இன்னைக்கு தேதி வரைக்கும் சினிமா உலகத்தில் ப்யூச்சர் லெந்த் [FEATURE LENGTH] படங்கள் மட்டும்தான் படங்கள் என்று இல்லை. நமது தமிழ் சினிமாவில் இல்லாவிட்டாலும் வெளியே நிறைய திரையுலகங்களில் ஆவணப்படங்கள் என்று சொல்லப்படும் DOCUMENTRY க்களும் பொருளாதார வெற்றியை ஈட்டி கொடுக்கிறது அதே சமயத்தில் சினிமாவின் இன்னொரு பகுதியாக ஆவணப்படங்கள் உள்ளது. இந்த வகையில் சமீபத்தில் நான் பார்த்த ஒரு ஆவணப்படம் தி சப்ட்டல் ஆர்ட் ஆஃப் நாட் கிவ்விங் அ #@%!!. இந்த படம் மார்க் மேஷன் சமீபத்திய தன்னம்பிக்கை மற்றும் மோட்டிவேஷன் கருத்துக்கள் எப்படி மற்றவர்களின் வாழ்க்கையில் பாதிப்பு கொடுக்கிறது என்றும் கற்பனையான ஒரு வேர்ல்ட்வியூவை உருவாக்கி வாழ்ந்துகொண்டு இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் உருவாகும் என்றும் அவருடைய வாழ்க்கையின் அடிப்படையில் மட்டுமே சொல்கிறார். அதாவது கண்ணை மூடிக்கொண்டு யாருடைய வாழ்க்கை எப்படி போனால் எனக்கு என்ன ? என்றும் மொத்தமாக சுயநலமாக வாழ்ந்தால் அடிப்படையில் என்ன நடக்கும் என்றும் இவருடைய கருத்துக்களை சொல்கிறார்! வலிகளை வாழ்க்கையின் ஒரு பகுதியாக அக்சப்ட் செய்ய வேண்டும் என்றும் அப்படி பண்ணவில்லை என்றால் நமக்குள் இருக்கும் குறைகளை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபத்தின் உச்சிக்கே செல்லும் ஒரு அபாயகரமான முடிவை எடுத்துவிடுவோம் என்றும் இந்த ஆவணப்படத்தில் அவருடைய கருத்தாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணப்படத்தில் இவர் சொன்ன கருத்துக்கள் கொஞ்சம்தான் என்றாலும் நன்றாகவே யோசிக்க வேண்டிய விஷயங்களாக உள்ளது. யூனிவர்சல் இது போன்ற ஆவணப்படங்களை கொண்டுவந்து ஒரு புத்தகத்துக்கான இன்னொரு பரிமாணத்தை காட்டுவது பாராட்டுதலுக்கு உரியது. இந்த படத்தில் சொல்லப்பட்ட ஒரு சம்பவம் என்னவென்றால் அமேரிக்காவில் ஒரு இளம் பெண்ணை கார் விபத்தில் சிக்கிக்கொண்டு இருந்தபோது காப்பாற்றியதால் எங்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளது என்று நஷ்ட ஈடு வழக்கு போடுகிறார்கள் இரு இளைஞர்கள் , இன்னொரு பக்கம் சாப்பாடு சரியான நேரத்தில் டேபிள்க்கு வரவில்லை என்று ரெஸ்டாரன்ட் பொருட்களை உடைக்கிறார் இந்த மனிதர், இந்த மாதிரி செயல்களுக்கு காரணம் என்ன ?
வாழ்க்கை வலியுடன் கூடியதே , நூறு வருடம் சுகமாக வலியே இல்லாமல் வாழ்வதுதான் வாழ்க்கை - இந்த கருத்தை உணராமல் பாசிட்டிவ்வாக இருக்க வேண்டும் என்று நிறைய தன்னம்பிக்கை மற்றும் அளவற்ற மோட்டிவேஷன்களால் நாம் ஸ்பெஷல் ஆனவர்கள் என்றும் உலகத்தில் எல்லாமே எனக்கு கிடைக்கும் ஆனால் அடுத்தவர்களுக்கு கிடைக்க கூடாது என்றும் ஒரு மனிதத்தன்மையற்ற அரக்கத்தனமாக கண்ணை மூடிக்கொண்டு வெற்றிகளாக குவிக்கும் மன நிலை உருவாகிறது என்றும் இப்படி நாம் பாசிட்டிவ் ஆன மக்கள் என்று நம்மையே நினைத்துக்கொண்டு இருந்தால் கண்டிப்பாக இன்னொருவர் கஷ்டத்தை புரிந்துகொள்ளாமல் நமக்குள் இருக்கும் குறைகளை மறைக்க அடுத்தவர்களை குற்றம் சாட்டிவிடுவோம் என்றும் இந்த படத்தில் சொல்லப்பட்டு உள்ளது.
இது போன்ற நிறைய கருத்துக்கள் இந்த படத்தில் இருப்பதால் கண்டிப்பாக வோர்த் அ வாட்ச் படம்தான்.
No comments:
Post a Comment