சமீபத்தில் நான் பார்த்ததில் BARBIE ரொம்பவுமே கிரியேட்டிவ்வான படம் - மேட்டல் என்ற நிறுவனத்தின் தயாரிப்பு பொம்மைகளான பார்பி மற்றும் கென் ஆகிய பொம்மைகளின் அடிப்படையில் வார்னர் பிரதர்ஸ் வெளியிட்ட ஒரு தரமான படம் BARBIE. மார்காட் ராபி மற்றும் ரேயான் காஸ்லின்க் இணைந்து நடித்து இருக்கும் இந்த படம் இந்த 2023 இன் பாக்ஸ் ஆபீஸ் நம்பர் ஒன் படம் என்றால் அதுக்கு காரணம் இருக்கிறது.
பொதுவாக BARBIE வகையில் குழந்தைகளுக்கு விளையாடுவதற்காக கொடுக்கப்படும் பொம்மைகள் மட்டுமே இல்லை. YOU CAN BE ANYTHING என்ற TAG LINE போல வருங்காலத்தில் சாதனைகளை படைக்க மோட்டிவேஷன் பண்ணவும்தான் என்பதுதான் இந்த படத்தின் மூலமாக நிரூபணம் பண்ண வேண்டும் என்பதுதான் படத்தின் நோக்கம்.
இந்த படத்துடைய நோக்கம் , KEN-BARBIE வகை பொம்மைகள் மட்டுமே இருக்கும் ஒரு ALTERNATE REALITY யில் BARBIELAND என்ற பெயருடன் BARBIE க்களுக்கான தனி உலகமே இருக்கிறது. அங்கே KEN பொம்மைகள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. இதனால் வருத்தம் அடைகிறார் RYAN GOSLING - KEN .
ஒரு கட்டத்தில் தனிப்பட்ட பிரச்சனைக்காக REAL WORLD க்கு BARBIE வரும்போது KEN ம் உடன் இந்த உலகத்துக்கு வருகிறார், அங்கே BOYS தான் உலகத்தில் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு மறுபடியும் BARBIE யின் உலகத்துக்கு சென்று அங்கே இருக்கும் KEN பொம்மைகளுக்கு எல்லாம் KEN பொம்மைகளின் நலவாரிய சங்கம் அமைத்து அந்த இடத்தின் ஆட்சியை பிடித்து விடுகிறார்.
நிஜமான உலகத்தில் இருந்து BARBIELAND க்கு வரும் BARBIE இப்போது KEN ஆட்சியில் இருப்பதை பார்த்து வாழ்க்கையை வெறுத்தே விடுகிறார் ஆனால் இப்போது அவள் தனியாக இல்லை. பூமியில் கிடைத்த நண்பர்களோடு இணைந்து BARBIELAND ஐ எப்படி மறுபடியும் மாற்றுகிறார் என்று ஸ்வரஸ்யமாக மொத்த நகைச்சுவையாக படத்தை கொடுத்துள்ளனர்.
இந்த படத்துடைய பெரிய பிளஸ் பாயிண்ட். மொக்கையான டிஸ்னி படங்களை போல பெண்களை மட்டுமே கண்ணை மூடிக்கொண்டு சப்போர்ட் பண்ண வேண்டும் என்று இல்லாமல் ஒரு ஆணும் பெண்ணும் சம உரிமையில் இருக்க வேண்டும் என்ற நல்ல கருத்தை சிறப்பாக இரண்டு பக்கமும் நியாயமாக சொல்லியதுதான். தவறான காட்சிகள் என்று எதுவுமே இல்லாததால் குடும்பத்தோடு பார்க்கலாம். ஒரு சில வசனங்கள் பயங்கரமாக யோசிக்க வைக்கின்றனர். மொத்ததில் #1 இல் இருக்க WORTH ஆன படம் . DCEU இன்னும் FLOP ஆகவே கொடுத்துக்கொண்டு இருப்பதால் WB க்கு இந்த படம் SUPER HIT ! ஆனது ஒரு நல்ல விஷயம்.
No comments:
Post a Comment