கோ - இந்த படத்தை என்னுடைய பெர்சனல் ஃபேவரட்டாக செலக்ட் பண்ண காரணம் இந்த படம் பொழுது போக்கு அம்சங்களையும் கொண்டது அதே நேரத்தில் மிகவும் தெளிவான அரசியல் கமெண்ட்டரியும் இந்த படத்தில் இருக்கும். இந்த படத்துடைய கதை.நிறைய அரசியல் காரணங்களால் தனித்து விடப்படும் இளைஞர்களின் அரசியல் கட்சியான சிறகுகள் அமைப்புக்கு ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக சப்போர்ட் பண்ணிக்கொண்டே இருக்கிறார் அஸ்வின் ! இந்த நிலையில் நிறைய எதிர்ப்புக்களை கடந்து நிறைய கடினமான முயற்சிகளை எடுத்து தின அஞ்சல் பத்திரிக்கையில் அவருடைய மொத்த சப்போர்ட்டை சிறகுகளுக்காக கொடுத்து தன்னுடைய கல்லூரியின் நண்பர்களை வருங்கால தலைவராக மாற்றும் அஷ்வின் சந்திக்கப்போக்கும் பிரச்சனைகள் என்ன ? தன்னுடைய காதலியை வரும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்ற முடியுமா என விறுவிறுப்பாக கதை நகர்கிறது. பொதுவாக அயன் படத்தில் இருந்து ஒரு ஒரு கே வி ஆனந்த் படத்திலும் ஒளிப்பதிவு மிகவும் பிரமாதமாக இருக்கும். கண்டிப்பாக வேறு எந்த தமிழ் படத்தாலும் கோ படம் போல ஒரு ஒரு சின்ன சின்ன சினிமாட்டிக் ஆங்கில்க்கும் சிம்ப்ளி பெர்பெக்ட்டான காமிரா வொர்க் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. ஸாங்க்ஸ் களில் லொகேஷன் பிரமாதமாக கட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தில் எப்போதுமே இருக்கும் கே வி ஆனந்த் மேஜிக்குக்காக கண்டிப்பாக நிறைய முறை பார்க்கலாம். வி மிஸ் யு கே வி ஆனந்த் சார் !!! ரெஸ்ட் இன் பவர் !
No comments:
Post a Comment