Wednesday, September 27, 2023

CINEMA TALKS - SANTHANAM'S A1 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 

 
 A1 - ஒரு நல்ல காமெடி எண்டர்டெயின்மெண்ட் படம், பொதுவாக காமெடி என்றால் துணை நடிகர்கள் ஒருவரை ஒருவர் கலாய்த்து நகைச்சுவையாக போகும்போது மெயின் நடிகர்களின் காதல் கதை என்ன ஆனது என்றுதான் அன்பே வா காலத்தில் இருந்து ஸீன்கள் இருக்கிறது. இந்த படம் இந்த ஃபார்முலாவுக்கு கொஞ்சம் ஆப்க்ரேட் கொடுத்து சென்னையில் நடக்கும் ஒரு கலகலப்பான கதையாக கொடுத்துள்ளது. காமிரா வொர்க் வேற லெவல். படத்தில் நிறைய காட்சிகளில் மிகவும் சிம்பிள்ளாக இருந்தாலும் கலர்ஸ் எல்லாம் விஷுவல்லாக பார்க்கும்போது மிக மிக அருமையாக கலர் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது . கானா பாடல்களுக்கு நிறைய ஸ்கிரீன் டைம் கொடுத்து இருக்கும் இயக்குனரை பாராட்டலாம். இந்த படத்துடைய கதை : சென்னையில் துணிக்கடை வைத்து இருக்கும் நமது கதாநாயகன் ஒரு நாளில் கொஞ்சமுமே எதிர்பார்க்காமல் சர்ப்ரைஸ்ஸாக வந்து ப்ரபோஸ் பண்ணிய கதாநாயகியை மிகவும் ஸீரியஸாக காதலிக்கிறார் . ஆனால் காதநாயகியின் அப்பா இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு கொடுக்கவே நண்பர்களோடு சேர்ந்து சுயநினைவு இல்லாமல் கதாநாயகியின் அப்பாவை பழிக்கு பழி வாங்கி பிரச்சனை பண்ண வேண்டும் என்று கிளம்பும் இவர்கள் வாழ்க்கையில் நெக்ஸ்ட் என்ன நடக்கிறது என்றுதான் பெரிய சர்ப்ரைஸ். சந்தானம் , ரெடின் கிங்ஸ்லே , எம் எஸ் பாஸ்கர் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தாலும் ஒரு சில சந்தானம் படங்கள் போல ஹீரோவுக்கு மட்டுமே மொத்த ஸ்கிரீன் டைம் கொடுத்துவிடாமல் எல்லா கதாப்பாத்திரங்களுக்கும் நிறைய ஸ்கிரீன் டைம் மற்றும் டயலாக் கொடுத்து படத்தின் கலகலப்பான டோன் கடைசி வரைக்கும் நிலைக்கும் வரை பார்த்துக்கொண்டது இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட். இதைத்தான் இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட் என சொல்லலாம் . சரியான ஸ்கிரீன் டைம் கொடுப்பதற்க்கு இன்னொரு எக்ஸாம்பிள் மெயின் ஸ்டோரிலைன் முடிந்தாலும் சப்போர்டிங் ஆக்டர்ஸ் காதப்பாத்திரங்களின் ஸ்டோரி ஆர்க் படத்தின் கிளைமாக்ஸ்ஸில் 15 நிமிடம் எக்ஸ்டென்டெட் போர்சன் கொடுக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் மாலை நேர மல்லி பூ பாடல் வேறு ரகம் , சிட்டுக்கு சிட்டுக்கு பாடல் மட்டுமே இல்லாமல் இடம்பெற்ற எல்லா கானா பாடல்கள் இனிமையாக இருப்பதோடு மட்டும் இல்லாமல் படத்தின் காட்சிகளோடு பொருந்துகிறது. ஒரு மீடியம் பட்ஜெட் படமாக இருந்தாலும் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் சரியாக ப்ரெசெண்ட் பண்ணியிருப்பதால் இந்த படத்தின் கதை சிம்பிள்ளாக இருந்தாலும் உயிரோட்டமாக இருக்கிறது.

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...