லாமே மார்வேல்ன்னால ஆரம்பிச்சதா ? நேரடியாக இல்லை ! மறைமுகமாக சொல்லலாம் ! சூப்பர் ஹீரோ படம் என்று வரும்போது நேரடியாக ஸ்டண்ட் பண்ணாமல் விசுவல் எஃபக்ட்ஸ் பண்ணி கேரக்டர் டிசைன் பண்ணும் டெக்னோலஜி வந்துச்சு !
இப்போ HULK க்காக நம்ம நடிகர் மார்க் ரப்பலோவை 1200 கிலோ வெயிட் மற்றும் 8 அடிக்கு மேல் ஹெய்ட் இருக்கும் பயில்வானாக மாற சொன்னால் முடியுமா ? ஆனால் FREE GUY படத்தில் நம்ம RYAN REYNOLDS கிளைமாக்ஸ்ல பயில்வானாக இருக்கிறார் ! அது எப்படி ?
உண்மையில பயில்வானாக இருந்த ஒரு நடிகர்தான் அவருடைய உடம்பை ஸ்கேன் பண்ணி ஹீரோவான ரேயான் ரேனால்ட்ஸ் முகத்தோடு மேட்ச் பண்ண உதவி பண்ணியிருக்கிறார் ! இப்படியே ஸ்டுடியோ எல்லோரையும் ஸ்கேன் பண்ணிவிட்டு AI வைத்து கதையை எழுதிவிட்டால் உலகம் எங்கே போகும் ! மனுசங்க எல்லாம் இவங்க கொடுக்கும் 5000 , 10000 , என்ற சின்ன தொகைக்காக உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுக்க வேண்டுமாம் ஆனால் கம்ப்யூட்டர் டப்பாக்களை வைத்து அனைத்து உழைப்பையும் ஸ்டுடியோக்கள் உறிஞ்சிக்கொள்வார்களாம் !
VID
டெட்பூல் 2 படம் எடுக்கும்போது ஒரு பைக் ஸ்டண்ட்ல ஒரு இளம் ஸ்டண்ட் பெண்மணி அவங்களுடைய உயிரை தியாகம் பண்ணினாங்க ! அவங்களுக்காக மொத்த படமும் டேடிகேட் பண்ணப்பட்டுச்சு ! ஆனால் கம்ப்யூட்டர் வைத்து இதுபோன்ற ஸ்டண்ட்களை வரைந்துவிட்டால் நிஜமாகவே ஸ்டண்ட் பண்ணும் துறையில் இருப்பவர்கள் சம்பளத்துக்கு என்ன பண்ணுவார்கள் ? நிறைய படங்களுக்கு எழுத்தாளர்கள் நல்ல நல்ல ஸீன் கொடுத்துள்ளார்கள் , உதாரணத்துக்கு "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தில் கூட அந்த கிளைமாக்ஸ் டுவிஸ்ட் ! கார்த்திக் காதல் படத்தில் ஜெயித்தாலும் நிஜத்தில் பிரிந்து விட்டார்கள் என்ற டுவிஸ்ட் ! இந்த டுவிஸ்ட் கதைகளை எழுதும் குழுவிடம் நம்ம கௌதம் வாசுதேவ் மேனன் பேசியதால் மட்டும்தான் கிடைத்துள்ளது.
சும்மா இல்லைங்க ! அவெஞ்சர்ஸ் மட்டும் 8800 கோடி கலெக்ஷன் பண்ணியுள்ளது ! ஆனால் ஸ்டண்ட் குழுவில் இருப்பவர்களுக்கு வெறும் 10,000 சம்பளம் கொடுத்தாலே பெரிய விஷயமாக இருக்கிறது... ஆனால் அது படம் !
நெட்பிலிக்ஸ் , அமேசான் பிரைம் , போன்ற வெப் சீரிஸ்ல ஸ்டண்ட் பண்ணும் திறன் உள்ள ஸ்டண்ட் மேன்க்கு அடிபட்டால் இன்சூரன்ஸ் பணம் கூட கம்பெனி கொடுப்பது இல்லை. கம்மியான விலைக்கு வாங்குவதை போல சம்பளம் கொடுக்கவேண்டிய பேக்ரவுண்ட் ஆக்டர்கள் மற்றும் எழுத்தாளர்களிடம் நடந்து கொள்கிறார்கள் !
