Saturday, September 23, 2023

CINEMA TALKS - THE DARK TOWER - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!



 தி டார்க் டவர் - நிறைய நேரங்களில் நல்ல படங்கள் ப்ரொடக்ஷன் வேல்யூ இருந்தாலும் கடைசியில் தயாரிப்பு நேரத்தில் உருவான பிரச்சனைகளால் ப்ரொடக்ஷன் டெவலப்மெண்ட் ஹெல் என்று அழைப்படும் ஒரு நிலைமைக்கு தள்ளப்படுகிறது இந்த வகை படத்தின் படப்பிடிப்பு பல வருடங்களுக்கு விட்டு விட்டு தொடர்வதால் முடிவில் ப்ராடக்ட் நன்றாகவே இருந்தாலும் சரியான ரிலீஸ் டைமிங் கிடைப்பது இல்லை. அந்த வகையில் இந்த படமும் இதே போன்ற பிரச்சனையை பார்த்து வந்த படம்தான் இருந்தாலும் ஒரு சின்ன மிஸ்டேக் கூட இந்த படத்தில் நீங்கள் பார்க்க முடியாது. அதனால்தான் தி டார்க் டவர் படம் ரொம்ப ஸ்பெஷல். இந்த படத்துடைய கதை - இந்த பூமி முதற்கொண்டு நிறைய டைமன்ஷன்களில் வாழும் மனிதர்கள் இப்போது மாயாஜாலக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். இந்த மாயாஜாலக்காரர்கள் தனக்கு மாயாஜாலம் தெரியும் என்பதால் மாய மந்திர சக்திகளை பயன்படுத்தி எதிர்ப்பவர்கள் அனைவரையும் தீர்த்துக்கட்டுகின்றனர். இப்போது இந்த விஷயம் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாமல் தன்னுயடைய கனவுகளில் கிடைத்த காட்சிகளை வைத்து ஒரு வெஸ்டர்ன் உலகத்துக்குள் போர்டல் மூலமாக செல்கிறான் ஜேக் - அங்கே சமீபத்தில் மாயாஜால அதிகரத்தால் குடும்பம் , நெருங்கியவர்கள் மட்டும் அல்லாமல் தன்னுடைய இனத்தின் அனைவரையும் இழந்து கவலையில் இருக்கும் வெஸ்டர்ன் மனிதர் ரொனால்ட் உதவியை கேட்டு சக்திகள் இல்லாமலே மந்திரவாதிகளின் பெரிய நெட்வொர்க்கை எதிர்த்து போராட்டம் பண்ணுகிறார்கள். கடைசியில் என்ன ஆகும் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தின் சிறந்த விஷயம் என்னவென்றால் காட்சிகளின் அமைப்பு அவ்வளவு தெளிவாக சோர்ஸ் மெடீரியல்க்கு சாதகமாக உள்ளது. தி டார்க் டவர் புத்தகத்தின் அடாப்ஷன் என்ற வகையில் எந்த குறையும் வைக்காமல் இந்த படம் வெளிவந்துள்ளது. ஐட்ரிஸ் எல்பா மற்றும் டாம் டைலர் ஒரு நல்ல நடிப்பு திறனை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் மேத்தியு மேக்கான்ஹலே இந்த படத்தின் வில்லனாக ஒரு பயங்கர மாஸ் கதாப்பத்திரம் பண்ணியிருப்பதால் ஒரு நல்ல காஸ்டிங் சாய்ஸ் இந்த படத்துக்கு பெரிய அட்வாண்டேஜ்ஜாக இருந்தது. இந்த படத்தில் சொல்லப்படும் மிட்-வேர்ல்ட் கான்செப்ட் சுமாராக இருந்தாலும் எக்ஸ்ஸிக்யுஷன் பண்ணிய விதம் பிரமாதம். கிளைமாக்ஸ் ஃபைட் ஸீன் வேற லெவல். 




No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...