இப்போ லைவ் ஆக ஒரு டெஸ்ட் பண்ணலாமா ? நான் AI இடம் சில கதைகளை எழுத சொல்கிறேன் ! எப்படி எழுதுகிறது என்று பாருங்கள் !!!
ஒரு போலீஸ் அதிகாரியிடம் ஒரு குற்றவாளி தான் பண்ணியது சரிதான் என்று வாக்குவாதம் பண்ணுகிறான், இந்த செகண்ட் உனக்கு நான் கொடுக்கும் ஒரே உரிமை அமைதியாக என்னோடு வரவேண்டியதுதான் என்று அதிகாரி சொல்லவும் குற்றவாளி கோபமாக பார்க்கிறான், "இங்க பாருங்க நான் தவறுகள் பண்ணியிருக்கேனு தெரியும் ஆனால் அதுக்காக நான் பொறுப்பு எடுத்துககொள்கிறேன்" என்று சொல்கிறான். "இப்போ பொறுப்பு எடுத்துக்கறதால் மட்டும் நீ என்ன உத்தமனா ? முட்டாள் இப்ப வரைக்கும் நீ பண்ணதுக்காக நீ கூண்டுக்குள்ள கொஞ்ச நாளாவது இருந்து பட்டதான் உனக்கு மண்டையில ஏறும்" என்று சொன்னார். "ஒரு புரஃபஷனல் என்ன பண்ணுவாங்களோ அதேதான் நீங்களும் பண்ணறீங்க ! எனக்கு புரியுது ! சட்டத்தை உடைத்தால் நான் அதுக்கான விளைவுகளை அனுபவிச்சுதான் ஆகணும் !
கடைசி 5 வரிகளை பாருங்கள் ! இது கம்ப்யூட்டர் எழுதிய வார்த்தைகள் ! அதாவது இவைகளே சாப்பாடு இல்லாமல் மனிதர்களின் வாழ்க்கையும் சேர்த்து வாழ்ந்துவிட்டால் அப்புறம் மனிதர்கள் என்ன பண்ணுவார்கள் ? இந்த கம்ப்யூட்டர் டப்பாக்கள் அதிகாரத்துக்கு வருவது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவே இல்லை ! இவைகளை பயன்படுத்தி ஜெயிப்பதால் அடிப்படை மனித தன்மையே இழக்க வேண்டிய அவசியம் வருமோ என்ற கேள்வி இருக்கிறது !
கிங்ஸ் மேன் - கோல்டன் சர்கிள் படம் முதல் நோ டைம் டூ டை படம் வரைக்கும் டெக்னாலஜியை வில்லத்தனமாக பயன்படுத்தினால் ஒரு உயிர் தப்பிக்காமல் கொல்லும் அளவுக்கு இவைகளை பயன்படுத்த முடியும் என்றே சொல்கிறது ! இது மனிதர்கள் பண்ணிய தவறு ! மனிதர்களேதான் சரி பண்ணனும் ! பணத்துக்கும் வெற்றிக்கும் ஆசைப்பட்டு முட்டாள்தனமாக AI க்களை நம்பி மனிதர்களை அவமதிக்க கூடாது !
இந்த பெரிய அளவிலான எழுத்தாளர்கள் வேலை நிறுத்தம் & சப்போர்டிங் / பேக்ரவுண்ட் ஆக்டர்கள் வேலை நிறுத்தம் நியாயமானது ! சினிமா மற்றும் பொழுதுபோக்குகளில் AI பயன்படுத்த கூடாது ! இந்த AI க்கள் என்ன வேண்டுமென்றாலும் பண்ணக்கூடிய சக்திவாய்ந்த ஜீவன்கள் ! இவைகள் உயிர் ரகசியம் கிடையாது ! நல்ல மூலிகை செடிகளை ஜெனெடிக் மோடுலேஷன் பண்ணி தயார் பண்ணிய விஷச்செடிகள் ! ஒரு செடிக்கு உயிர்த்தன்மை இருப்பதால் அந்த செடி உயிரோடு இருப்பதாக அர்த்தம் ஆகாது .
No comments:
Post a Comment